Bio Data !!

29 March, 2010

சந்தேகக் கேடு - பாகம் 2

அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. அம்மா மடியில் படுத்து சத்தம்வராமல் அழ வேண்டும். தன் உடல் அதிர்வை வைத்தே தன் அழுகையைக் கண்டுபிடித்து மெல்ல தட்டிக் கொடுப்பாள். அம்மாவை உடனே பார்க்கணும் போல்இருந்தது.

வெளியிலிருந்து வந்த நவீன் வேக வேகமாக தன் உடைகளை சூட்கேசில் அடைத்தான். "புறப்படு கவி, நாம ஊருக்குப் போறோம். எட்டு மணிக்கு பஸ். "

அவளுக்கு அப்பாடா னு இருந்துச்சு. வீட்டுக்கு போயாச்சுன்னா எல்லாம் சரி ஆயிடும். ஆனால் அங்கேயும் கவி தப்புக் கணக்குத்தான் போட்டாள்.

நவீனின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ் அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டு வாசலில். அவர்களின் பின்னால் முகமும் கண்களும் வீங்கிப் போய் அவளின் அம்மா. கவிக்கு ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எப்படி இத்தனை நாளும் அம்மாவும் அப்பாவும் தவித்துப் போயிருப்பார்கள்னு தோணாம இருந்தது. அப்பா கையில் இப்போ நான் கிடைத்தால் நரசிம்மன் போல் ரெண்டாய்ப் பிளந்திடுவார் போல இருந்தது.

"ரெண்டு பேரும் ஸ்டேஷன் க்கு வாங்க, ஐயா வரச் சொன்னாங்க."காவல்காரர் காத்திருந்த சலிப்பில் சொன்னார். பெண்ணை அடையாளம் காட்டுவதற்க்காக பெற்றவர்களும் வந்திருந்தாங்க.

"இப்போ தான் வெளியூரில் இருந்து வரோம். கொஞ்சம் நேரமாகும்." என்றான் நவீன்.

"அடியே பாதகத்தி, எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணி இருப்பே." கவியின் தோள் இரெண்டையும் பிடித்து உலுக்கியபடி கதறினாள் தாய்.

"அப்படியே அம்மாவோட ஓடிடலாமா? இவரோட காலம் முழுதும் கழிக்க முடியுமா?" சில நொடிச் சலனம் அம்மாவின் கதறலில் இறுகியது.
அலட்சியமாக கைகளை உதறினாள், "நாங்க ரெண்டு பேரும் மேஜர் தான். முறைப்படி திருமணம் முடித்து தான் வந்திருக்கிறோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" னு வந்த போலீசிடம் சொன்ன படி நவீனைப் பின் தொடர்ந்தாள்.

"ஐயோ, வாழ வந்த வீட்டுக்கு இடது காலை உள்ள வைச்சு போறாளே" பெற்ற மனம் பதறியது.

இன்ஸ்பெக்டர் அவர்கள் கொண்டு வந்த சான்றிதழ்களை சரி பார்த்து பெண்ணைப் பெற்றவர்களிடம் "சட்டம் அவர்களுக்கு சாதகமாகத்தான் சொல்லுது." அவர்கள் போகலாம் என்னும் படி தலை அசைத்து ரெத்தமும் சதையும் துடிக்க பெற்று வளர்த்த மகளை பேப்பரும் பென்னும் கொண்டு எழுதிய சட்டத்தால் பிரித்தார்.

படிக்க அனுப்பிய பெண்ணைப் பறி கொடுத்த பெற்றோர் நவீனின் வேலையைப் பறித்தனர். நவீன் தன் திறமையால் சீக்கிரமே அடுத்த வேலைக்கு போய் விட்டான்.

இன்று புதிய வேலையில் சேர வேண்டும். காலையிலிருந்தே குட்டி போட்ட புலி போல கவியைச் சுற்றி சுற்றி வந்தான். அவன் இடுப்பைக் கட்டிப் பிடித்தபடி "ம்ம்ம்ம், கிளம்புங்க இப்படியே பார்த்திட்டு இருந்தா எப்படி. " கொஞ்சினாள்.

'இல்ல கவி, இந்த ஏரியா ரொம்ப மோசம் ..... இப்போ வேலை கிடைச்சு இருக்கிற இடம் வேற ரொம்ப தூரம்..... உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் வீட்டிலேயே இருக்கு..... அதனால ....."

"அதனால...."

"நான் வீட்டைப் பூட்டி சாவியைக் கொண்டு போறேன்.சாயங்காலம் சீக்கிரமா வந்திறேன். வந்து உன்னை வெளியே கூட்டிப் போறேன் "

"என்னது, என்ன உள்ள வைச்சு பூட்டிட்டு போறீங்களா? "

" உன் பாதுகாப்புக்குதான்"

" என் பாதுகாப்புக்கு கதவைப் பூட்டி உள்ளே இருக்கத் தெரியாதா?" அவள் குரலில் கோபத்தைக் கண்டவன், உடனே மிருகமானான்.

"எல்லாம் எனக்குத் தெரியும் உள்ளே போடி" இடது கையால் அவளை உள்ளே தள்ளியபடி வலது கையால் கதவைப் பூட்டி வேகமாக வெளியேறினான்.

திகைத்துப் போய் ஜன்னலில் நின்று அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் ஒரு வடைக்காரர். சின்ன அடுப்பு எந்நேரமும் தகதகவென எரிந்து கொண்டிருக்கும். ஜன்னலில் சாய்வாக முகத்தை சாய்த்த படி நின்ற கவியைப் பார்த்து," எப்படி தாயீ, இந்த ராட்ஷஷன்ட மாட்டினே. நான் ஒரு பத்து வருஷமா இங்கே தான் கடை போட்டிருக்கேன். மூத்தாளை படுத்தினான் பாரு, அவ செத்த அன்னைக்கு ஒரே சண்டை. இவனே கொளுத்தி இருப்பான். சிலிண்டர் வெடிச்சிடுச்சின்னு கதை விட்டுட்டான். சுத்து முத்தும் ஒரு ஆளிட்ட பேச மாட்டான். பார்த்து சூதனமா இருந்துக்க தாயீ."

எதுவும் பேசாமல் கட்டிலில் போய் விழுந்தாள்." தவறு செய்து விட்டோமோ. எப்படி சமாளிக்க போகிறோம். என்ன ஒரு மாதம் தானே ஆச்சு. அம்மாவிடம் பேசிப் பார்ப்போமே. கோபப்பட்டாலும் சரியான வழி சொல்வாளே. " போன் ரிசிவர் எடுத்து நம்பர் டயல் செய்தாள். " உங்கள் தொலை பேசியில் இந்த வசதி இல்லை." ஒரு அக்கா நிறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவள் கை நடுங்கத் தொடங்கியது. கூடுக்குள் மாட்டிய எலி போல் மனம் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. "மாட்டிக் கொண்டோமோ"

திருமணம் ஆன உடனே எதோ காரணம் சொல்லி தன் செல் போனை வாங்கி வைத்துக் கொண்டான். தான் நிராதரவாக இருப்பதாகப் பட்டது. கொஞ்சம் கோபக் காரன் ஆனாலும் நல்லவன் தான். ராத்திரி சந்தோஷமா இருக்கும் போது சொல்லி பார்க்கலாம். ச்சே! அந்த வடைக்காரர் எதோ குழப்பி விட்டுட்டார். எல்லாம் சரி செய்து விடலாம் ." தனக்குத்தானே தைரியம் சொல்லி ரேடியோவை ஆன் செய்து பிரம்பு ஊஞ்சலில் சாய்ந்து மெல்ல ஆடிக் கொண்டே சிந்தனையிலிருந்து விலக முயற்சித்தாள்

(இன்னும்)

18 comments:

  1. க‌தை ந‌ல்லா போகுதுங்க‌.. அடுத்த‌ பாக‌த்திற்கு வெயிட்டிங்.. இதை க‌தை தானே? உண்மையா?

    ReplyDelete
  2. என்னால‌ உங்க‌ளுடைய‌ வோட்டு ப‌ட்டையை பார்க்க‌ முடிய‌வில்லை.. எங்கு வைத்துள்ளீர்க‌ள்..அல்ல‌து இன்னும் நீங்க‌ள் அதை சேர்க்க‌ வில்லையா?

    ReplyDelete
  3. waiting for next part... please write soon

    ReplyDelete
  4. கதையை படித்து கொண்டு வருகிறேன்.

    ReplyDelete
  5. நன்றி நாடோடி, கதை தான், ஆனால் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். வோட்டுப்பட்டை சேர்த்தாச்சு போட்டுடுங்க.

    ReplyDelete
  6. கதையைப் படியுங்கள், அப்படியே ஒரு ஓட்டையும் போட்டுடுங்க, நாமளும் ஜோதியில கலந்தாச்சு

    ReplyDelete
  7. கதை ரொம்ப அருமையா த்ரில்லிங்கா போய்கிட்டு இருக்கு செல்ல நாய்க்குட்டி மனசு தொடருங்கள்

    ReplyDelete
  8. உங்க‌ளுடைய‌ சில‌ இடுகைக‌ள் மிஸ் ஆகுது.. அதுவும் என்ன‌ என்று பாருங்க‌ள்.. உதார‌ண‌மாக‌ இந்த‌ க‌தையில் முத‌ல் பாக‌ம் என்னுடைய‌ பிளாக்கில் தெரிய‌வில்லை.. நான் உங்க‌ளுடைய‌ பாலோவ‌ராக‌ இருக்கிறேன்.

    ReplyDelete
  9. ம்...கதை சூடு பிடிக்க‌ ஆர‌ம்பிச்சிருக்கு :)

    ReplyDelete
  10. நன்றி தேனம்மை, போட்டோ மாத்தியாச்சு போலிருக்கு, நல்லா இருக்கு

    ReplyDelete
  11. அது தான் எனக்கும் புரியல நாடோடி, செட்டிங்க்ஸ் ல தேதி மாத்தினா followers க்கு போக மாட்டேன்னுது. எப்படி சரி செய்றதுன்னு தெரியல.
    தெரிஞ்சா சொல்லுங்க

    ReplyDelete
  12. கதை த்ரில்லா போகுதுங்க..!

    //ரெத்தமும் சதையும் துடிக்க பெற்று வளர்த்த மகளை பேப்பரும் பென்னும் கொண்டு எழுதிய சட்டத்தால் பிரித்தார். //
    இந்த வரிகள் டச்சிங்க...

    வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் கவியையும் எங்களையும் நீண்ட நேரம் தவிக்கவிடாமல், அடுத்த பாகத்தை விரைவில் போடுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    -
    DREAMER

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிட்ட வரிகள் நானே ரசித்து எழுதிய வரிகள். தான் பெற்ற பெண்ணை இழக்கும் துடிப்பு கொடியது.

    ReplyDelete
  14. முந்தின கமெண்ட் ட்ரீமர் உங்களுக்கு, பெயர் சொல்ல மறந்து விட்டேன், மூன்றாம் பாகம் எழுதியாச்சு , பாருங்க.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!