Bio Data !!

17 November, 2009

பௌர்ணமி இரவில் !!

மறுபடியும் அந்த நாள் ஞாபகம் !
நான் படிச்ச ஸ்கூல்ல ,எல்லா மாணவிகளையும் ரோஸ் , லில்லி ,மல்லிகை, தாமரைன்னு குரூப் பிரிச்சு இருப்பாங்க. வருடத்துக்கு ஒரு முறை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
திருவிளையாடலில் இருந்து காட்சியை நாடகமாக்கி இருந்தாங்க.தட்ஷன் நடத்தும் யாகத்துக்கு செல்ல சிவன் மறுப்பு தெரிவிக்க பார்வதி தந்தைக்கும் கணவனுக்கும் இடையே அல்லாடும் காட்சி. சிவனின் கோபம் ..... முக்கிய பாத்திரங்களில் நடித்ததவங்களை சினிமாக்கு எல்லாம் கூட்டிட்டு போனாங்க. நடிப்பு இயல்பா இருக்கணும்ல.
தட்சன் வேடத்தில் நான்.
சரியா பள்ளி விழாவும் சித்தி கல்யாணமும் clash ஆக என்னைய ஒரு விடுதியில சேர்த்து விட்டிட்டு வீட்ல எல்லோரும் ஜுட் விட்டுட்டாங்க .
புது சூழ்நிலை,மறு நாள் நாடகக் கனவு எல்லாம் சேர்த்து தூங்க ரொம்ப நேரம் ஆச்சு . திடீர்னு நாய் ஊளை இடும் சத்தம். திடுக்கிட்டு எங்கேயோனு பார்த்தா அடுத்த சத்தம் ரொம்ப பக்கத்தில. நான் படுத்திருந்த அறைக்கு உள்ளேயே .
தொடர்ந்து அடுத்த ஊளை சத்தம்.
இப்பொழுது என்னால் குரல் வரும் திசையை கொஞ்சம் அனுமானிக்க முடிந்தது. 'என்ன சத்தம் இந்த நேரம்னு 'அந்த திசையில் என் பார்வையை செலுத்தி ...........
"யம்மா" னு அலறப் போனேன். இரு கைகளாலும் வாயை அழுத்தி பொத்தி சத்தம் வராமல் இருக்க பாடுபட்டேன். அங்கே கட்டிலின் மேல் மண்டி இட்டு தலையை லேசா உயர்த்திய படி ஒரு பெண்ணிடம் இருந்து தான் வந்தது அந்த சத்தம் . வாயிலிருந்து எச்சில் ஒழுகி கொண்டிருந்தது.

மெதுவா என் பக்கத்தில படுத்து இருந்த பெண்ணை அசைத்தேன். ரொம்ப நேர முயற்சிக்கு பிறகு "என்ன?"

குரல் எழும்பாமல் என் கை காட்டிய திசை பார்த்து " நீ படு, கொஞ்ச நேரத்தில சரியாயிடும்."
இனிமே எங்கே படுக்கிறது திகில் அடித்தபடியே உட்கர்ந்திருந்தேன்.
அந்த பெண் அப்படியே சரிந்து தூங்கினாங்க.மறு நாள் என்னைப் பார்த்ததும் "என்ன ரொம்ப பயந்திட்டியா?ஒரு தடவை என்னை வெறி நாய் கடிச்சிடுச்சு. அப்போ இருந்து பௌர்ணமி அமாவாசை ஆனா இப்படிதான். இந்த கண்ராவியினால தான்நான் கல்யாணமே பண்ல." கண்களிலும் குரலிலும் ஒரு வித சோர்வு.
மறு நாள் நாடகம் முடிந்தது. அப்பா அம்மா வந்தாங்க. பார்த்த உடனே நான் ஒரே அழுகை.ஏன் அழுதேன்?
முன் தினம் பார்த்த நிகழ்ச்சியின் பயத்தாலா?
அப்பா அம்மா வை முதல் தடவை பிரிந்ததாலா?"
இந்த கண்ராவியினால ...." அந்த குரலில் இருந்த சோகம் என்னை பலமாகத் தாக்கியதலா?
விட்டு விட்டு இடைவெளியில் விசும்பிக் கொண்டே இருந்தேன்.
வீட்டில ஒரு நாய் வளக்கனும்னு ஆசை இன்னும் இருந்தது.

3 comments:

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!