படத்தின் பெயர் : மழையத்து
அமேசானில்
டைரக்டர் : சுவீரன்
ஹீரோ. : நிகேஷ் ராம்
ஹீரோயின் :அபர்ணா கோபிநாத்
குழந்தை நட்சத்திரம்: நந்தனா வர்மா.
கொஞ்சம் பலவீனமான மனம் படைத்தவர்கள் பார்க்காமல் தவிர்த்து விடலாம்.
இந்த கொரோனா காலத்தில் சிலர் வலிக்கும் விஷயங்களைக் கூட தவிர்த்து விடுகிறார்கள். அவர்களும் விலகிச் செல்லலாம்.
ஒரு பதின் பருவத்து பெண் குழந்தையும் அதன் பெற்றோரும் கடந்து வரும் கடினமான பாதை தான் கதை.
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவு மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது.
எனக்கும் என் தந்தைக்கும் இடையே இருந்த அந்த குறுகிய கால நட்பு. கண்டிப்பும் கனிவும் கலந்தது. அதன் நினைவுச் சுகந்தமானது.
பதின் பருவத்தில் பிள்ளைகள் மனத்தால் குழந்தைகளாகவும் உடலால் வளர்ந்தும் இருப்பார்கள். அது வரை இருந்தது போல் அல்லாமல் அப்பா அண்ணன் தம்பி ஆண் நண்பர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கச் சொல்லித் தரும் தாய் மகளுக்கு எதிரியாகிப் போவது அந்த நேரம் தான்.
சுற்றி மலையும் மரங்களும் சூழ்ந்திருக்க கூடுதலாய் சின்ன சின்ன தொட்டிச் செடிகளுமிருக்க அந்த வீடே ஒரு கவிதை.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக வருபவர் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான சாந்தி கிருஷ்ணா.
படம் பார்த்து முடித்ததும் என் மனம் உச்சரித்தது " பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் பத்தாது பத்திரமா பார்த்துங்கங்க"
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!