Bio Data !!

25 August, 2011

எண்ணச் சிதறல்கள் !!

அம்மா ஜெ !
    சித்திரை நன்னாளில் இருந்த தமிழ் புத்தாண்டை தைப் பொங்கலன்று மாற்றினார் கலைஞர். அதற்கு பல இலக்கிய ஆதாரங்களை சொன்னாலும் மக்கள் மனதில் அது பதியவில்லை. இன்று மறுபடியும் சித்திரைக்கே கொண்டு சென்றது சரிதானா என்று எப் எம் மில் மக்கள் கருத்து கேட்கப் பட்டது. ஓரிருவரைத் தவிரை அனைவரும் சித்திரையே சிறந்தது என்றார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 

 தேனில் நனைந்த பலாவின் குரல் !
       விஜய் டி வி யின் சூப்பர் சிங்கர் தேர்வு இதுவரை பார்க்காதவர்கள்  இருந்தால் இனி கண்டிப்பாக பாருங்கள். இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் பூஜா , சத்ய பிரகாஷ் இருவருக்கு இருப்பது தான் தேனில் நனைந்த பலாவின் குரல் மூன்றாவது இடத்தில் இருக்கும் சாய் சரண் நன்றாக பாடினாலும் குரல் உயர்த்தி பாடினால் சுதி பிசகும் போது தெரிந்து விடுமே என்றே மெல்லிய குரலில் பாடியதாக தோன்றியது. அதனால் தான் மூன்றாம் இடம் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்தது சத்ய பிரகாஷ் குரல் தான், வீட்டுக்காரருக்கு பூஜா. அது என்னவோ ரெண்டு பேருக்கும் ஒரே ஆளை ஒரு போதும் பிடிப்பதில்லை.

அ! ஆ !
         எங்கள் வீட்டு செல்லக் குட்டி ஒவ்வொன்றும் புதிது புதிதாய் படிக்கும் போது   வீட்டில் எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். இப்பொழுது அது புதிதாக செய்வது ஏதாவது பொருளை கையில் வைத்துக் கொண்டு இது ? என்பது நாம் அதன் பெயரை சொன்னவுடன் அதை கீழே போட்டு அடுத்த பொருளை எடுத்து இது?  இது... இது... இது முடிவில்லாத கேள்வி தான்.அடுத்ததாக அ...ஆ... இ ...ஈ ... எனக்கு அதை கேட்டதும் எ...ஏ... பி... பீ  என மதராச பட்டணத்தில் ஆர்யா செய்த ரகளை தான் நினைவுக்கு வந்தது. 

தங்கத்தின் விலை அம்மாடியோ !!
        தங்கத்தின்  விலையை தினமும் செய்தியில் கேட்கும் போது இதயம் ஒரு முறை எம்பி எழுந்து அமர்கிறது. நான் இப்பொழுது ஐம்பொன்னில் செய்த கம்மல், செயின் என இறங்கி விட்டேன். கம்மல் முந்நூறு ரூபாய் , செயின் ஆயிரம் ரூபாய்க்குள். அரை பவுன் விலையில் ஐந்தாறு செட். உடைக்கு பொருத்தமாய். விலை ஏறுவது ராக்கட் வேகத்தில் என்றால் இறங்குவது மாட்டு வண்டியின் வேகத்தில். தங்கம்னதும் பத்மனாபபுரம் கோயில் நகைகள் ஞாபகம் வருது. எல்லாம் பத்திரமா இருக்கா?

அன்னா ஹசாரே !!
   பல டாக் ஷோக்களில்  இந்திய சுதந்திரம் பெற்ற காலங்களில் உள்ளது போல் எங்களை வழி நடத்த தலைவர்கள் இல்லை என இளைய சமுதாயம் பொங்கியது. ஆனால் இன்று லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக, பிரதமர் முதல் அனைவரையும்  விசாரணை செய்யும் உரிமை வேண்டும் என்பதற்காகவும் , இன்னும் பல காரணங்களுக்காக உண்ணா விரதம் இருக்கும் அன்னா ஹசாரேயை ஆதரித்து இன்றைய இளைஞர்கள் யாரும் குரல் கொடுத்ததாக தெரியவில்லையே ஏன்? ஏன்? ஏன்?

BSNL இன் சிறப்பு சலுகை !
  .     எல்லாம் சொல்லி BSNL  பற்றி சொல்லாமல் எண்ணச் சிதறல்கள் எப்படி முடிவடையும்  . நாளை அதாவது 26 .8 .2011 முதல் 30 .8 .2011 முடிய ஐந்து நாட்களுக்கு ரூபாய் 100  முதல் 1100  வரை full  டாக் டைம். என்ஜாய் !!

11 comments:

  1. சிதறல் அருமை.அப்புறம் வாஷ் பேசினை பாத் டப் ஆக மாற்றி விட்டீர்களே

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றிங்க....அசாரே பத்தி பேசக்கூடாதுன்னு தடை இருக்கே தெரியாதா சகோ!

    ReplyDelete
  3. நன்றி கோவை நேரம். எவ்வளவு அழகா போஸ் கொடுக்கிறார் பாருங்க

    ReplyDelete
  4. எனக்கு இது வரை தெரியாது விக்கி, இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காக இன்ட்லியில் ஒரு சின்ன மாற்றம்

    ReplyDelete
  5. சித்திரை திருநாள் தான் - புத்தாண்டு திருநாள். :-)

    ReplyDelete
  6. என்னைப்பொறுத்த வரை சூப்பர் சிங்கரில் இந்த தடவை செலக்‌ஷன் நார்மலாகத்தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அல்கா போலவோ, அஜீஷ் போல வோ, நிகில் மேத்யூ, அனிதா போலவோ யாரும் எக்ஸ்ட்ராட்னரியாக செலக்‌ஷன் செய்யவில்லை என்பது என் கருத்து..

    ReplyDelete
  7. நன்றி சித்ரா ! நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  8. அப்படியா சொல்றீங்க கவிதை காதலன்?

    ReplyDelete
  9. இன்றைய இளைஞர்கள் யாரும் குரல் கொடுத்ததாக தெரியவில்லையே ஏன்? ஏன்? ஏன்?"

    நெல்லையில் இல்லாமல் இருக்கலாம்... மற்ற இடங்களில் ஆதரவு அலை வீசுகிறது

    ReplyDelete
  10. வாஷ் பேசின் குழந்தைஅமரத்தான் எவ்வளவு
    அழகாகிப் போகிறது
    செய்திக் கதம்பம் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!