(மீ த first , 'மனதோடு மட்டும்' கௌசல்யா, 'வெடிவால்' சகாதேவன் ஐயா 'யானைக்குட்டி' ஞானேந்திரன் {நான் சரியா தானே சொல்றேன்}த கிரேட் செல்வா, 'வலைச்சரம்' சீனா ஐயா, 'உணவு உலகம்' சங்கரலிங்கம் )
அது ஓர் தித்திப்பான காலைப் பொழுது. அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கிய நேரம், அன்பை மழை எனப் பொழியும் தோழி தேனம்மையிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. "ஒரு நண்பர் சென்னையில் இருந்து நெல்லை வந்திருக்கிறார் அவர் நெல்லை பதிவர்களை சந்திக்க விரும்புகிறார். அவரிடம் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். " என்றார்கள். மாதத்தின் ஆரம்ப நாள். வழக்கமான அரசு அலுவலகங்களின் monthly statement திரு விழா கொண்டாட்டத்தில் இருந்ததால், அவர் பெயர் செல்வா என்பதைத் தவிர வேறு அதிக தகவல்கள் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் "சரி " என்றேன்.
அது ஓர் தித்திப்பான காலைப் பொழுது. அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கிய நேரம், அன்பை மழை எனப் பொழியும் தோழி தேனம்மையிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. "ஒரு நண்பர் சென்னையில் இருந்து நெல்லை வந்திருக்கிறார் அவர் நெல்லை பதிவர்களை சந்திக்க விரும்புகிறார். அவரிடம் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். " என்றார்கள். மாதத்தின் ஆரம்ப நாள். வழக்கமான அரசு அலுவலகங்களின் monthly statement திரு விழா கொண்டாட்டத்தில் இருந்ததால், அவர் பெயர் செல்வா என்பதைத் தவிர வேறு அதிக தகவல்கள் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் "சரி " என்றேன்.
சிறிது நேரத்தில் செல்வாவிடம் இருந்து அழைப்பு.
உற்சாகமாக "குட் மார்னிங் ரூபினா" என்றார். அழைப்பதில் நமது பெயரை சேர்த்து சொன்னாலே அன்னியோன்யம் வந்துவிடும் என்னும் ரகசியம் அறிந்தவர்.
"இன்று மதியம் விமானத்தில் செல்வதாய் இருந்தேன். நெல்லை பதிவர் சந்திப்பைப் பற்றி சித்ரா சொன்னதில் இருந்து நெல்லை பதிவர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்" என்றார். எனக்கு தெரிந்த பதிவர்கள் நெல்லையில் நாலே நாலு பேர் தான் இருக்கிறார்கள். அது வரை அவர் திரைப்படம் இயக்குவதற்காக வந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவரும் சொல்லவில்லை. நெல்லைக்கே 'அண்ணா' ஒருவர் இருக்கிறாரே சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர் சிறப்பாக செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பக்கம் கை காட்டினேன்.
அவர் மாகி நூடுல்ஸ் போல குறைந்த நேரத்தில் ருசிகரமான ஒரு ஏற்பாட்டை செய்து விட்டார். நாலு பேர் பத்து பேர் ஆனோம். இது வரை முகம் தெரிந்தவர்கள் சந்திப்பிற்காக கூடி இருக்கிறோம். இப்படி பார்த்திராத ஒருவருக்காக வேறு ஊர்களில் இருந்து வந்து காத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனார் செல்வா. நாகர்கோவிலில் இருந்து விஜயன், மதுரை யில் இருந்து வலைச்சரம் சீனா ஐயா, மற்றும் நெல்லைவாசிகள். சீனியர் பதிவர் 'வெடிவேல்' சகாதேவன் ஐயா அவர்கள் கலந்து கொண்டது ஆச்சர்ய சந்தோஷம். விஜயனைப் பார்த்ததும் நாஞ்சில் மனோ நினைவு வந்ததோ என்னவோ சங்கரலிங்கம் சார், அங்கே இருந்தே மனோவை அலைபேசியில் அழைத்து வெறுப்பேற்றினார்கள். அந்த நேரம் விமானம் கிடைத்திருந்தால் வந்திருந்தாலும் வந்திருப்பார்.
செல்வா அவர்கள் அமைதியாகவே நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார். கணினி வந்த புதிதில் தான் வாங்கி வைத்திருந்த கணினியைப் பார்க்க டெல்லியில் இருந்து வந்தார்கள் என்று சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். தான் ஒரு குறும் படம் எடுத்திருப்பதாகவும் நாங்கள் பார்க்க விரும்பினால் காட்ட இருப்பதாகவும் சொன்னார். ஏக மனதான விருப்பத்தின் அடிப்படையில் அங்கேயே பார்க்க தயாரானோம். அந்த குறும்படத்தின் கதாநாயகர் கீழே உள்ளார். அவர் காட்டிய முக பாவங்களில் காதலில் விழுந்த நான் இன்னும் எழுந்தபாடாய் இல்லை. ட்ராக் பாட வந்தவர் அதிர்ஷ்டம் அழைத்து ஒரிஜினல் பாடகர் ஆனது போல் அந்த கதா பாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவர் வராததால் செல்வா அவர்களின் சித்தப்பாவே நடித்து இருக்கிறார். இயக்குனர்கள் நடிக்க சொல்லித்தரலாம். நடிகர்கள் நடிக்க முயலலாம். அந்த உணர்வு அந்த முக பாவனையில் அப்படியே பொருந்திப் போக வேண்டும். அது அவருக்கு நடந்தது. குறும் படத்தின் ஒளிப்பதிவும் செல்வாவே தான்.
அவர் லாப் டாப்பில் க்ளோஸ் அப்பில் வந்த நொடியில் எடுத்ததால் கொஞ்சம் சிதைந்த படமாக இருக்கிறது. இருந்தும் அந்த நாசியும் உதடுகளும் எவ்வளவு வேதனையை உணர்த்துகின்றன. உடல்கள் அழியலாம் ஆனால் ஆன்மா அழிவதில்லை என்னும் கருத்தை உள்ளடக்கி இருந்தது குறும் படம். கடற்கரையில் தன் மகள் சுனாமியில் இறந்ததை சொல்லி " மண்ணில் புதைத்த எதுவும் முளைக்காமல் போனதில்லை. என் மகளும் மறுபடியும் பிறந்திருப்பாள். எனக்கு தாயாய், தோழியாய், மனைவியாய் இன்னும் எல்லா உறவுகளும் அடங்கிய அன்பைத் தரும் ஒரு பெண்ணை மனைவியாய் அடைய தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாய். அப்படி ஒரு பெண்ணை சந்தித்தால் எனக்கு கண்டிப்பாக தெரியப் படுத்து. அவளில் தான் என் மகளின் ஆன்மா உறைந்திருக்கும். நான் அவளை பார்க்க விரும்புகிறேன்." Hats off to U " செல்வா சார். இந்த குறும்படத்தை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். சுனாமியின் பாதிப்பு சுண்டல் சாப்பிடுவது போல் ஆகி விட்ட அந்த நாட்டில் இந்த குறும் படம் திரையிடப் பட இருக்கிறது. வாழ்த்துக்கள்!!
சங்கலிங்கம் அவர்களின் நண்பரின் ஹோட்டலில் தான் சந்தித்தோம். அவருக்கு வலை பூக்களில் இருந்த ஈடுபாடு அந்த அரை முழுவதும் ஆச்சர்யக் குறிகளாய் நிரம்பி இருந்தது. அல்வா (!?!) பப்ஸ், நல்ல தொரு லெமன் டீ என மனதோடு வயிறும் நிறைந்தது. 'மனதோடு மட்டும்' கௌசல்யாவின் கணவர் ஒரு தனித்துவம் நிறைந்த நபர். எந்த ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வோம். ஆனால் பல வெற்றிகளை சாதிக்கப் போகும் இந்தப் பெண்ணின் பின்னால் இருக்கும் ஆண் அவர்.
கருவாளி, யானைக்குட்டி வலைப்பூக்களின் சொந்தக்காரர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுதலாம். அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமை இடைஇடையே அவர்களின் கலந்துரையாடலில் வெளிப்படுகிறது. வலைச்சரம் சீனா ஐயா அமைதியாக அங்கே இருந்து அத்தனை பேருக்கும் சிபி ஸ்டைலில் மார்க் போட்டது போல் இருந்தது. நான் பாஸ் ஆகி விட்டேனா என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
மற்றும் ஒரு சித்த மருத்துவரும் கலந்து கொண்டார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்திலும் அங்கே வந்து எல்லோரோடும் அறிமுகம் செய்து கொண்டார். "என்ன ஒரே நாய்க்குட்டி, யானைக்குட்டி யா இருக்கு " என்றார். எனது நாய்க்குட்டி மனசு, மற்றொரு வலைப்பூ யானைக்குட்டி. செல்வாவை சந்தித்ததன் மகிழ்வை காட்டி எல்லோரோடும் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடிக்க பறந்தார்.
எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க ஆசை தான். வீட்டு வாசலில் ஒரு கம்போடு (நாய்க்குட்டி ஆச்சே!)கணவர் காத்திருப்பது போல் ஒரு நிமிடம் கண் முன் ஒரு காட்சி வந்து போனதால், அனைவரிடமும் விடை பெற்று வீடு நோக்கி விரைந்தேன். எனக்கு ஆணாய்ப் பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் ஒரு நொடி வந்து போனது.
காணாமலே போச்சு இன்ட்லி
ReplyDeleteநான் மிஸ் பண்ணிவிட்டேன் அம்மா ..வேலை பளு பரவாஇல்லை மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைக்காமைலையா போய்விடும்
ReplyDeleteரூஃபினா,
ReplyDeleteதொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த என்னை, நெல்லையுடன் இணைத்த உங்கள் முதல் ஹலோவுக்கு முதல் வணக்கம்.
உடனே புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும், ஒரு மணிநேரம் ஒத்திவைத்து, உடனிருந்து சந்திப்பை மெருகேற்றியதற்கு இரண்டாவது வணக்கம்.
இந்த பதிவிற்க்காக இன்னொரு வணக்கம்.
அப்புறம்... முதன் முதலாக உங்களை உங்கள் பதவின் வழியாகவே சந்திப்பதால்.. ஹலோ..ஹலோ..ஹல்லல்லோ..
யாதுமானவள் வொர்க்ஷாப் வீடியோவை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.
http://youtu.be/CtSxBe28iqQ
>>நெல்லைக்கே 'அண்ணா' ஒருவர் இருக்கிறாரே சங்கரலிங்கம்
ReplyDeleteஐ ஜாலி.. இனி எங்கண்ணன் நெல்லைல ஒரு ஃபிகரை சைட் அடிக்க முடியாது. ஹா ஹா நல்ல மாட்னாரு..
>விஜயனைப் பார்த்ததும் நாஞ்சில் மனோ நினைவு வந்ததோ என்னவோ சங்கரலிங்கம் சார், அங்கே இருந்தே மனோவை அலைபேசியில் அழைத்து வெறுப்பேற்றினார்கள்.
ReplyDeleteஎங்கண்ணனுக்கு ஆஃபீஸ்லயே செல் பில் கட்டிடறாங்க. அதனால ஆன்னா ஊன்னா அண்னன் ஃபோன் போட்டுடறாரு
>>சங்கலிங்கம் அவர்களின் நண்பரின் ஹோட்டலில் தான் சந்தித்தோம். அவருக்கு வலை பூக்களில் இருந்த ஈடுபாடு அந்த அரை முழுவதும் ஆச்சர்யக் குறிகளாய் நிரம்பி இருந்தது. அல்வா (!?!) பப்ஸ், நல்ல தொரு லெமன் டீ என மனதோடு வயிறும் நிறைந்தது.
ReplyDeleteஅடடா.. தெரிஞ்சிருந்தா நானும் போய் இருப்பேனே?
இதுபோல சந்திப்பு தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete///எனக்கு ஆணாய்ப் பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் ஒரு நொடி வந்து போனது. ////
ReplyDelete...... ha,ha,ha,ha,ha,ha,ha....
நேரில் பார்த்தது போல, பதிவர் சந்திப்பை குறித்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள். I missed being there.
ReplyDeleteகலக்கலா சொல்லி இருக்கீங்க...நன்றி சகோ!
ReplyDeleteசூப்பர் சூப்பர். அருமையான பதிவு.வாழ்த்துக்கள் ரூபினா மேடம்.
ReplyDeleteநெல்லைன்னா அல்வாங்கிற பேரு போயி பதிவர் சந்திப்புங்கிற பேரு வந்திடுமா ?
ReplyDeleteபாபு, நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி செல்வா, பதிவில் சொல்ல இன்னும் நிறைய விஷயம் இருந்தது. பதிவின் நீளம் கருதி சுருக்கப்பட்டது.
ReplyDeleteநன்றி சிபி, சங்கரலிங்கம் சார், உங்களையும் மிஸ் பண்ணினார். அடுத்த தடவை கண்டிப்பா வாங்க
ReplyDeleteநன்றி ஷீ-நிசி வாழ்த்துக்கும் வருகைக்கும்
ReplyDeleteஆமாம் சித்ரா, இறுதி வரை இருந்து வழி அனுப்பி செல்ல வேண்டும் என்று மனம் சொல்கிறது. நிஜம் ஓடு ஓடு என்று விரட்டுகிறது. ஒரு வழியா பதிவு உலகத்துக்கு திரும்பி வந்தீங்களா?
ReplyDeleteநன்றி விக்கி, சாட்டலாம் வாங்கனு கூப்பிட்டிட்டு வராமலே போய்ட்டேன் சாரி
ReplyDeleteநன்றி விஜயன், உபயம் உங்கள் புகைப்படம்
ReplyDeleteநன்றி சங்கரலிங்கம் சார், சிபி கமெண்ட் பார்த்தீங்களா?
ReplyDeleteநன்றி கூடல் பாலா . செல்வா குறும் படம் லிங்க் கொடுத்திருக்கிறார் கண்டிப்பா பாருங்கள்
ReplyDeleteசித்ரா,
ReplyDelete///எனக்கு ஆணாய்ப் பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் ஒரு நொடி வந்து போனது. ////
//...... ha,ha,ha,ha,ha,ha,ha....//
தங்ஸ், எதற்கு இந்த வெடிச்சிரிப்பு? பிளாக்ஸ்பாட் ஸர்வருக்கு ஏதாவது ஆகிடப்போகுது.
நெல்லையில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு வந்து போனதுநெல்லையில் பிறக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு வந்து போனது
ReplyDeleteஅருமையான அன்பான சந்திப்பு..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி சகோ..
ReplyDeleteசெல்வா, நான் இந்த சிரிப்புக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்ல
ReplyDeleteபார்வையாளன், நான் பல முறை சென்னை பதிவர்களைப் பார்த்து ஏங்கி இருக்கிறேன். இப்பொழுது நெல்லையில் தொடங்கி தொடர்கிறது
ReplyDeleteநன்றி அமைதிச்சாரல், தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக !!
ReplyDeleteநன்றி நாடோடி, எங்கே பல நாள் காணாமப் போயிடுறீங்க?
ReplyDeleteஅருமையான அன்பான சந்திப்பு..
ReplyDeleteநன்றி நெல்லை ராம் !மீண்டும் மீண்டும் சந்திக்க முயல்வோம்
ReplyDelete