என் மகள் முகத்தில் மகிழ்ச்சியோடும்,வயிற்றில் குழந்தையோடும் எங்கள்வீடு வந்துஇறங்கினாள். இது வரை அவளை வளர்த்தது,படிக்க வைத்தது,மணமுடித்துக் கொடுத்தது எல்லாம் பெரிய விஷயம் இல்லை இன்று தாயாய் வந்து இருக்கும் அவள் தன் மடி சுமை இறக்க என்னால் ஆன உதவி செய்ய வேண்டும். என்னை சுற்றி இருக்கும் என் விருப்பத்துக்குட்பட்ட விஷயங்களின் ஏற்ற தாழ்வுகள் என் மகளை பாதிக்க கூடாதென நினைத்ததால் தான் இந்த நீண்ட விடுமுறை. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். எனது சந்தோஷ , துக்க உணர்வுகளை பதிவுலகத்தோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் நீருக்குள் அமிழ்த்தப்பட்ட ஒரு வித மூச்சுத் திணறலோடு தான் இருந்தேன்.இப்பொழுது ஒரு ஆசுவாசம் .
நான் தாய்மை உற்றகாலம் ஒரு சோதனைக் காலம்.அனுதினமும் கண்ணீரோடு தான்கழிந்தது. அதன் காரணங்கள் பலவாய் போனாலும் பிறந்த குழந்தைஅழுதுஅழுச்சாட்டியமசெய்தபோது ஒரு வயதான பெண்மணி சொன்னது என் மனதில்ஆழப்பதிந்திருந்தது."இதுக்காகத்தான் கர்ப்பிணி எந்நேரமும் சந்தோஷமாய் இருக்கணும்னு சொல்றது. நமது சந்தோசம் , கோபம் , துக்கம் எல்லாம் குழந்தையையும் தொற்றிக் கொள்ளும். " . கூடிய வரை என் மகள் சந்தோஷமாகவே இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்.
ஒன்பது மாதங்கள் முடியும் தருவாயில் இறந்த குழந்தைகளின் நினைவுகள் அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் அடிக்கடி குழந்தையின் துடிப்பை அவள் கவனிக்க வேண்டும் என்பதற்காக "என்ன,என் பேரன் என்ன சொல்றான்.முட்டுறானா?விக்குறானா?"என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.அன்று அவள் "அம்மா! எனக்கு துடிப்பு வழக்கம் போல இல்லை. குறைவாய் இருப்பது போல் இருக்கிறது" என்று சொன்னதும் பதறிப் போய் மருத்துவமனை கூட்டிச் சென்றோம் . ஸ்கான் செய்த மருத்துவர் பயப்படத் தேவை இல்லை ஆனாலும் சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு குறைவு தான் என்றார். மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும் கேள்விப்பட்ட எதிர்மறையான நிகழ்வுகள் எல்லாம் மனதில் சுனாமியாய் அலையடித்துக்கொண்டிருக்க முகத்தை மகிழ்வாய் வைத்துக் கொண்டே மகளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். "ஒரு நாளைக்கு உலகத்தில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன. இது அது போல்சாதாரணநிகழ்வு என்று எண்ணிக் கொள்ளம்மா தைரியம் பிறக்கும்" என்றேன்.
உறவுகள் எல்லாம் லேபர் வார்ட் வாசலில் கூடி இருக்க நானும் என் தாயும் ஒரு புறம் அமர்ந்து பிரார்த்தனை செய்த படி இருக்க, இரவு தரும் அமானுஷ்ய பயம் எல்லோரையும் ஒரு வித கலக்கத்தில் ஆழ்த்தி அச்சுறுத்திக் கொண்டு இருக்க அந்த இரவைக் கிழிக்கும் மின்னலாய் குழந்தையின் அழு குரல். அனைவரும் ஒருவாறு ஆசுவாசப் பட என் மனம் மட்டும் "என் குழந்தை எப்படி இருக்கிறதோ " எனத் துடித்துக் கொண்டு இருந்தது. வெளியே வந்த மருத்துவர் என் மருமகனை அழைக்க கிடைத்த இடைவெளியில் எட்டிப் பார்த்தோம். டேபிளின் மேல் ரோஜாக் குவியலாய் எங்கள் செல்வம். வெளியே வந்த மருத்துவரிடம் "டாக்டர் ! என் பொண்ணு... " என "கவலைப்படாதீங்கம்மா. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க " என்றார். நான் என் கணவனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டேன்.
பிறந்த சில நிமிஷங்கள் கழித்து அழுத காரணத்தால்குழந்தையை நர்ஸ் ICU வுக்கு எடுத்து செல்ல , அங்கே தாய்க்கும் மகளுக்குமான வன வாசம் மெல்ல முடிவுக்கு வந்தது
வனவாசம் முடிந்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteடேபிளின் மேல் ரோஜாக் குவியலாய் எங்கள் செல்வம். என்ன அருமையான ஒரு சொல்லாடல். எல்லாம் சரிதான். ஒரு விஷயம் இன்னும் மனதை நெருடுகிறது..... என்ன குழந்தைன்னு.................. சொல்லவே இல்லை....... அது தெரியாட்டி தூக்கம் வராதே..... சரி விரைவில் தெரிஞ்சிடும் என்ற நம்பிக்கையில் உறங்க செல்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...பாட்டி ஆனதுக்கு ஹஹா!
ReplyDeleteதாய்க்கும் சேய்க்கும் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வாழ்த்துகள்...!!!
ReplyDeleteமகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...
ReplyDeleteAththai,congrats to you and your daughter. Heard the news, felt good. -Jude.
ReplyDeleteநன்றி பார்வையாளன்
ReplyDeleteநன்றி விஜயன், பையன்
ReplyDeletethanks to vikky, mano and thubai raja
ReplyDeletethanks jude how is ur wife and son
ReplyDelete