Bio Data !!

05 October, 2026

எழுத்தாளர் ஆன்டோ ரூபன் "குமிழ் முனை விருது விழாவில்" பேசினார். "The happiest man in the world" என்ற புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அது நாஜி படைகளிடம் மாட்டிக் கொண்ட ஒருவன் தன் பரிதவிப்பை வேதனையை எழுதிய புத்தகம் என்றார். அவர் மேலும் சொன்னது " புனைவு, அல் புனைவு என்ற இரு வகை எழுத்துகளில் அல் புனைவு எழுதுவது கடினமானது. பெரும் உழைப்பு தேவைப்படுவது . ஆனால் வலுவானது என்றார். பூடகமாக எழுதுவது சமூக அவலங்களை ஓரளவு அறுக்கலாம். ஆனால் documentaton தான் முழுதுமாக அறுக்கும்." இது சரி தான் நாம் சமூக ஊடகங்களில் தவறுகளை எதிர்க்கும் போது பட்டும் படாமலும் எழுதினால் சம்பந்தப்பட்டவர்களும் கண்டும் காணாமல் போய் விடுவார்கள். "அல் புனைவு எழுதும் போது இரண்டுவகை நேர்காணல்கள் அவசியம் என்றார். 1) சம்பந்தப்படவரிடம் ஒரு நேர்காணல். 2) அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட நிபுணரிடம் ஒரு நேர்காணல். " நன்கு படிக்காத ஒரு மாணவனை தனக்கு தகவல் கொடுப்பவனாக வைத்துக் கொண்டதாக ஒரு ஆசிரியர் சொன்னது எனக்கு அவ்வளவாக மனது ஒப்பவில்லை. எனது வழக்கமே நல்லதை எடுத்து அல்லதை நீக்குதல். அதனால் அவர் பேசியதில் உள்ள நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!