Bio Data !!

18 December, 2009

அப்பாவுக்கு அஞ்சலி !!

அன்று 18.12.????

குருவி , கூடுகட்டி குஞ்சு பொரித்ததுபோல் அழகான குடும்பம்.

குடும்பத் தலைவன் கல்லூரிப் பேராசிரியர்

தலைவி பள்ளி ஆசிரியை.

பெண் குழந்தைகளை செலவாக நினைக்காமல் அன்பைக் கொண்டு வரும் வரவாக நினைத்ததால் மூன்று பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு பதினைந்து வயது. அதற்கு கீழே நண்டும் சிண்டுமாய் இரண்டு பூந்தளிர்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் வரப் போகும் பண்டிகைக்காக வாங்கிய துணி மணிகளை பிரித்து பார்த்து சந்தோஷத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆளாளுக்கு தனி அறையில் படுக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. ஒரே அறையில் ஒருவர் மேல் ஒருவர் கையோ காலையோ போட்டுக் கொண்டு பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவில் திடுமென்று எழுந்த பேராசிரியர், " லில்லி, லைட் போடு , யாரோ வீட்டுக்குள்ள வந்திட்டான். நான் பிடிச்சிருக்கேன்." னு சத்தம் போட்டார். மெல்லத் தடவி தடவி நடந்து விளக்கைப் போட்டதும்" என்னங்க, உங்க கையவே பிடிச்சிட்டு இருக்கீங்க."செயலிழந்து போன இடக் கையை வலது கையால் பிடித்துக் கொண்டிருந்த பேராசிரியர்," என்னது, என் கையா?" அது தான் அவர் தெளிவாகப் பேசிய கடைசி வார்த்தைகள்.

"ஏய் ! எழுந்திரு " தனது மூத்த மகளை எழுப்பினாள்

" வேண்டாம் எழுப்பாதே,பயந்திரும்."மெல்லிய குழறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.

"ஏய்! joe ! எழுந்திரும்மா அப்பாவுக்கு என்னமோ செய்யுது."

அந்த நேரம் பேராசிரியர் ஓவென்ற சத்தத்தோடு வாந்தி எடுத்தார்.

அந்த சத்தத்தில் எழுந்த joe "ஐயோ அம்மா , அப்பா ரத்தமா வாந்தி எடுக்கிறாங்க. "

தன் பயத்தை தன்னுள்ளே மறைத்த படி " இல்லம்மா, ராத்திரி சாப்பிட்ட பொங்கல் தான். நீ ஓடு . சின்ன பக்கெட் ஒன்னு எடுத்திட்டு வா. "

அடுத்து அடுத்து எடுத்த வாந்தியில் பக்கெட் நிறைந்தது. " பத்திரமா இருந்துக்க. அம்மா போய் டாக்டரைக் கூட்டிட்டு வந்திர்றேன். " அந்த நள்ளிரவில் பயமும் பதற்றமுமாக ஓடினாள் தாய்.

குருவிக் கூட்டில் எழுந்த படபடப்பில் எழுந்த இளையவள் " என்னக்கா? "

" ஒண்ணுமில்ல நீ தூங்கு" அந்த பதினைந்து வயது தாய்மை யோடு சொன்னது.

விரைந்து வந்த டாக்டர் நாடி பிடித்து பார்த்ததுமே," டீச்சர், government hospital கொண்டு போயிருங்க . ரொம்ப serious ஆ இருக்கு. "

"டாக்டர் எதாவது செய்ங்க." நாற்பது வயதில் அகாலமாய் இறக்கப் போவதை உணர்ந்த டாக்டர் தான் சொன்னதையே வலியுறுத்தி விட்டு போய் விட்டார்.

அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேர " நாலு பேர் " சேர்ந்து பேராசிரியரைத் தூக்கினார்கள். அந்த கனம் தாங்க முடியாமல் படிகளில் வைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டு மறுபடியும் தூக்கி கார்ல வைத்து மருத்துவ மனைக்கு விரைந்தார்கள்.

"டாக்டர், எங்கப்பாவுக்கு என்னாச்சு."

ஏதேதோ சொன்னார். விளங்கியது , மூளையின் நாளங்களில் உள்ள ரத்த குமிழ்கள் வெடித்து சிதறி விட்டனவாம். உடம்பின் எல்லா வாயில்களிலும் ரத்தத்தின் வெள்ளோட்டம்.

"டாக்டர் எங்கப்பா வுக்கு சரியாயிரும்ல. "

"jesus ட்ட வேண்டிக்க. ரத்தம் வர்றது நின்னுட்டா காப்பாத்திர்றலாம். "

ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது.

குருவிகளின் சில்லிட்ட அலறல் தொடங்கியது.

"மேடம் , நீங்க professor ரத்தினம் மக தானே?" நினைவுகளில் இருந்து கலைந்தாள் joe. "Sir, நீங்க?""உங்க அப்பா இறந்தப்போ நான் house surgeon பண்ணிட்டு இருந்தேன். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி அது. எத்தனை ஆண்டுகள் ஆகிடுச்சு. ஆனா உங்க முகம் மனசில அப்படியே பதிஞ்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்மா . அம்மாவை நான் விசாரிச்சதா சொல்லுங்க . என்னைத் தெரியாது. இருந்தாலும் சொல்லுங்க. "அலுவலகப் பணியில் கவனத்தை திருப்பி சொன்னாள்

" சொல்லுங்க sir, what can i do for u? "

13 comments:

  1. ”ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது. ”
    இதுக்கு என்ன சொல்றது? எழுதனத பாராட்டுறதா? அதுல உள்ள பொருளுக்கு வருத்த படுறதா? என்னமோ போங்க.. மனச தொட்டுட்டீங்க...

    ReplyDelete
  2. //"jesus ட்ட வேண்டிக்க. ரத்தம் வர்றது நின்னுட்டா காப்பாத்திர்றலாம். "
    ”ரத்தம் வர்றது நிக்கல. ஆனா மூச்சு வாறது நின்னுட்டுது. ”//

    அம்மா இது உங்களோட மிகசிறந்த பதிவு..
    நல்ல உருக்கமானவரி.. கருணை உள்ளங்களில் கனணீர்வரும்..!! :((

    ReplyDelete
  3. நன்றி மயில்
    நன்றி அண்ணாமலையான் ; தங்கள் வரவு நல்வரவு ஆகுக!
    நன்றி சிவா, சில நிகழ்ச்சிகள் சில நேரங்களில் நிகழ்வதாலேயே அபாயமானதாகி விடுகிறது.
    நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  4. Akka, Ivlo azhaha eluthi irukeengale-nu paaraata thondrinaalum, ivalavu varudangal kalithum vungal vadu-vai ninaithu romba varuthamaaha irukku. When you can remember in such detail, does time really heal?!?

    ReplyDelete
  5. what can i say .....:(((( so touching..

    ReplyDelete
  6. நன்றி மணிகண்டன்
    நன்றி பலா பட்டறை
    நன்றி RJ . out of sight ; out of mind எல்லாம் சும்மா

    ReplyDelete
  7. yeah,Roofi,fantasticma.Ivallavu varusham anapiragum,nethu nadandhappola solli irukkea.Iwas moved much.Carry onma.ALL THE BEST.

    ReplyDelete
  8. my dear mary
    thank u. எனக்கு நேற்று நடந்தது போல் தான் இருக்குது.

    ReplyDelete
  9. Dear Sister,My heart has become heavy after reading Appavukku Anjali. I was a student of your father during 1969-72. He was my first inspiration in life. He was an ideal teacher. Even now I mention his name to my students on Teacher's day. I also know what an affectionate father he was. I am sure he will be blessing you all from heaven.
    Anbudan Elango

    ReplyDelete
  10. thank u sir
    i am much obliged. i feel the purpose of posting in my blog is already attained.
    he is such a gem of a man that the wounds are still fresh, thank u again

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!