Bio Data !!

18 October, 2011

மழைக்கால விடியல்

மழைக்கால விடியல் 
மனதுக்குள் சின்ன சின்ன 
குத்தீட்டிகளாய் !

கூட்டம் கூட்டமாய்
தற்கொலை 
செய்து கொண்ட 
ஈசலும் 

அடுக்கி வைக்கப்பட்ட 
பிணங்களாய் 
காட்சி தரும் 
முருங்கை பூக்களும்

அகால வேளையில் 
நினைவூட்டுகிறதே
இலங்கையில் இருக்கும்
எம் தமிழரை !   

13 comments:

  1. மனம் வலிக்கும் கவிதை....!!!

    ReplyDelete
  2. மழைத் தூறலில் மனிதநேயம்கூட மலர்கிறதே ....புதுமை !

    ReplyDelete
  3. நீர்சூழ்ந்த இடத்தில் நடந்த அந்தக் கொடூரத்தை
    அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவது போல இருந்தது
    தங்கள் பதிவு.உண்மையில் அன்று தமிழர்கள்
    ஈசலைப் போலவும் மரம் விட்டு விழுந்த பூக்களைப் போலத்தானே
    ஆகிப் போனோம்.மனம் கனக்கச் செய்து போகும்
    தரமான பதிவு.

    ReplyDelete
  4. நன்றி மனோ கவிதை மட்டும் தான் எழுத முடியும்

    ReplyDelete
  5. நன்றி பாலா, கூடங்குளத்தில் மறுபடியும் அலை அடிக்கத் தொடங்கி விட்டது போல இருக்கிறதே ! நான் உங்களை பற்றி என் பிரெண்ட் ஒருவரிடம் விசாரித்துக் கொள்வேன். உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. நன்றி ரமணி சார், வாசலில் கோலத் தாமரை பூக்கும் போது மனதுக்குள் பூத்த கவிதை இது

    ReplyDelete
  7. நன்றி ஆமீனா தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  8. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html

    இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!