Bio Data !!

09 December, 2011

காலத்தின் வளர்ச்சி !!

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில ஒரு பாட்டி இருந்தாங்க. கலர்னா கலர் அப்படி ஒரு எம்ஜிஆர் கலர். வயது எண்பதுக்கு
மேல் இருக்கும். தாத்தாவும் அவ்வளவு வயசுக்கு இருந்தார். ப்ரீயா (அப்போல்லாம் டி வீ இல்லாததாலே நிறைய நேரம் கிடைக்கும்.) இருக்கும் போதெல்லாம் அவங்க வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கதை கேட்பது வழக்கம். எல்லாம் வாழ்க்கை கதை தான். இடையிடையே தெருவில் போறவர்களை குசலம் விசாரிக்க போய்டுவாங்க .பொறுமையா இருந்தா நல்ல கதை கிடைக்கும். 

"பாட்டி, உங்களுக்கு எத்தனை வயசில கல்யாணம் நடந்திச்சு?" எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத கதை. சில இடங்களில் அவர்கள் மூச்சு விட நேரம் எடுத்துக் கொள்ளும் போது தொடர்ந்து நாங்கள் சொல்லும் அளவுக்கு எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது. கல்யாணம் ஆகுறப்போ "எனக்கு 8 
தாத்தாவுக்கு 18 " என்பார்கள். புதுத் துணிக்கும், பூவுக்கும் அலங்காரத்துக்கும் ஆசைப்பட்டே கல்யாணம் நடந்ததாக சொல்வார்கள். திருமணம் ஆகி நாலைந்து வருடங்கள் ஆனா பிறகு தான், தான் 'பெரியவள்' ஆனதாக சொல்வார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஆணைப் பற்றிய ஆர்வம் வரும் முன் திருமணம் முடித்து விடுவதால் பெண் வழி தவறிப் போகும் வாய்ப்புகள் குறைவு என்பார்கள். ஓடிப் பிடித்து விளையாட வேண்டிய வயதில் இப்படி மணையில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கும்.

எனக்கு திருமணம் ஆகும் போது வயது இருபது. கல்லூரிப் படிப்பு முடித்ததும் காதல் அவசரத்தால் திருமணம். குழந்தை வளர்ப்புக்கு அந்த வயது முதிர்ச்சி பத்தாதாக இருந்தது. அம்மா திட்ட திட்ட இரவில் உறங்கிக் கொண்டே பாலூட்டி வளர்த்தது நினைவுக்கு வருகிறது. குழந்தையின் குறும்புகளை ரசிக்கத் தெரியாமல் தொந்தரவாக நினைத்ததற்கும் வயது தான் காரணம் என்று நினைக்கிறேன். 

என் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்த போது உயர் படிப்பு முடித்து, சில காலம் பணி புரிந்து அதன் பின் தான் திருமணம் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அது அப்போது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கொஞ்ச நாளில் தான் அது இந்தக் காலத்திய எல்லா குழந்தைகளுக்குமான எண்ணம் என்று புரிந்தது. இந்த வயது முதிர்ச்சியாலேயே அவள் மகனை வளர்க்கும் போது அவனது எந்த செயலையும் ரசிக்கும் பக்குவம் வந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட வளர்ச்சி அடைந்திருக்கும் நாட்டில் தான் இன்றும் "குழந்தை திருமணம்" நடப்பில் இருக்கிறது. எட்டு வயது பத்து வயது குழந்தைகள் தங்களுக்கு குழந்தை திருமணம் முடிப்பதை எதிர்த்து அவர்கள் சொந்தங்கள், இனம் எல்லோரையும் பகைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஜனாதிபதி பிரதிபா பட்டேலிடம் பாராட்டும், பரிசுப் பணமும் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிகழ்வின் சந்தோஷத்தை இன்னும் நெஞ்சில் சுமந்தபடி வளைய வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த குழந்தைகள் இதை மற்ற குழந்தைகளிடமும் சொல்லி அவர்களையும் குழந்தை திருமணத்தில்இருந்து காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். 

இன்றைய நமது வாழ்த்தை அந்த குழந்தைகளுக்கு உரியதாக்குவோம் !!

15 comments:

  1. ஆமா எம்.ஜி.ஆர் என்ன கலர்னு சொல்லவே இல்ல!

    ReplyDelete
  2. அந்தக்காலத்துக்கு அது பொருத்தமாகத்தான் இருந்தது. எனக்கே கோட பெரியமனுஷி ஆகும் முன்புதான் கல்யாணம் ஆச்சு. இப்ப அப்படி இல்லியே. இதெல்லாம் தான் தலைமுறை இடைவெளிகள்.

    ReplyDelete
  3. நடைமுறையை எதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்...!!! அந்த குழந்தைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், இப்போ உள்ள பிள்ளைகள் செமையா சுமார்ட்டா இருக்கிறார்கள் என்பது சந்தோஷமே...!!!

    ReplyDelete
  4. எவ்வளவு தான் வளர்ச்சி வந்தாலும் எம்மவரில் சில மாற்றத்தை ஏற்படுத்த முடிவதில்லை...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    ReplyDelete
  5. சீனிவாசன் எம் ஜி ஆர் பவுன் கலர்னு சொல்லலாமா?

    ReplyDelete
  6. உங்க காலத்தில நடந்த மாதிரி இப்போ நடத்தப் பார்க்கிறாங்க மேடம் அநியாயம் இல்ல ??

    ReplyDelete
  7. நன்றி ம.தி.சுதா தங்கள் முதல் (!!) வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  8. It shows that arranged marriage is always better than love marriage.
    JTO, BSNL

    ReplyDelete
  9. Does my post show that arranged marriage is better JTO BSNL? BUT WHAT YOU SAID IS 100% CORRECT WAS THE STATEMENT OF PEOPLE WHOSE IS LOVE MARRIAGE

    ReplyDelete
  10. காலம் ரொம்ப மாறிப் போச்சி சகோ!
    பகிர்விற்கு நன்றி
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  11. முழுவதும் மாறிப் போகல தனபாலன், குழந்தைத் திருமணத்தை எதிர்த்து நமது ஜனாதிபதி அம்மாவிடம் இப்பொழுது தான் பரிசு வாங்கி இருக்கிறார்கள்

    ReplyDelete
  12. நல்லா இருக்கு
    ஜோ

    ReplyDelete
  13. நல்லா இருக்கு

    ReplyDelete
  14. thanks joe welcome to my blog
    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!