Bio Data !!

12 December, 2009

அழகான பெயர்கள் !!

வரலாற்றின் பக்கங்களில் திடீர்னு சில பெயர்கள் அழகா செதுக்கப்பட்டிடுது. அன்று ஹிதேந்திரன் போல ; இன்று சுகந்தி போல.
சுகந்தி -சாதாரண பெயர்;
சாதாரண குடும்பம்;
சாதாரண பெண். ஆனால் செய்திருப்பது அசாதாரணமான காரியம். தன் உயிரின் கடைசித் துளி வரை பிறருக்காக வாழ்வது.
இளம் சிட்டுக்களின் மரணத்திற்கு காரணமான டிரைவர் செய்த தவறு, செல் போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது. கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தோம்னா இன்றும் அந்த தப்பை நம்மில் பலர் செஞ்சிக்கிட்டு தான் இருக்கோம். அவன் செய்த மன்னிக்க முடியாத குற்றம் ஓடி மறைந்தது தான். அவன் பங்குக்கு 10 பேரைக் காப்பாற்றி இருந்தால் இன்னும் பத்து மழலைகள் மலர்ந்திருக்குமே. மாட்டினா அடி பின்னிருவாங்கன்னு தான் ஓடிட்டான். அடிக்கட்டுமே ; சாகடிக்க மாட்டாங்களே !
இரண்டு விஷயம் சொல்லணும். ஒண்ணு செல்லில் பேசறவங்களுக்கு; இன்னொண்ணு கூப்பிட்ரவங்களுக்கு . எனக்கு ஒரு பழக்கம். வாகனத்தில் ஏறிட்டேன்னா யார் அழைத்தாலும் செல் எடுக்க மாட்டேன். உயர் அதிகாரிகள் திடீர்னு அழைக்கிற பணி என்னுது. இருந்தாலும் போக வேண்டிய இடத்துக்கு போய் தான் பேசுவேன். ஆரம்பத்தில "கூப்பிட்டேன் பேசலையேனு " சொல்வாங்க அப்பறம் புரிஞ்சிக்குவாங்க. முடிந்த வரை செய்து பார்ப்போம்

இன்னொண்ணு யாரை செல்லில் கூப்பிட்டாலும் இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து டிரைவிங்கில் இருந்தா பிறகு பேசுறேன்னு வைச்சிடுவேன். தலை போகிற காரியத்துக்காகப் பேசுறது ரொம்ப கொஞ்சம் பேர் தான். மீதி உள்ளவங்க இப்படிச் செய்யலாமே!

" கண்ணா ! நான் சொல்றதைத்தான் தான் செய்வேன், செய்றதைத்தான் சொல்வேன். ஹா! ஹா! ஹா! "33 ஆண்டுகள் (1976- அபூர்வ ராகங்கள்) முடிந்தும் ஆறு முதல் நூறு வரை தன் இடத்தைக் கெட்டியாக பற்றிக் கொண்டிருக்கும் திரு ரஜினிகாந்த் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

15 comments:

  1. //மாட்டினா அடி பின்னிருவாங்கன்னு தான் ஓடிட்டான். அடிக்கட்டுமே ; சாகடிக்க மாட்டாங்களே !//

    அப்படியே செத்தாலும் நாலு உயிரை காப்பாத்தின மனநிறைவோடு சாகலாம்

    ReplyDelete
  2. உங்களுக்கும்,சூப்பர் ஸ்டாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.. தலைவருக்கு வாழ்த்துக்கள்..
    :)

    ReplyDelete
  4. //டிரைவிங்கில் இருந்தா பிறகு பேசுறேன்னு வைச்சிடுவேன்// நல்ல பழக்கம்..

    ரஜினிகாந்த்-க்கு belated wishes ;)

    ReplyDelete
  5. தப்பி ஓடினாலும் குழந்தைகளின் மரணம் அவன் வாழ் நாள் வரை துரத்தும். நன்றி சங்கர்

    ReplyDelete
  6. நன்றி பூங்குன்றன்
    நன்றி மணிகண்டன் ; சென்னை வாசிகளே ! புத்தக வெளியீடு எப்படி இருந்தது ??

    ReplyDelete
  7. வாகனத்தில் ஏறிட்டேன்னா யார் அழைத்தாலும் செல் எடுக்க மாட்டேன். உயர் அதிகாரிகள் திடீர்னு அழைக்கிற பணி என்னுது. இருந்தாலும் போக வேண்டிய இடத்துக்கு போய் தான் பேசுவேன். ஆரம்பத்தில "கூப்பிட்டேன் பேசலையேனு " சொல்வாங்க அப்பறம் புரிஞ்சிக்குவாங்க. முடிந்த வரை செய்து பார்ப்போம் \\\\\\ மிகச் சரி.

    ReplyDelete
  8. புத்தக வெளியீடு எப்படி இருந்ததா??
    சூப்பர் போங்க.. நெறைய பேர் பதிவிட்டிருக்காங்க பாருங்க..

    http://jackiesekar.blogspot.com/2009/12/blog-post_11.html
    http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_13.html
    http://www.karkibava.com/2009/12/blog-post_14.html

    ReplyDelete
  9. நல்ல பழக்கம். இனி, மற்றவர்களும் பின் பற்றினால் ............. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நன்றி தமிழ் உதயம்.
    மணிகண்டன் சென்னை அல்லாதவாசிகளின் காதில் புகை வருகிறது தெரிகிறதா.?

    ReplyDelete
  11. welcome to my blog chitra.நானும் நெல்லைவாசிதான்.
    உங்கள் blog இல் குறிப்பிட்ட மேரி கமலம் மிஸ்ஸிடம் நானும் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. தங்கள் வரவு நல்வரவாகுக சித்ரா
    நல்ல பழக்கம் நாமே ஆரம்பிச்சு வைப்போமே.

    ReplyDelete
  13. நல்ல பதிவு..இதை பத்தி என்னோட ப்லாகிலயும் எழுதிருக்கேன்... :)
    ஆனா !!!!!!!!!!!!!

    ReplyDelete
  14. நன்றி கிருத்திகா நீங்களும் நம்மள மாதிரி ரஜினி fan தான் போல.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!