நாட்டில தலை போகுற காரியங்கள் பல நடக்கும் போது நாம புத்தகத்தை வாசித்துக் கிட்டு அதை விமர்சனமும் செய்து கொண்டு இருக்கிறோமேனு தோணினாலும் நிறைய விஷயங்களில் நமது மனதுக்கு சரி என்று படுவதை சொல்ல முடியாத காரணத்தால் பிரச்னை இல்லாத இந்த பகுதியை தொடருகிறேன்.
சில வருடங்கள் முன்னால விஜய் டி வீ யில் பூர்வ ஜென்மத்தில் தான் அக்பரின் மனைவி என்று சொல்லி ஒரு நிகழ்ச்சி நடந்தது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அப்போவே எங்க அம்மா இந்த பொண்ணு எங்க பள்ளி மாணவி என்று சொன்னார்கள். அவர்கள் எழுதிய "தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும் " என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது. ஆசிரியர் அருணா பாஸ்கரன். ஆடலில் சிறந்த மாணவி, விளையாட்டில் ஸ்டேட் லெவல் மாணவி என்று பல விஷயங்கள் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மாணவியை என் தாய் நினைவில் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
ஆசிரியரின் தொலைபேசி எண் கிடைத்ததால் தொடர்பு கொண்டு என் தாயை நினைவு இருக்கிறதா எனக் கேட்டேன். "டீச்சரிடம் நான் ஏகப்பட்ட வசவு வாங்கிக் கட்டி இருக்கிறேன். அது எப்படி மறக்கும் " என்றார்கள். விஜய் டி வீ நிகழ்ச்சியை பற்றிக் கேட்டப் போது அமானுஷ்ய அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு நிகழ்சிக்காக கேட்டு இருக்கிறார்கள். உடன அருணா அவர்கள் தொடர்பு கொண்டு "அமானுஷ்ய அனுபவம் " என்றால் என்ன என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் "சிலர் பேயை சந்தித்து இருப்பார்கள், சிலர் இறை சக்தியை. சிலருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் கூட வந்து இருக்கலாம் " என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுது தான் தான் பூர்வ ஜென்மத்தில் ஜ்யோதாபாய் அக்பராக இருந்ததாக தனக்கு அடிக்கடி தோன்றுவதாக கூறியதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது.
இறை பக்தி மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் அதனாலேயே பல முறை கடவுள்களையும் சித்தர்களையும் கனவில் கண்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். நாம் பல விதமான கனவுகள் காண்கிறோம். ஆனால் கடவுளர்கள் கனவில் வருவது ரொம்ப அபூர்வமாகத் தான் இருக்கிறது. அண்மையில் கூட பாடகி சுதா ரகுநாதன் தனது கனவில் ஒரு தடவை கூட பிள்ளையார் வந்ததே இல்லை என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அருணா அவர்களுக்கு சித்தர்கள் கனவில் வருவது வருடத்திற்கு இரு முறை நடப்பதாக இருந்திருக்கிறது.
'பூர்வ ஜென்ம நினைவு என்பது சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய ஒரு இனிமையான உணர்வு அல்ல " என்கிறார் அருணா. தொண்டையில் எதுவோ சிக்கி துப்பவும் முடியாத விழுங்கவும் முடியாத துயரம் தான் அது" என்கிறார்.
தன் ஆசையாக ஒன்றை சொல்கிறார். கார் நிறைய போர்வைகளை அள்ளிச் சென்று டெல்லியில் குளிரில் உறங்கும் ஏழைகளுக்கு அவர்கள் அறியாமல் போர்த்தி விட வேண்டும் என்கிறார். அங்கே அவரது அழகான மனம் தெரிகிறது. இவரது கணவர் ரோட்டரி கவர்னராக இருந்த காலத்தில் கிடைத்த ஷால்களை சென்னையில் சிக்னலில் கார் நிற்கும் போது கையேந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது.
இவரது பிள்ளைகள் இவரது அனுபவங்களை நம்பாமல் இருந்தாலும் , இவரது கணவர் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் போகப் போக முழுமையாக நம்பி இருக்கிறார்கள். புத்தகத்தின் முன்னுரையாக திரு பாஸ்கரன் "இந்த புத்தகத்தில் அவள் எழுதி இருக்கும் ஒவ்வொரு சம்பவமும் நிகழ்ச்சியும் உண்மையாக நடந்தவை. அவளின் ஒவ்வொரு நினைவுகளும் , உணர்வுகளும் அவள் உண்மையாக அனுபவித்தவை " என்று எழுதி இருப்பதே அதை உறுதி செய்கிறது. வித்தியாசமான் வாசிப்பு .
அருணா அவர்கள் ஒரு பிரபலமான குடும்பத்தின் அங்கத்தினர். அவர் யார் என்பதை விரைவில் பகிர்கிறேன்
பகிர்வுக்கு நன்றி........
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.... தங்களின் அடுத்த பகிர்வு எப்போது...?
ReplyDeleteநன்றி பிரியா
ReplyDeleteநன்றி தனபாலன் .விரைவில் வெளியிடப்படும்
ReplyDelete