"டைட்டஸ் ஆன்ட்ரானிக்கஸ்"
வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய நாவலின் தமிழ் வடிவம் ஜே. கே ராஜசேகரன்.
பதிப்பகம் : அவர் பதிப்பகம்
இது ஷேக்ஷ்பியர் எழுதியதுதானா இல்லை வேறு ஒருவர் எழுதியதை பட்டி டிங்கரிங் பார்த்து அவர் தன் பெயரில் போட்டுக் கொண்டதா என்ற வாக்குவாதம் பல வருடங்கள் நடந்து பின் அவர் எழுதியது தான் என்று ஒத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
பாமர ரசிகனை ஈர்க்கக்கூடிய கொஞ்சம் பாலியல் சங்கதிகள் மெல்லிய நகைச்சுவை போன்றவை இதிலும் உண்டு.
எனக்கு பொதுவாகவே புத்தகங்களை பற்றி எழுதுவது ரொம்ப பிடிக்கும். இந்த புத்தகத்தை பற்றி எழுதுவதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். காரணம் தமிழில் மொழி பெயர்த்திருப்பது என் கொழுந்தன் என்பதால். என் கணவருக்கும் எனக்கும் இந்த புத்தகத்தை டெடிகேட் செய்திருப்பதால்.
ஷேக்ஸ்பியர் மேல் இவ்வளவு காதல் கொண்டு அவருடைய 37 நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டார். "அவர் " பதிப்பகம் என்ற ஒன்றும் தொடங்கி இருக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்களை பலர் தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும் அத்தனை நாடகங்களையும் எத்தனை பேர் மொழி பெயர்த்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் இவர் தன் ஆர்வத்தை சொன்ன போது எத்தனை பேர் ஆர்வமாக வாசித்து விடுவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போது அவரது முக நூல் பக்கத்தில் அவரது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது. அவரது எண்ணம் போல் அத்தனை நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தகத்தை பொறுத்த வரை வெளி நாட்டு பெயர்களுடைய கதா பாத்திரங்கள் நிறைய வருவதால் கதையோடு ஒன்ற ஆரம்பத்தில் சிரமமிருந்தது. ஆனால் நான் வாசிக்கும் இடத்தை மாற்றி அமைதியான ஒரு பூங்காவில் இள மாலை வெயில் புத்தகத்துக்கு கதகதப்பு ஊட்ட வாசிக்கும் போது அனுபவிக்க முடிந்தது.
இன்று ஆசிரியர் ஒரு அறிமுகம். நாளை புத்தகம் பற்றி எழுதுகிறேன்
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!