Bio Data !!

11 March, 2010

நானொரு கவிஞன் ஆகணும்!

தாய் மடி
கண்டு குதிக்கும்
கன்றின் கருவிழிகள்!

கனவுத் தேவதை
கை அசைக்க
குமிழியிடும் குழந்தைச் சிரிப்பு!

வசம்பு வளையல்
நாவில் பட, இதென்ன? என்னும்
மழலையின் முகச் சுளிப்பு!

பெண் குழந்தை
சுமந்து வரும்
தாய்மையின் பேரழகு!

இணை தேடி
குரல் எழுப்பும் அக்குக்கூ
பறவையின் சோக கீதம்!

என என் ரசிப்புகள்
கர்ணன் இழுத்த கை வளை
முத்துக்களாய் சிதறிக் கிடக்க

'எடுக்கவோ கோர்க்கவோ '
என கவிதை செய்யும்
துரியோதனச் சிந்தனைக்காய்
காத்து இருக்கிறேன்

நானொரு கவிஞன் ஆக வேண்டும்!!

12 comments:

  1. இப்போதே பாதி கவிஞன் ஆயிட்டீங்க... :)

    ReplyDelete
  2. Chella naaykkuttti manasu ithu ungkaL paarvaikku

    அரசியல் வியாதின்னு யாரை பற்றிப் போட்டாலும் எல்லோரும் அதை கிண்டல் பண்ணி அடுத்த எலக்க்ஷன் வரை ஞாபகம் வைச்சிருந்து எதிர்பதிவு போடுவாங்க ஏதோ நாம சப்போர்ட் பண்ணித்தான் அவங்க பெரியாளா ஆன மாதிரி நாய்குட்டி மனசு எனவேதான் கணவன் சொல்லே மந்திரம்னு அரசியல் பினாமியா இருந்த ரப்ரி தேவியை போட்டேன் அதாவது இந்தியாவை ஒரு குடும்பத்தலைவி கூட ஆளலாம்னு

    ReplyDelete
  3. 'எடுக்கவோ கோர்க்கவோ '
    என கவிதை செய்யும்
    துரியோதனச் சிந்தனைக்காய்//

    அருமை நாய்க்குட்டி மனசு துரியோதனின் ஒரே நல்ல குணத்தை உங்கள் கவித்தைத் தேட்டைக்கு ஒப்புமை கூறி அவனை உயர்வித்தமைக்கு

    ReplyDelete
  4. நீங்க கவிதாயினி ஆயிட்டீங்க.

    ReplyDelete
  5. நன்றி சிவா, ம்ம்ம்ம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்.

    ReplyDelete
  6. நன்றி தேனம்மை, துரியோதனனின் அந்தக் குணம், நட்பையும் மனைவியையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாய் நம்பும் சிறப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.

    ReplyDelete
  7. நன்றி தமிழ்
    அப்படிச் சொல்லாதீங்க, இன்னும் எழுதலாம் போலன்னு தோணுது.

    ReplyDelete
  8. அதான் ஆயிட்டீங்களே

    ReplyDelete
  9. என்ன ஜி ! ரொம்ப நாளா எங்க பேட்டை பக்கம் காணோம். பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  10. கவிதை நல்லா இருக்கு..உங்கள் தளத்திற்கு முதன் முதலாய் வருகிறேன். சிறுகதைகள் நல்லா இருக்கின்றன., தொடருங்கள்..

    ReplyDelete
  11. நன்றி நாடோடி ;தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    தொடர்ந்து படியுங்கள், உற்சாகம் கொடுங்கள். நன்றி

    ReplyDelete
  12. அப்பாவின் நண்பர் மரியாதைக்குரியவர்
    அப்பாவை போலவே...
    கவித்துவமான எல்லாமே
    கவிதைதான்....
    இந்த வரிசையில்
    உன் கவிதைகள் முதல் வரிசைக்கு போகும்
    நாள் வெகு தொலைவில் இல்லை...
    ஒரு கவிதைதான் படித்தேன்...
    அட்டகாசம் தோழி ...!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!