Bio Data !!

19 October, 2011

இரு கோடுகள் !!

இரு கோடுகள் !!
ஜெமினி நடிச்ச பழைய படத்தை பத்தி ஏதேனும் சொல்லப் போறேன்னு நினைச்சீங்களா? அது தான் இல்ல .

இது ஒரு அனுபவ பகிர்வு. நம்ம எப்போவுமே அழகு, திறமை போன்றதில ஒருவரை தனியா குறிப்பிடுறோம். ஆனால் அது அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். என்னோட பணிக் காலத்தில முழுசும் மிகச் சிறந்த அதிகாரிகளிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களது அனுபவத்திற்கும் திறமைக்கும் முன் நாம் தனித்து தெரிய ரொம்ப சிரமப் பட வேண்டி இருக்கிறது. அதுவே நம்மை விட திறமை சற்று குறைந்த அதிகாரிகள் அவர்களை விட திறமை குறைந்த மேலதிகாரிகளிடம் பணி புரியும் போது சுலபமாக நல்ல பெயர் தட்டிச் சென்று விடுகிறார்கள். இவர்கள்    செய்யும் சிறு விஷயம் கூட அவர்களுக்கு பிரமிப்பைத் தருகிறது 

அதே போல் தான் நமக்கு கீழே பணி புரியும் அதிகாரியும் திறமைசாலி என்று பெயர் எடுத்தவராய் இருந்தாலும் நமது வேகத்துக்கும், திறமைக்கும் ஈடு கொடுக்க முடியாதவராய் இருந்தால் நாம் சலித்துக் கொள்கிறோம். இந்த இரு கோடு தத்துவத்தை உணராமல் "அதெப்படி அவரிடம் நல்லா வேலை செய்தவர் இவரிடம் சுமாரா வேலை செய்வார்" என்று வாக்குவாதம் பண்ணுகிறோம். 

இந்த திறமை என்பதையும் ஒரு பண்டலாக பார்க்க கூடாது.  நான் பணி புரியும் இடங்களில் கணினி சார்ந்த சிக்கல்களை விடுவித்து சிறப்பாக பணி புரிகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனாலேயே என்னை கணினிப் பிரிவில் கொண்டு போய் பணியில் அமர்த்தினால் அங்கு இருப்பவர்கள் எனது திறமையை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் போகலாம். 

விஷயங்களை சுலபமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள் ஒரு இடத்தில் புதிதாக பணியில் சேரும் போது ஆரம்பத்தில் சிரமப் படுவது போல் தோன்றினாலும் சீக்கிரத்திலேயே சூழ்நிலையை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஒரு தனி மனிதன் எதில் சிறந்து விளங்குகிறான் என்று பார்த்து அதை சார்ந்த பணியைக் கொடுத்தால் அவனுக்கும் நிறைவு இருக்கும் நிறுவனத்துக்கும் பலன் இருக்கும். நமது தேவை ஒருவரை திறமை அற்றவர் என்று நிரூபிப்பதல்ல, நிறுவனத்துக்கு எப்படி அவன் சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதே. 


இப்போ இதை சொல்ல என்ன அவசியம் வந்ததுனு பார்க்கிறீங்க   இல்ல. அவசியம் வந்திடுச்சே. IPMS (Indivudual performance monitoring scheme) என்று ஒன்று சில நிறுவனங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இது குழுவாக  இல்லாமல் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் நிறுவனம் உயர்வதற்கு என்ன தனிப்பங்கு ஆற்றி இருக்கிறான் என்பதை கணக்கிட தான் இந்த முறை. 

கணக்கிட வேண்டிய அதிகாரி இந்த இரு கோடுகள் தத்துவத்தை மனதில் கொண்டு கணக்கிட வேண்டும். தனது வேகத்தோடும், திறமையோடும் பொருத்திப் பார்த்து ஒருவனை எடை போடாமல், கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற முயற்சிக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும். உழைக்கும் இரு கைகளுக்கும் கொடுக்கும் மதிப்பெண்ணுடன் உழைக்க வேண்டும் என்ற மனதிற்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும் . 

இப்படி செய்வது பணி புரிபவர்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கும், மனம் தளர்ந்து போகாமல் இருக்கவும் செய்யும். நான் எல்லாம் சரியாய்த்தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். 
உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.

26 comments:

  1. உழைப்புக்கு ஆர்வமும் ஈடுபாடும் முக்கியம்னு நெனைக்கிறேன் சகோ....பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நல்ல திட்டம் ...ஈடுபாட்டுடன் பணிபுரிபவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியது ....

    ReplyDelete
  3. அக்கா சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க...
    அப்புறம் என்ன நான் ஒரு சொல்றது சரியானு ஒரு கேள்வி ? இது ஓவர் ! :)

    //கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற முயற்சிக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும்.//

    கண்டிப்பா.

    ReplyDelete
  4. உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.//

    இதுதான் மொத்த பதிவுக்குமான தலைப்பு, சூப்பரா சொன்னீங்க, சரியாக சொன்னீர்கள்....!!!!

    ReplyDelete
  5. நன்றி விக்கி இருபது இருபத்தைந்து வருடங்கள் பணி புரியும் நிறுவனத்திடம் ஈடுபாடு இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது என்பது தான் எனக்கு புரிவதே இல்லை

    ReplyDelete
  6. அருள் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக !

    ReplyDelete
  7. very sorry பாலா அலுவலகம் இப்படித்தான் நெருக்கடியாக இருக்கிறது. எந்த ஒரு உரையாடலையும் முழுமையாக முடிக்க முடிவதில்லை

    ReplyDelete
  8. நன்றி கௌசல்யா; மற்றவை நேரில்

    ReplyDelete
  9. நன்றி மனோ profile போட்டோ மாற்றியாச்சு போல ?

    ReplyDelete
  10. சரியா சொன்னீங்க நண்பரே

    நன்று

    ReplyDelete
  11. நீங்களே போஸ்ட் போட்டுட்டு , வடை வாங்கிட்டா எபடி?

    ReplyDelete
  12. >> Your comment will be visible after approval.

    பிரபல பதிவர்கள்னா இப்படி சோதனைகள் வரத்தான் செய்யும்

    ReplyDelete
  13. வேற எந்த வலைப்பூவிலும் வடை வாங்க முடியல. அதான் சொந்த செலவிலேயே சூன்யம் சிபி

    ReplyDelete
  14. Your comment will be visible after approval // . இதுக்கு ஒரு காரணம் இருக்கு பதிவுலகம் வந்த புதிதில் ஒருவரின் ப்ளாக் ல வந்த பின்னூட்டங்களை பார்த்து அரண்டு போய் செய்தது இது. எடுத்திடலாம்னு தான் இருக்கேன். அது சரி நேற்று கேக் கட் பண்ணீங்களா? சொல்லவே இல்லை

    ReplyDelete
  15. தெரிய வேண்டியவற்றை தெளிவாக
    தெரிவிக்கின்ற நல்ல பதிவு!

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நான் எல்லாம் சரியாய்த்தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். //

    சரியாக சொல்லி இருக்கீங்க...No doubt about it...

    ReplyDelete
  17. சி.பி.செந்தில்குமார் said...
    நீங்களே போஸ்ட் போட்டுட்டு , வடை வாங்கிட்டா எபடி?//

    அது மைக் டெஸ்டிங்டா டுபுக்கு...

    ReplyDelete
  18. நன்றி மனோ, எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு.

    ReplyDelete
  19. நன்றி அம்பாளடியாள், தீபாவளி சிறப்பு தானா?

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!