23 December, 2023
அன்று Water water everywhere. Not a drop to drink. என்று எழுதியவர் இதே போல் ஒரு வெள்ளத்தை சந்தித்திருப்பாரோ?
சுற்றிலும் நீர் மலையாய் உயர்ந்து நிற்க , நீர் அருந்தி மூணு நாட்கள் ஆனதாக ஒருவர் சொல்கிறார். என்ன கொடுமை.
48 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்மசுக்கு புதுத் துணியெல்லாம் எடுத்த நிலையில் எங்க அப்பா தவறிப் போன நிகழ்வு இப்போ ஞாபகத்துக்கு வருது. அதே டிசம்பர் 18. வெள்ளப் பெருக்கு. எத்தனை குடும்பங்களில் மரணம் நிகழ்ந்து துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறதோ. எத்தனை ஏழைப்பட்ட குடும்பங்களில், குழந்தைகள் பண்டிகை கொண்டாட குதூகலமாய் வாங்கி வைத்த பொருட்கள் தண்ணீரோடு போனதோ.
சின்ன சின்ன வீடுகளில் கூட, குருவி போல் சேர்த்து , வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வைத்திருக்க , அத்தனையும் தண்ணீருக்குள் நீச்சல் பயின்று கொண்டிருந்த கொடுமை.
மதம் தாண்டி மனிதம் விஸ்வரூபமெடுத்து உதவிக் கொண்டு இருக்கிறது. பலருக்கு ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்க வேண்டிய அவலம். இந்த நேரத்தில் அரசியல் கலக்க கூடாது.
நாம் கவனமாய் இருக்க வேண்டிய
கால கட்டம் மிக அருகில் வந்து விட்டது. ஒரு வரலாற்றுப் பேரழிவு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த செய்தியை செய்தித் தாளில் நினைவூட்டியது. அதனால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனத் தைர்யமாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். . அந்த, கால இடைவெளி சுருங்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பல காலமாக குளோபல் வார்மிங் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அதை பெரிதாகவே எடுக்கவில்லை. இத்தகைய இயற்கை அழிவுகளில் க்ளோபல் வார்மிங்கின் பங்கும் ஓரளவு உண்டு என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதும், குறை சொல்வதும் கதைக்கு உதவாது. நம்மைச் சுற்றி உள்ள இடத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பாதகமான காரியங்கள் நடக்கும் போது, யாரோ கேட்பார்கள் என்று இருக்காமல் தடுக்க வேண்டும்.
இன்றைய தலைமுறை அன்றாட பாடுகளை மட்டும் பார்த்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறார்கள். அது தவறு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் யோசிக்க வேண்டும் என்று தெளிவுக்கு வந்திருப்பார்களா?
மனம் மழை தவிர வேற எதையும் யோசிக்காததாய் இருக்கிறது. ஆனால் நாம் எந்த துயரத்திலும் தேங்கி நிற்பவர்கள் இல்லை. மீண்டு விடுவோம். இப்போதும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!