Bio Data !!

09 January, 2010

ஓடிப் போலாமா!!

மூன்று நண்பர்கள் ஒரு இடத்தில சேர்ந்தாங்க. "நான் நிறைய வெளி நாட்டு ஸ்டாம்ப்ஸ் சேர்த்திருக்கேன் " சொல்லி ஒருவன் அழகான ஆல்பம் ஒண்ணக் காட்டினான். அடுத்தவன் "நான் நிறைய நாணயங்கள் சேர்த்திருக்கேன்" னு சொல்லி ஓட்டபோட்ட செப்புக் காசிலிருந்து பல நாட்டு நாணயங்களைக் காட்டினான். மூன்றாமவன் சொன்னான் " உங்களுக்கு எல்லாம் நாட்டு பற்றே இல்ல. நம்ம நாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி. அதனால அவர் படம் போட்ட ரூபா நோட்ட சேக்கலாம்னு பார்த்தாஒரு பய தர மாட்டேன்றான் ."
இப்படி ஒவ்வொருத்தரும் பணத்த எப்படி சேக்கலாம்னு யோசிக்கிறதில ஒருத்தன் " நகரத்த மேம்படுத்த " புறப்பட்டான். இப்போ அடுத்தவன் காச அள்ளிகிட்டு புறப்பட்டுட்டான்.
கொஞ்ச வருஷம் முன்னால "ரமேஷ் கார்ஸ்" ஒரு ஆபீஸ் எங்க அலுவலகம் பக்கத்தில வந்தது. ஆளுயர குத்து என்ன ,அலங்கார இருக்கைகள் என்னனு சும்மா சோக்காத்தான் இருந்தது. இந்தியா முழுவதும் ஆரம்பிச்சிருக்கானே இவன் ரொம்ம்ம்ப நல்லவனா இருப்பான்னு நினைச்சு எல்லோரும் பணத்த கொண்டு கொட்ட ஆரம்பிச்சாங்க. திடீர்னு யாரோ ஒருத்தர் சந்தேகப்பட்டு தான் போட்ட பணத்தை எடுக்க ,( நாம தான் போட்டாலும் ஆட்டு மந்தை; எடுத்தாலும் ஆட்டு மந்தையாச்சே) நிறுவன அதிகாரி தலை மறைவாக எல்லோரும் போய் கிடைத்த பொருளை கொண்டு போய்ட்டாங்க.நிமிடப் பொழுதில் அலங்கார அலுவலகம் சூன்யமானது.
பணத்தை செலவழிப்பதிலும் சேர்த்து வைப்பதிலும் பல வகை மனிதர்கள்
இருக்காங்க. சிலர் கடுமையா உழைத்து சேர்த்து ,செலவு பண்றதை யோசிச்சு படிப்படியா தன் குடும்ப காரியங்கள முடிப்பாங்க. அகலக் கால் வைப்பது இல்லை . முதல் தரமானவங்க.
சிலருக்கு உழைப்பும் சுமார் தான். இவங்க கைல இருக்கும் பணமே பெரும் சுமை. இந்தக் கையில வாங்கணும் அந்தக் கையில உடனே செலவழிக்கணும். திடீர்னு எதாவது செலவு வந்தா நோ துரு துரு. ஒன்லி திரு திரு.
மூணாவதா வர்றான் நம்மாளு. கஷ்டப்பட்டு காசு சேர்ப்பான். பொண்டாட்டி பிள்ளைகளுக்கு செலவழிக்க அப்படி யோசிப்பான். ஆனா மொத்தமா தொலைப்பான். அப்படிப்பட்டவனை நம்பி தான் இப்படி நிறுவனங்கள் நாளும் ஒண்ணு முளைச்சிக்கிட்டு இருக்கு.
எத்தனை வகை ஏமாற்று நிறுவனங்கள். போட்ட தொகை குறுகிய காலத்தில் இரு மடங்காகும். e- business இல் பொருள்கள் வாங்கி விற்க விற்கத் தொகை ஏறும். இயல்பாய் பார்க்க வேண்டிய வலையுலகை வலுக் கட்டாயமாய் பார்க்க வைத்து அதன் மூலம் வியாபாரம். வித விதமாய் வியாபாரம். வித விதமாய் ஏமாற்று. எத்தனை குடும்பங்கள் நடுத் தெருவில். வேண்டாம் நண்பர்களே, வேண்டாம்,பணம் எந்த சுலப வழியில் வந்தாலும் வேண்டாம். அடிக்கிற சுனாமியில் நாம மட்டும் தப்பிச்சிருவோம்னு நினைச்சு பல தவறுகள் செய்யறோம். இது பணத்தோட மட்டும் போறதில்லை. பல இடங்களில் உயிரையும் சேர்த்து காவு வாங்குது. மனைவி மக்கள் என பலரையும் சேர்த்து பழி வாங்குது.
விட்டு விடுவோம் இந்த விபரீத விளையாட்டை. ..

10 comments:

  1. சரியா சொல்லியிருக்கீங்க பாஸ்...!

    ReplyDelete
  2. சரிதான், ஆசை யார விட்டுச்சு..? எல்லாருக்கும் குறைஞ்ச காலத்திலேயே பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசைதான்..
    இதை சாதகமாக்கிக்கொள்ளும் சில விஷமிகளுக்கும் அதே ஆசை தான். மொத்தத்தில் பார்த்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தலையில துண்டு..!

    ReplyDelete
  3. பேராசை பெருநஷ்டம். வாழ்க்கையின் அரிச்சுவடியே இது தான். எல்லாமே தெரியுது. ஆனால் ஏமாற ஆசைப்பட்டா என்ன தான் பண்றது.

    ReplyDelete
  4. நன்றி அண்ணாமலையான்!
    நன்றி வசந்த், பிரியமுடன், அது சரி பாஸ் க்கு பெண்பாலும் பாஸ் தானா?

    ReplyDelete
  5. நன்றி சிவா,எவ்வளோவோ பேர் ஏமாறுறாங்க ,இருந்தும் நாம மட்டும் ஏமாற மாட்டோம்னு நினைக்கிறாங்களே அது தான் வருத்தம்.

    ReplyDelete
  6. நாம் ஆரம்பிக்கலாம், தமிழ் உதயம் , நம்மால் முடிந்த அளவு தடுப்போம்.
    r u cheerful now?

    ReplyDelete
  7. Akka, neenga solra antha point romba valid. Aayiram per oru thappa senju athunaala kashta padurathai paarthaalum, we still convince our self that it will not happen to us.. Not just related to these scams, but in general in so many aspects of life.. Thanks for reminding us of that.

    ReplyDelete
  8. thank u rj
    keep reading; u will have a touch with our nations incidence

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றிங்க.....

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!