Bio Data !!

04 December, 2009

நரமாமிச ரசனை !



இந்த படத்தில இருக்கிற குழந்தை அழகா இருக்குதில்லை.

ஆனா நான் இந்த படத்தை பற்றி சொல்ல போற விஷயம் அவ்வளவு அழகா இருக்காது. என்னனு கேட்கிறீங்களா. சொல்றேன்.

இது பாப்பா இல்லை பாப்பா வடிவுல இருக்கிற கேக் தானாம்.

ஒரு மகராசிக்கு தான் இப்படி தோணி இருக்குது.

almondஉடன் சீனியும் சேர்த்து அதோட கேக் செய்ய தேவையான எல்லாம் சேர்த்து ரொம்ப இயல்பா செய்றதா நினைச்சு ஒரு அம்மணி செய்த கேக் தான் இது.

அதில ரொம்ப இயல்பா செய்திருக்கிறதா பீத்தல் வேற.

இதை எப்படி சாப்பிடுவாங்க ன்னு நெனைச்சு செய்தாங்களோ !

இப்படி இருக்குமோ. அடி மனசில இருக்கிற நர மாமிச பட்சிணியின் உந்துதல் இப்படி செய்ய தூண்டி இருக்குமோ.

எனக்கு அந்த அம்மாவை பார்க்கணும் போல இருக்குது.

பார்த்து "நீ நிஜமாவே பொம்பள தான தாய்" னு கேட்கணும்.

யாருக்காவது அம்மணிய தெரிஞ்சு இருந்தா ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்க . அடுத்த நிமிடம் அங்கே இருப்பேன்.

வேலை முடிஞ்சு, internet கிடைச்சு பக்கம் தரிசனம் கொடுத்து பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்து போகுது. எப்படித்தான் தான் தினம் எழுதுறீங்களோ .

முடியல்ல (இதை வடிவேலு குரலில் படிக்கவும்)

விரைவில் சந்திப்போம்....

6 comments:

  1. விதை நெல்லு, கள்ளிப்பால் கொடுத்து கொழந்தைய சாகடிக்கிற சமுதாயத்துல பொம்மைக்கு பரிதாபப்படுவது தாய் மனசு..
    அது உங்ககிட்ட இருக்கு..

    பேசாம உங்க வலைப்பூவ நாய்க்குட்டி மனசுக்கு பதிலா., தாய்மனசுன்னு மாற்றிடுங்க... :)

    ReplyDelete
  2. 'நரமாமிச ரசனை' பகீர் தகவல்.வித்தியாசம் என்கிற பெயரில் கண்டதை பண்றதுக்கு ஒரு கும்பலே இருக்கு போல.

    //வேலை முடிஞ்சு, internet கிடைச்சு பக்கம் தரிசனம் கொடுத்து பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்து போகுது. எப்படித்தான் தான் தினம் எழுதுறீங்களோ .//

    ஆமாங்க. அனேகமா எல்லோருக்கும் இந்த கஷ்டம் இருக்கும்ன்னு நினைக்கிறன்.நாம நினைச்சதை தினமும் தானா எழுதி அப்லோட் பண்ணறா மாதிரி எதாச்சும் ஒரு சாப்ட்வேர் கண்டுபிடிச்சா நல்லாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  3. nandri poongundran
    unga per romba alaga irukku
    ninaichathai thaana eluthitta villangama agidatha?
    ninaikirathu veliyila theriyalanu thane naatila romba per romba nalavanganu sollitirukkom,
    chumma nagaichukkuthaan.
    nandri -naaikutti manasu

    ReplyDelete
  4. Intha photo COMPUTER GRAPHICS aga thaan irukkum.
    enna na. Intha alvu orginala ah. Chocolate pandrathu romba romba kastam.
    &
    Photo 7,8 yrs ah irukku. Ungaluku vantha msg than wrong ah irukkalam. Intha photo 7yrs b4 irunthu ennoda system la vaichu irukken.
    r chumma kindala choc nu yarvathu comment panni irupanga

    ReplyDelete
  5. நன்றி சேது
    அது கிராபிக்ஸ் ஆக இருந்தால் மிகவும் நல்லது
    இருந்தால் கூட அப்படி ஒரு கிராபிக்ஸ் கற்பனை பண்றது எவ்வளவு கொடூரம்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!