Bio Data !!

03 October, 2011

நெல்லையிலும் பூனை நடை !!

நெல்லையில், எங்கள் கல்லூரிக் காலங்களில் மிகப் பெரிய திரை அரங்கம் "பார்வதி தியேட்டர் " அப்போ வகுப்பை கட் செய்திட்டு அங்கே போய் தான்              " இளமை ஊஞ்சலாடுகிறது" பார்த்தோம். திருட்டு மாங்கா தின்பது போல் வகுப்பை கட் செய்து படம் பார்ப்பது அப்படி ஒரு உல்லாசம். அந்தக் காலத்தில் நான் ஒரு ரஜினி பைத்தியம். படம் பார்த்து வீட்டுக்கு நான் வரும் முன், நான் படம் பார்த்த விஷயம் முந்திரிக் கோட்டை போல் எனக்கு முன் வந்திருக்கும்.  
ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். இப்போ அலுவலகத்த கட் செய்ய தான் முடியுதா, படம் பார்க்க தான் முடியுதா ? சரி விஷயத்துக்கு வாறன். அந்த பார்வதி திரை அரங்கம் இன்று திருமண மஹால் ஆகி இருக்கிறது. கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது. வாழ்ந்து கெட்ட பண்ணையாரிடம் லேசாக ஒட்டிக் கொண்டிருக்கும் கம்பீரம் போல் கட்டடம் இன்னும் களை இழக்காமல்  இருக்கிறது. அங்கே Heights என்னும் நிறுவனம் பேஷன் ஷோ நடத்தியது. "அண்ணி" சங்கீதாவும் இன்னும் ஒரு சில சின்ன சின்ன மலையாள நடிகைகளும், சின்னத் திரையின் வளர்ந்து வரும் தொகுப்பாளினி பாவனாவும் வந்திருந்தார்கள்.  கிருஷ் க்கு முன் சின்ன பிள்ளையாகத் தெரிய சங்கீதா ரொம்ப மெனக்கெட்டிருப்பார் போல் தெரிகிறது. அப்படி ஒரு கச்சிதமான உடல், அழகான உடை. அவருடைய பாவனை ரொம்ப அலட்டிக்காதது போன்ற அலட்டலாய் இருந்தது. 

நெல்லை பெண்களா என்று ஆச்சரியப் படும் வண்ணம் பூனை நடை நடந்த பெண்களின் உடைகள் வடிவமைக்கப் பட்டிருந்தன. சிறப்பாக சொல்வதென்றால் மயிலின் தோகையின் சின்ன சின்ன பகுதிகளாக இணைத்து ஒரு மயிலுக்கு உடை அணிவித்திருந்தார்கள். அந்த பெண் நடக்கும் போது அந்த தோகை பின் தொடர்ந்தது அழகு. தனது இருபத்தியைந்து ஆண்டுகளின் கலக்க்ஷன் என்று பெருமிதமாக சொன்னது அந்த மயில். 

மற்றும் ஒரு டிசைனர் "இந்த உடை அமைப்பை தேர்ந்தெடுக்க ஏதேனும் காரணம் உண்டா?" என்ற கேள்விக்கு " எனக்கு பிடித்திருந்தது நான் தேர்ந்தெடுத்தேன்" என்று பதில் சொன்னது அரங்கத்தில் கரவொலியை எழுப்பியது. என்றைக்குமே தன்னம்பிக்கைக்கு தனி மதிப்பு தான். 

ரின்சென் ஆடிய நடனம் நன்றாக இருந்தது. மலையாள பெண் ஆடிய நடனத்தில் ஒரே விதமான கண் அசைவும், இடுப்பு ஒடித்தலும் சலிப்பைத் தந்தது.  

மேடையின் நடுவில் ஒரு உயரமான கம்பை வைத்து அதன் மேல் நின்றும், மேடையிலுமாக இரண்டு சேட்டன்களும் செய்த கலை சிலிர்க்க வைத்தது. அரங்கத்தில் ஒரே ஆரவாரம். அந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தை சிதைத்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே நான் கை தட்டக் கூட மறந்து நின்றேன். 

நிகழ்ச்சியை  பற்றி எழுதியது எனக்கே திருப்தி இல்லை அதற்கு காரணம் உண்டு. நிகழ்ச்சிக்கான டிக்கெட் தரும் நண்பர்கள் முதலிலேயே சொல்வதில்லை. திடீர்னு சொல்லி, அதற்கான  ஏற்பாடுகள் செய்து கிளம்பி போகுமுன் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. அரங்கம் நிறைந்த காட்சி. (இந்த கூட்டம் திரைப்படங்களுக்கு வந்திருந்தால் " பார்வதி திரை அரங்கம் "                   "பார்வதி திருமண அரங்கமாக" ஆகி இருக்காது ) அமர்வதற்கு சரியான இருக்கை கிடைக்காததால் முடியும் முன்னமே கிளம்பி விட்டேன். இருந்தாலும் நெல்லையின் மாற்றம் பற்றி வழியெல்லாம் வியந்து கொண்டே தான் பயணித்தேன்

19 comments:

  1. களை கட்டிய பதிவுங்கோ சகோ!

    ReplyDelete
  2. இந்த மாற்றம் நல்லதா கெட்டதா ?

    ReplyDelete
  3. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது....!!!

    ReplyDelete
  4. அடுத்த ஆண்டு முதல் ஒவ்வோறு கிராமத்திலும் அரங்கேற்றாலம்...

    இது எங்க போய் முடியுமோ தெரிய வில்லை..

    ReplyDelete
  5. நெல்லையில் பேஸன் சோ வா...?

    நாங்கல்லாம் அங்க இருக்கும் போது ஒன்னும் கிடையாது...

    இப்போது..??

    நடக்கட்டும் நடக்கட்டும்...!

    ReplyDelete
  6. அழகா விமர்சனம் கொடுத்துடீங்க அக்கா

    //என்றைக்குமே தன்னம்பிக்கைக்கு தனி மதிப்பு தான். //
    உண்மை தானே !

    நெல்லையின் இந்த மாற்றம் ஆச்சர்யம்.

    ReplyDelete
  7. நல்லதோ கேட்டதோ ? பார்வையாளன், இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது.

    ReplyDelete
  8. நன்றி மனோ தக்காளி சாஸ் பற்றிய உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருந்தது

    ReplyDelete
  9. சௌந்தர், கொஞ்ச நாளாவே திரை அரங்குகள் செல்லும் போதே கலக்கமா இருக்குது. கிராமத்து இளைஞனும் , இளம் பெண்ணும் ரெண்டு பேருமே வறுமைக் கோட்டுக்கு கொஞ்சம் மேலே இருப்பவர்கள் போல, ஜோடி ஜோடியாக கண்ணில் படுகிறார்கள். வாழ்வை வீணாக்குகிறார்கள் கவலையாக இருக்கிறது

    ReplyDelete
  10. இப்போ எங்கே இருக்கீங்க ஜெபா, ரெகுலரா ப்ளாக் பார்க்கிறீங்க போல இருக்குது திடீர்னு தான் கமெண்ட் வருது

    ReplyDelete
  11. நன்றி கௌசல்யா, உங்களுக்கு தகவல் தெரிவிக்கவே நேரம் இல்லாத படி சொன்ன உடன் போய் டிக்கெட் வாங்க வேண்டி ஆகி விட்டது.

    ReplyDelete
  12. நீங்க சூர்யாவா ? ஜீவாவா?
    ரைட் ரைட்

    ReplyDelete
  13. சொல்லவே இல்லையே, சகோ.

    ReplyDelete
  14. நெல்லைனா...அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஹோட்டல் பிரபுன்னு நினைக்கிறன்..அங்க பிரியாணியும்...அந்த பால்கோவா கடையும் தான் நினைவு இருக்குது...இன்னும் அதுலாம் இருக்கோ என்னவோ...

    ReplyDelete
  15. பேஸன் சோ ...ஆச்சர்யம் தான்..

    ReplyDelete
  16. ரெவெரி நீங்கள் நெல்லை காரரா? இல்லை நெல்லைக்கு வந்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  17. இந்த மாதிரி நிகழ்ச்சி வரும் போது எனக்கும் தெரியப்படுத்துங்கோ சேர்ந்து போய் பதிவு எழுதுவோம்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!