Bio Data !!

27 January, 2010

மடல் விரித்த மலர்கள்!

இந்திய நாட்டுக்கு இயற்கை அரணாய் இருக்கும் இமய மலை இன்று சூரியக் கோபத்துக்கு ஆளாகி அழுதுகொண்டு இருக்கிறது . அது உருகி உருக்குலைந்து கொண்டு இருப்பதோடு கடல்களில் சீற்றம். இயற்கை அழியும் அபாயம். காலச் சுழற்சிகளில் மாற்றம். "பனி தொடங்கியதால் மழை நின்றது " என்ற அந்தக் கால நம்பிக்கைகளைப் பொய்க்க வைத்து திடீர் மழை பனியுடன் கூடி. யாரைப் பார்த்தாலும் காதுகளுக்கு கதவு போடத் தொடங்கி விட்டார்கள். சின்னக் கொம்பு முளைத்த வேற்று கிரக மனிதர்கள் போல் இப்போது காதுமுளைத்த மனிதர்கள்.
காதுகள் எந்தக் கவிஞராவது பாட மாட்டார்களா என மடல் விரித்துக் காத்துக் கிடக்கும் மலர்கள். தன்செயல்களை விருப்பம் இல்லாத நேரத்தில் நிறுத்திக் கொள்ள எல்லா உறுப்புகளுக்கும் கதவு வைத்த இறைவன் காற்றோட்டமாக விட்ட பால்கனி. சிலருக்கு செதுக்கி வைத்த காதுகள். சிலருக்கு மீசை முளைத்த காதுகள். காதுகளுக்குள் இருக்கும் ஆரவாரம் இல்லாத ஒரு கடல். அதன் அசைவுகளை உணர்ந்த மயிர்க் கால்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தி தான் நம் இயக்கத்துக்கு மூல காரணம்.
கருவில் இருக்கும் போதே தன் அலுவலை முதலில் தொடங்குவது காதுகள் தான். அதனால் தான் கருவுற்ற தாய் நல்ல செய்திகள், இனிய பாடல்கள் கேட்க வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். அபிமன்யு வயிற்றில் இருந்தே வியூகம் உடைக்க தெரிந்த கதை நாம் அறிந்தது தானே. எல்லா உறுப்புகளுக்கும் பிறந்ததில் இருந்து செயல் பாடுகள் அதிகரிக்கும் போதுகாதுகளுக்கு மட்டும் குறையத் தொடங்கு கிறது. குழந்தைகளுக்கு ஒரு வினாடியில் 16 -> 30,000 சக்கர சுழற்சிகள் இருக்கும். (cycles/second ) பதினாறுக்கு கீழே போய் விட்டால் நமக்கு நம் உடம்பின் அதிர்வுகள் கூட கேட்கத் தொடங்கும். அப்போது ஒரு வேளை " என்னை இப்படி அதிக வேலை செய்ய வைத்து அராஜகம் செய்கிறாயே?" னு வயிற்றின் குரல் கூட கேட்டாலும் கேட்ட்கும்.
பதின் மூன்றில் இருந்து பத்தொன்பது வயது வரை சுழற்சிகள் 20,000ஆகக் குறைந்து விடுகிறது. வயது ஏற ஏற குறைந்து முற்றிலுமாக செயல் திறன் இழந்து விடுகிறது. புரியாத மோனாலிசா புன்னகைகள் செயல் திறன் இழப்பை காட்டிக் கொடுத்து விடும்.
காது கேளாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில குறிப்புகள் நமக்கு உதவலாம். உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுங்கள்.
.... நீச்சலடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் குளித்து முடித்ததும் காதுகள் நன்கு ஈரம் போகத் துடைத்து விடுங்கள் . தலையை லேசாக உலுக்கி அதிகப் படியான நீர் காதுகளில் இருந்தால் வெளியேற்றுங்கள்.
.... நீங்கள் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராய் இருந்தால் வானில் ஏறும் போதும் , இறங்கும் போதும் சூயிங்கம் மெல்லுங்கள். தூங்காதீர்கள். அதிக ஜலதோஷம் இருக்கும் போது விமானப் பயணத்தை தவிர்க்க முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
.... அதிர வைக்கும் சத்தத்தில் பாடல்கள் கேட்கும் போது தற்காலிகமாக காதுகள் கேட்கும் திறன் இழந்து பின் சரியாகும். ஆனால் அதுவே அடிக்கடி நடந்தால் இழப்பு நிரந்தரமாகும்.
.... புகைப்பதினால் உட்காதுகளுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி தேவையான ரத்தம் போய் சேருவதில்லை. நாளாக நாளாக கேட்கும் திறன் குறையும்.
முழு அமைதியான உலகத்தில் இருப்பது என்பது மிகவும் சோகமானது. இனிமையான சத்தங்கள் இழப்பதோடு கூடி நம் குரலே நமக்கு கேட்காமல் போவது எவ்வளவு வருத்தமானது. காதுகளுக்கு கவனம் செலுத்துவோம்.

12 comments:

  1. ஆரம்பத்துல வேற ஏதோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சுட்டே படிச்சேன் கடைசில நச்ன்னு காது பாதுகாப்பை பற்றி சொல்லியிருக்கீங்க நீங்க டாக்டரா?

    ReplyDelete
  2. //புரியாத மோனாலிசா புன்னகைகள் செயல் திறன் இழப்பை காட்டிக் கொடுத்து விடும்.//
    ஹிஹிஹி... அப்பறம் யாரு என்னா கேட்டாலும் சிரிச்சு கிட்டே இருக்கவேண்டியதான்... இல்லம்மா??
    நல்ல ஒரு உபயோகமான பதிவு...:)

    ReplyDelete
  3. நன்றி சிவா, உனக்கு மோனாலிசா புன்னகைக்கு அர்த்தம் தெரியுமா?
    எனக்கு தெரியாது. அது பெண்ணின் படமானே ஒரு சந்தேகம் இருக்கு.

    ReplyDelete
  4. டாக்டர் இல்ல டாக்டர் மாதிரி. சும்மா சொன்னேன். படிப்பதில் உபயோகமான தகவல்களை பகிர்ந்துக்குவோம்னு ஒரு எண்ணம் தான்.
    நன்றி வசந்த்.

    ReplyDelete
  5. நன்றி அண்ணாமலையான். எல்லாம் செஞ்சுருவோம்னு சொல்றீங்க. நடக்குதானு பார்க்க ஒரு டெஸ்ட் வைக்கணும்.

    ReplyDelete
  6. காதின் அருமை செவி திறன் இழந்தவர்க்கு தான் புரியும். ஏனையோரும் புரிந்து கொள்ள உதவியாய் இருந்தது உங்கள் பதிவு

    ReplyDelete
  7. காதுகளின் அதிர்வு அறியும் சுழற்சி முறை பற்றிய தகவல் புதிது மற்றும் அருமை..
    மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி..

    ReplyDelete
  8. நன்றி தமிழ்,
    செவித் திறன் நன்கு உள்ளவர்கள் அதை இழந்து விடக் கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு

    ReplyDelete
  9. நன்றி மணிகண்டன்,
    சில புதிய தகவல்கள் பிறரிடம் கொண்டு செல்ல உதவுவது தான் பதிவுகளின் சிறப்பு

    ReplyDelete
  10. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்ச மாதிரி இருந்தாலும், ரொம்ப ஆழமான parallel. நம்ம எலோரும் environment-ஏயும் சரி ears-ஏயும் சரி, we take them both for granted. சேதம் ஆனா பின்பு திரும்ப கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம். Jyoti அடிகடி சொல்லுவா, நான் சொல்றத நீ கேக்குறதே இல்லன்னு. ;-)

    ReplyDelete
  11. "எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடித்தது" வேணும்னு தான் RJ
    காதுன்னு ஆரம்பிச்சா "ஆ " ரம்பம்னு ஓடிடக் கூடாதே. அதுக்குத்தான்.
    jyoti க்கு முதல்ல தமிழ் சொல்லிக்கொடுத்து என் ப்ளாக் படிக்க சொல்லணும் போலிருக்கே.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!