Bio Data !!

10 May, 2012

ஒரு மஞ்சள் நிலவு !!



நகருக்குள் முக்கியமான இடத்தில் அந்த மருத்துவமனை.
இளங்காலை நேரம் 
அதைக் கடந்து செல்லும் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தலை எல்லாம் குடியரசு தின பரேட் போல் வலது புறம் திரும்புகிறதே என பார்த்தால் 
அந்த மருத்துவமனை உள்வாசல் ஓரம் ஒவ்வொரு பெண்மணியும் கையில் ஒரு சிறு துண்டும் அந்த துண்டின் மேல் மலர்ந்த புஷ்பமாய் சிசுக்களும்
இளங் காலை வெயிலிலிருந்து  கிடைக்கும் வைட்டமின் 'D'  சத்துக்காக அங்கு அப்படி ஒரு ஏற்பாடு .

என் மகள் என்னைப் போலவே மாநிறம் தான். என் கணவர் அவளை செல்லமாக "கருப்பட்டி' என்று அழைப்பார். அவள் சோர்வும் புன்சிரிப்புமாய் அவள் தந்தையை பார்க்க அவர், "   ஏ!! கருப்பட்டி ! எப்படி இவ்வளவு வெள்ளையாய் பாப்பா வந்துச்சு " என்றார் 
உடனே அவள் கணவர் " இப்போ தான் எல்லா பிள்ளையும் வெள்ளையா தானே பிறக்குது " என்றார். அவர் யதார்த்தமாக சொன்னாலும் எனக்கு ஒரு விஷயம் நெருடியது.   அங்கு வந்த நர்சிடம் 
"காலையில் இளம் வெயிலுக்காக வைத்திருக்கும் எல்லா குழந்தைகளும் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கிறார்களே" என்றேன். 
"ஆமாங்க , முந்தி எல்லாம் கர்ப்பிணி பெண்கள் சேலை கட்டி போவாங்க . சூரிய வெளிச்சம் வயிற்றில் பட்டு குழந்தைக்கு வேண்டிய சத்து கர்ப்பத்திலேயே கிடைத்து விடும். இப்போ தான் எல்லா பொண்ணுங்களும் சுடிதார்ல இருக்குது . சூரிய வெளிச்சம் எங்கே வயித்தில படுது. அதான் பிறந்த பிறகு தனியா கவனிக்க வேண்டி இருக்குது"
என்றார்கள். 
அது காரணமாக இருக்குமா ? அப்படி என்றால் வட இந்திய பெண்களின் பொதுவான உடையே சுடிதாராக தானே இருக்கிறது. இருந்தாலும் பிறக்குமபோது மஞ்சள் நிலவாக இருந்த குழந்தை நாளாக நாளாக இயல்பான நிறத்துக்கு வரும் போது அவர்கள் சொல்வதும் சரிதானோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.  

6 comments:

  1. //அது காரணமாக இருக்குமா ? அப்படி என்றால் வட இந்திய பெண்களின் பொதுவான உடையே சுடிதாராக தானே இருக்கிறது. இருந்தாலும் பிறக்குமபோது மஞ்சள் நிலவாக இருந்த குழந்தை நாளாக நாளாக இயல்பான நிறத்துக்கு வரும் போது அவர்கள் சொல்வதும் சரிதானோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.

    //


    எனக்கும் அதே சந்தேகம் தான் சகோ

    ReplyDelete
  2. ஒரு தங்க தொட்டிலில் பொன் மஞ்சள் நிலவு, வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  3. nandri mano,"oru thanga rathaththil pon manjal nilavu" enna arumaiyaana paadal

    ReplyDelete
  4. குட்டி பையன் தான் மௌன குரு

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!