Bio Data !!

23 May, 2012

சுகமான பயணம்




இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எங்க வீட்ல குட்டி பாப்பா இருக்கிறதால நான் எழுதுவதும் அது சம்பந்தமாவே தான் இருக்கும் 
தாய்மை என்பது வரம் அதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது.  காதல் திருமணம் இன்னும் பிற காரணங்களால் குடும்பத்தை பகைத்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய தாய்மைக் காலத்தில் தனிமையில் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு என் இந்த பதிவு உதவலாம். மற்றவர்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தால் ஸ்கிப் செய்து விடலாம்.

கர்ப்ப காலத்தில் நாம் சேகரிக்கும் சக்தி குழந்தை நல்ல எதிர்ப்பு சக்தியுடன் வளைய வர உதவும். எனவே அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏழாம் மாதம் தொட்டே Mothers special ஹா ர்லிக்ஸ் குடிக்கத் தொடங்கலாம்.  குழந்தைக்கு பாலூட்டும் போது அதன் பலன் தெரியும்.
பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் வித்தியாசம் தெரியாமல் பெரியவர்கள் உடன் இல்லாத போது  பயப்பட நேரிடும். சாதரணமாக இளம் பெண்கள் பிரசவ வலி என்பது வயிற்றில் ஏற்படும் என்று எதிர்பார்த்து
அடி முதுகில் (குறுக்கு) ஏற்படும் வலியை அலட்சியப் படுத்த நேரிடலாம். உண்மையில் பிரசவ வலி என்பது குறுக்கில் தான் தொடங்கும். அது பொய் வலியாய்  இருக்கும் பட்சத்தில் கீழே சொல்லிய கஷாயம் குடித்தால் சரியாகி விடும். 
சாரண வேர், குறுந்தட்டி வேர், தலா 10 கிராம் வாங்கி வீட்டில் வைத்திருக்கவும். ஒரு பெரிய தம்ளர் நீரில் கொஞ்சம் சாரண வேர், குறுந்தட்டி வேர், கொஞ்சமே கொஞ்சம் சுக்கு மூன்றும் மிக்சியில் லேசாக பொடித்து போட்டு கொதிக்க வைத்து கால் தம்ளர் அளவு சுண்ட வைக்கவும். அந்த கஷாயத்தை வடித்து குடித்தால் பொய் வலி போயே போகும். தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.

இன்று எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்து விடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கடின வேலைகள் குறைந்து விட்டது. அதுவே சுகப் பிரசவத்திற்கு வழியை தடை செய்கிறது. 
.      மாலையில் முடிந்த அளவு நடப்பது, தேய்ந்த விளக்குமாற்றால் (புதிய விளக்குமாறு குனிய வைக்காது)பெருக்குவது , துவைத்த துணிகளை குனிந்து நிமிர்ந்து அலசுவது என சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது  வயிற்றின் தசைகள் அசைந்து வயிற்றினுள் இருக்கும் குழந்தை திரும்பி சுகப் பிரசவத்துக்கான பொசிஷனுக்கு வர உதவும். 

ஒரு துளி கரு குழந்தையாய் உருவாகும் அற்புதத்தை சிந்திப்பவர்கள் யாரும் கடவுளை நம்பாமல் இருக்க மாட்டார்கள். மிகுந்த இறை பக்தியோடு கர்ப்ப காலம் என்னும் இந்த நெடும் பயணத்தை சுகமாய் முடித்து வைக்க பிரார்த்தனை செய்வது  அவசியம். 
மனதை தைரியத்தோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருங்கள். 

(  மழலையை மலர்ச்சியோடு வளர்ப்பது பற்றி அடுத்து சொல்கிறேன் )

10 comments:

  1. //ஒரு துளி கரு குழந்தையாய் உருவாகும் அற்புதத்தை சிந்திப்பவர்கள் யாரும் கடவுளை நம்பாமல் இருக்க மாட்டார்கள். மிகுந்த இறை பக்தியோடு கர்ப்ப காலம் என்னும் இந்த நெடும் பயணத்தை சுகமாய் முடித்து வைக்க பிரார்த்தனை செய்வது அவசியம்.
    //

    அனுபவத்தில் அறிய வேண்டிய உண்மை

    ReplyDelete
  2. குழந்தை வளர்ப்பை பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்

    ReplyDelete
  3. நன்றி ராஜ பாட்டை ராஜா & பாபு
    குழந்தையின் ஒவ்வொரு அழுகைக்கும் அர்த்தம் புரிந்தால் குழந்தை வளர்ப்பு ரொம்ப சுலபமே

    ReplyDelete
  4. சுகமான பயணம் தொடரட்டும்....

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    மிகவும் பயனுள்ள பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் ப்கிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!