Bio Data !!

14 January, 2010

பாரெங்கும் பொங்கல் திருவிழா !!

பொங்கல் தமிழர் திருவிழான்னு சொல்லிட்டிருக்கோம். ஆனா இப்ப அந்த திருவிழா பாரெங்கும் கொண்டாடப்படுது. பொங்கல் ஆந்திராவிலும் இருக்கு . அமெரிக்காவிலும் இருக்கு. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கும் இந்தியன் மெனு தான். பொங்கல். கத்தரிக்கா சாம்பார்,காஞ்சிபுரம் இட்லி, வடை, இத்யாதி, இத்யாதி. ஆனால் அவர்கள் ஒரு மாதம் முன்பே பொங்கல் திருவிழாவுக்கு யார் யாரை அழைப்பதுன்னு முடிவு செஞ்சுடுறாங்க. அழைக்கிற லிஸ்ட்ல அமெரிக்கர்களும் இருக்கிற மாதிரி பார்த்துக்கிறாங்க. அவங்க கலாச்சாரங்களை இவங்க எடுத்துக்கிற மாதிரி நம்ம கலாசாரத்தை அவங்களுக்கு அறிமுகம் படுத்துறாங்க. ஆனா இங்கே நம்ம யாரையும் அழைப்பதும் இல்லை, யார் வீட்டுக்கும் போறதும் இல்லை. அப்பாடா! பொங்கிய பொங்கல் மூணு நேர சாப்பாட்டுக்கும் ஆச்சுனு அக்கடா னு டிவி முன்னாடி சாஞ்சுடுறோம்.
பொங்கல்னதும் கரும்பும் பானையும் போடாம கோலம் படம் போட்டது ஏன்? படிக்கிற காலத்தில கோலம் போடுறதுனா அப்படி ஒரு கிரேஸ். தெரு முழுதும் கோலம் போட்டு போற வார எல்லோரையும் "பார்த்து, பார்த்து தள்ளிப் போங்க" னு மிரட்டினது அந்தக் காலம். அப்படி மிரட்டின ஒருவர் தான் இன்று வீட்டுக்குள்ள இருந்து மிரட்டிட்டு இருக்கார். (சும்மா செல்லமாத் தான்)
திருமணம் ஆன பிறகு " அக்கா! கொஞ்சம் சின்னதா போடுங்க. அந்த அளவுக்கு இல்லையேனு எங்க வீட்ல திட்டறாங்க." அது ஒரு காலம். வேலைக்குப் போனபிறகு சுதந்திர தினத்துக்கு அதிகாலையிலே போய் அலுவலக வாசலில் கோலம் போட்டதுக்கு நாட்டின் மேல் கொண்ட பற்று தான் காரணம் நம்புங்கப்பா.
இப்போ உடம்பு ஒத்துழைக்க மாட்டேன்னுது. இருந்தாலும் பிள்ளைகளோட கூட்டணி போட்டு எப்படியோ ஜெயிச்சிறது.
வெளி நாடுகளிலும் நம்ம மக்கள் இன்னும் கோலம் போடுறதை விட்டுடாம இருக்காங்க. என்ன , நாம அரிசி மாவில கோலம் போடுவோம். அவங்க அரிசியிலேயே போடுறாங்க. ஒரு வகையான தட்டையான அரிசியைப் பரப்பி இடையிடையே கலர் கலரான பருப்பு பயறு வகைகளைப் போட்டு ரங்கோலி போல பூஜை ரூமில போட்டுகிறாங்க.
அறுவடைத் திருநாளாய் பொங்கலை அகிலமெல்லாம் கொண்டாடுறோம் . வெவ்வேற பெயர்கள்ல. இங்கே பொங்கல் என்ற பெயரில்.
இவ்வளவு சொல்லிட்டு இதை சொல்லாம போனா எப்படி. பொங்கல் வைக்கிறப்போ ஒரு சின்ன மாறுதல் செய்வேன். சூப்பரா இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்.(பார்க்க சொல்லுங்களேன்) நாலு டம்ளர் தண்ணீ ஊற்ற வேண்டிய இடத்தில மூணு டம்ளர் தண்ணியும் ஒரு டம்ளர் பசும் பாலும் சேருங்க. மிளகு சீரகம் நெய்யில் வறுத்து காஸ் அணைத்த பிறகு கடைசியில் சேருங்க. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்களேன்.
பொங்கலோ பொங்கல் !!
பொங்கலோ பொங்கல் !!

5 comments:

  1. Ellorukkum Pongal Nazhvaazhthukkal!!!
    Aruvadai-ai elaarum kondaadinaalum, Pongal-nu solrappa I feel very sentimentally attached, athu thamizhar-ku mattumey vuriya thiru vizha-nu.Ivlo azhaha antha kaalathula (at least for me) nadantha kolam competitions pongal elaathaiyum elluthinathukku romba nandri akka. Malarum nianivugal.. :-) Neenga twist-a mattum soleetinga, konjam full recipe-ayum sonna naangalum try panni paappom. :-)

    ReplyDelete
  2. கொஞ்சம் தமிழ்ல ட்ரை பண்ணுங்க RJ
    california எப்படி இருக்கு?
    பொங்கல் எப்படி செய்றதுன்னு கேட்கிறதுல ஏதும் உள்குத்து இல்லையே?
    செய்முறை தனியா மெயில் பண்றேன்.

    ReplyDelete
  3. உங்கள் சிறுகதையை படித்துவிட்டேன். நாய்க்குட்டி மனசு. விடலைகளின் காதல் போன்று துவங்கினாலும், நிஜமான காதலாய் பயணித்து, நேர்மையாக வாழ்வின் அர்த்தங்களை- அதாவது அன்பினை சொன்ன சிறந்த கதை.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!