Bio Data !!

21 November, 2009

கதை விமர்சனம்



ஒரு நல்ல கதை படிச்சேன். ஆனா முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை . இதை பதிவாய்ப் போட்டால் முடிவை பற்றிய பல கருத்துக்கள் கிடைக்குமே!.

கதையைப் படிங்க அப்பறம் பேசுவோம்.

கதைப் பெயர் : அச்சு இயந்திரம்

கதை ஆசிரியர் : ஜெகாதா

அகல்யா கதை நாயகி. ஒரு வெகு ஜனப் பத்திரிகையை கடுமையாக சாடும் வழக்கம் கொண்டவள். "விபச்சாரி" என்னும் சிறு கதை ஒரு பத்திரிகைக்கு அனுப்புகிறாள். அந்த பத்திரிகை ஆசிரியர் நேரில் வந்து பார்க்கச் சொல்லி தகவல் அனுப்புகிறார். நேரில் வந்ததும்
" அகல்யா என்ற முகவரித் தபாலை உடைத்தாலே தயவு தாட்சணியம் இன்றி சீறி பாயும் பெண் புலி நீதானா?" இளக்காரமாய் கேட்கிறார் ஆசிரியர்.

"விபச்சார நடிகை *** தற்கொலை செய்ததற்கு பத்திரிக்கை ஆசிரியன் தான் காரணம்னு சொல்ற மாதிரி கதை எழுதி இருக்கிற என்ன நெஞ்சழுத்தம் உனக்கு ." ஆசிரியர்.

"நடிகையோட சாவுக்கு நீங்களும் உங்க பத்திரிகையும் தான் காரணம்."அகல்யா

"இந்த செய்தியைப் போட்டது ஆசிரியரோட குற்றம்னா விபச்சாரம் பண்றது குற்றம் இல்லையா? " ஆசிரியர்.

"விபச்சாரமே தொழிலாகிப் போன சந்தையில் நடிகை என்ற காரணத்தால் அவ ஒருத்திக்குப் பின்னால் மட்டும் சுற்றி சுற்றி வட்டமிட்டது தான் காரணம். அது இந்திய கலாசாரத்தை பாதுகாக்க செய்த ஏற்பாடுன்னு என்னால நம்ப முடியல.

அவள் செய்தது விபசாரம்னா அதை உலகறியப் படுத்தி காசு சம்பாதிச்சது அதை விட பெரிய விபச்சாரம். இதை மாதிரி எனக்கு நடந்தா தற்கொலை பண்ண மாட்டேன் கொலை பண்ணுவேன்."

"நீ உண்மையிலேயே துணிச்சலானவள் தான்."

"நான் துணிச்சல் உள்ளவ தான் நீங்கள் துணிச்சல் உள்ளவர்னா உங்க பத்திரிகையில பிரசுரம் பண்ணுங்க பார்க்கலாம்."

உடல் நடுக்கத்தை மறைத்து கொண்டு வீராப்பாக வெளியேறுகிறாள் அகல்யா.

அச்சத்தில் குளிர் ஜுரம் வந்து விடுப்பு முடிந்து அலுவலகம் போகிறாள். வழியில் பத்திரிகை விளம்பரம் "விபச்சாரி , சிறுகதை அகல்யா "

இந்த நேர்மையை ஆசிரியரிடம் அவள் எதிர்பார்க்கவில்லை.

அலுவலகத்தில் எல்லோரும் அவளையே பார்ப்பது போல் இருந்தது.

தனது மேஜையில் அந்த பத்திரிக்கை. பலரும் புரட்டியதன் அடையாளமாய்

கசங்கி இருந்தது. வேகமாக புரட்டினாள்.தலை கிர்ரென்றது. அந்த கதைக்கு படமாக அவளை ஒரு ஆடவனுடன் நிர்வாணமாக. "அய்யோ அதான் எல்லோரும் அப்படிப் பார்த்தாங்களா? "

நெஞ்சமெல்லாம் தீயாக காந்தியது.

பேயோ பிசாசோ கண்டவள் போல் தலை தெறிக்க ஓடிய அகல்யா மாடியில் இருந்து அப்படியே தலை குப்புற விழுந்தாள்.

அகல்யா செய்தது சரியா?

அவள் வேறு என்ன செய்திருக்கலாம்?

படிக்கிறதோட விட்டுடாம கொஞ்சம் பின்னூட்டமும் போடுங்களேன்.














12 comments:

  1. நான் புரிந்துகொண்ட வரையில்... கதைப் படி, அகல்யா ஒரு சராசரிப் பெண் என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறாள்...

    மற்றபடி அவள் தற்கொலை எண்ணத்தை தவிர்த்திருக்கலாம்... சில வீர வசனங்கள் எல்லாம் நடைமுறைக்கு உதவாது சரியான சப்போர்ட் இல்லாவிடில்...

    ReplyDelete
  2. //அகல்யா செய்தது சரியா?
    அவள் வேறு என்ன செய்திருக்கலாம்?//

    //விக்ரமன்-ன்னா.. பத்திரிகை ஆபீசுக்கு அகல்யா போய் அரைமணிநேரம் பெண்ணியம் பத்தி பேசுறா....அதுல ஆசிரியர் திருந்தி அகல்யாவ காதலிக்கிறார்..
    ஒரு டூயட்டு.."பொம்பளைங்க காதல் ஒன்னும் மோசமில்லைங்க".....//

    //அப்பால.,K.S.ரவி குமார் வாராரு.., அந்த ஆசிரியர பழிவாங்குற வரைக்கும் இனி கதை எழுத போறது இல்ல-ன்னு ரூம்ல போய் கதவ சாத்திகிச்சு அம்மணி....
    18 வருஷம் கழிச்சு பழி வாங்குறா..அங்க ஒரு பாட்டு போடுறோம்.. “"மின்சார கண்ணா"’’//

    //அப்புறம் S.J.சூர்யா பாக்கியராஜ் சேந்து வர்றாக..…
    அந்த பத்திரிக்கையோட அட்ட படத்துல ஆசிரியர நிர்வாணமா போடுது அம்னி..,இப்போ பாடுது அம்னி..ஆறரை கோடி பேர்களில் ஒருவன்..அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்.. //
    பின்னாடி பாலசந்தர் பாரதிராசா வர்றாக,,,,ஓடுங்க.

    ReplyDelete
  3. Sivaji Sankar Said:

    ரெண்டுபேரு மேலயும் தப்பு இருக்கு...
    ஒரு பொறுப்பாசிரியர் பொறுப்பில்லாம நடந்துக்கவும் கூடாது..,
    துணிச்சலா தன்ன காட்டிகிட்டு அகல்யா இப்படி நடந்துக்கவும் கூடாது..எதுக்கு போலீசு., கோர்ட்டு எல்லாம் இருக்காம்..
    ஒன்னு தெரியுதுங்க..
    "ஆத்திரத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறானது..."

    ReplyDelete
  4. சிவா
    பாரதிராஜா, பாலசந்தர் வர்றாங்க ஓடுங்களா?
    உங்களுக்கு நிச்சயம் வயது 25க்குள் தான் இருக்கும். சரியா?
    எனக்கு கொஞ்சம் ஜோசியம் தெரியும்.

    ReplyDelete
  5. இப்படிப்பட்ட தாக்குதல் வரும்போது புத்திசாலி பெண்ணும், சராசரி பெண்ணும் ஒரே நிலைதானு ஆசிரியர் சொல்ல வரார். ஆனால் இந்த முடிவு கொஞ்சம் தைரியமாக இருக்க நினைக்கும் பெண்ணையும் மழுங்க வைத்து விடும்னு நினைக்கிறேன். நன்றி மணிகண்டன், அன்புடன்



    u

    ReplyDelete
  6. இப்படிப்பட்ட ஆண்களால் தான் பெண்கள் இன்னமும் தைரியமாக வெளியே வர முடிவதில்லை ஆனாலும் அகல்யா இப்படி தன்னை முடித்திருக்க வேண்டாம்

    ReplyDelete
  7. chellamma
    agalya thannai mudithirukka koodathu enpathu thaan en ennamum. nandri

    ReplyDelete
  8. இந்தப்பின்னூட்டம் "நாய்க்குட்டி மனசு" எனும் அழகிய பெயரை தேர்வு செய்தமைக்காக.

    ReplyDelete
  9. நன்றி நிலாரசிகன்,
    அப்படியே கதை பற்றிய உங்கள் எண்ணத்தை சொல்லி இருக்கலாமே

    ReplyDelete
  10. அகல்யா நேரா போய் அந்த பத்திரிகை ஆசிரியரை செருப்பால அடிச்சிட்டு, கொலை பண்ணியிருக்கலாம்.
    வார்த்தைகள் கொஞ்சம் வேகமாக வந்து விட்டது,மன்னிக்கணும்.ஆனாலும் நான் சொன்னதில் தவறில்லை.

    ReplyDelete
  11. nandri poongundran !
    ungal kavithai paarthen. nalla irukuthu. oodal, koodal, thedal ellam konjam konjam irupathu than kavithaikkum alagu,kathalukkum alagu.

    ReplyDelete
  12. ava ippadi panni irukka koodathu..

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!