Bio Data !!

14 March, 2010

தொடர் பதிவு !

ட்ரீமர் இன் தொடர் பதிவில் எனது பெயரைப் பார்த்தது, ஒரு !!! இப்போல்லாம் எனது பெயரைக் கூப்பிடும் போது திரும்பிப் பார்ப்பதை விட யாராவது " நாய்க்குட்டி " என்றால் திரும்பத் தோன்றுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்:

எனக்குப் பிடித்த பத்து பெண்கள்.

சட்ட ரீதியாக பிடித்த பெண்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. ஆனால் "நானாக" இருக்கலாம் அல்லவா? எனக்கு மிகவும் பிடித்த பெண்களில் "நான்" கண்டிப்பாக உண்டு. ஆனால் இப்போதைய நான் இல்லை. இளமையில் நான். காதலித்து, தந்தையை இழந்து, உற்றார் உறவினரை எதிர்த்து, தகுதி இருந்தும் வேலை கிடைக்காத ஒருவரை எனது அரசாங்க வேலையை நம்பி மணந்து இன்று வாழ்வில் ஜெயித்து உறவினர்களுக்கு உகந்த பிள்ளையாய் உயர்ந்த என்னை எனக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்.

எனது மூன்றாம் வகுப்பு பாமா டீச்சர் . நல்ல உயரம், சிவந்த நிறம், கண்ணாடி அவர்கள் புத்திசாலித்தனத்தை கூட்டிக் காட்டும் . ஆங்கில மீடியத்தில் படித்த நான் வகை தொகை இல்லாமல் மோசமாக வகைக் கணக்கு எழுதியதைப் பார்த்து அப்பா பிடிவாதமாக தமிழ் மீடியம் மாற்ற வேண்டும் என்றார். போராடிய பாமா டீச்சர் அப்பாவின் பிடிவாதத்தின் முன் தோற்றுப் போனார். தமிழில் படித்தும் நல்ல நிலைக்கு வந்து விட்டேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்.

என் பள்ளித் தோழி பாத்திமா. ஒரு நாள் ஒரு மனிதர் தன்னை பாத்திமாவின் கணவர் என்று அறிமுகப் படுத்தி, அவளுக்கு ரத்த புற்று நோய் இருப்பதால் விரைவில் தொலைபேசி இணைப்பு பெற வழி உண்டா என்றார். அவளை நேரில் சென்று பார்த்த நான் அடக்க முடியாமல் அழுதேன் நோயின் தீவிரத்தைப் பார்த்து. இன்று அவள் தன் மனவலிமையால் நோயிலிருந்து மீண்டு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் நலமாக இருக்கிறாள். எனக்கு தெரிந்து ரத்த புற்று நோயில் இருந்து மீண்டவர் யாருமில்லை. அவள் தீவிர தெய்வ நம்பிக்கையும் மன உறுதியும் பிடிக்கும்.

திரைப்பட நாயகி சரிதா. அந்தக் கண்களும் அது காட்டும் உணர்ச்சியும் திரு பால சந்தரின் அறிய கண்டுபிடிப்பு. இளமையில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். நடிப்புலகில் இருந்து அவர் விலகி இருந்த காலத்தில் அவர் உருவம் விஸ்வ ரூபம் எடுத்து விட அதற்கு பொருத்தமாய் "ஜூலி கணபதி" யிலும் கலக்கியவர்.

" லவ் யு ஸோ மச் சரிதா "

ஓட்ட பந்தய வீராங்கனை சாந்தி, கிராமத்துப் பெண், தன் வாழ்வின் இலட்சியத்தை அடைய பட்ட பாடுகள் எல்லாம் ஒரு பரிசோதனையில் புஸ்வாணமாகிப் போக தளர்ந்து விடாமல் கிராமப் பெண்களுக்கு பயிற்றுவிக்கும் சாந்தி. இங்கு எனக்கு ஒரு சந்தேகம். யாரும் அடிக்க வந்து விடாதீர்கள். பெண்மையின் சாயல் மிகக் குறைவாக உள்ள சிலர் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் கோப்பை பெறுகிறார்களே அவர்களுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் உண்டா?
குயில் குரல் சுசீலா அம்மா . வெகு சிலருக்கு மட்டுமே குரலும் பாவமும் அற்புதமாய்ப் பொருந்திப் போகும். "தூக்கமும் கண்களை தழுவட்டுமே " என அவர் பாடும் போது நம்மையும் அறியாமல் நம் இமைகள் சொருகும். தனக்கென ஒரு பாணியைத் தெரிந்தெடுத்து இறுதி வரை ஒரே பாதையில் பயணித்தவர். சுசிலா அம்மாவுக்கு ஒரு ராயல் சல்யூட் .

ஒரு முஸ்லிம் பெண் எந்த துறையிலும் உயர்ந்தவராக வருவது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும் . அதிலும் அரசியல் என்றால் கேட்கவே வேண்டாம். இரு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனசிர் புட்டோ . பல முறை சாவின் பிடியில் இருந்து தப்பித்தவர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமாதானத் தூதை தொடங்கி வைத்தவர். முக்காடிட்ட முகமானாலும் முன் இருப்பவரை மலர வைக்கும் பெனசிர் புட்டோ ரொம்ப பிடிக்கும் .

உயர்ந்த போலீஸ் பதவி பெற்ற பெண்மணி கிரண் பேடி. மிகவும் ரசிக்கப்பட்ட இந்தியர்களில் ஐந்தாவது இடத்தைப் பெற்றவர். readers digest நடத்திய சர்வேயில் நாட்டின் நம்பகத் தன்மை வாய்ந்த இந்தியர்களில் மூன்றாவது இடத்தை பெற்றவர். நோ பார்கிங் யில் நின்றதற்காக இந்திரா காந்தியின் காரையே கிரேன் மூலம் அகற்றியவர். என் ஆதர்ச நாயகி.


எழுத்தாளர் சிவசங்கரி, எங்கள் கல்லூரி நாட்களில் சிவசங்கரி யும், இந்துமதியும் இன்றைய விஜையும், அஜித்தும் போல. அவர்களை கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து ஒரு பட்டிமன்றமே நடக்கும். சிவசங்கரி கண் தானம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்து நிறைய பேர் கண் தானம் பண்ணி இருக்கிறார்கள். அவர் எழுதிய "அவன்" கதை பலரைப் பாதித்தது. எழுத்துத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தவர் சிவசங்கரி.

அன்னை தெரேசா. இவர்களைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. தான் முகத்தில் காறித் துப்பிய மனிதனிடம் "எனக்கு உரியதை கொடுத்து விட்டாய் என் குழந்தைகளுக்கு உரியதைக் கொடு" என்ற பணிவில் பதில் ஒரு பங்காவது பெற்று விட வேண்டும் என்பது தான் என் நெடுநாளைய ஆசை.

என் வாழ்வில் நான் ரசித்த பலரில் சிலரைப் பற்றி கூறி இருக்கிறேன். அடுத்து யாரவது ரசித்த ஆண்களைப் பற்றி எழுதினால் கண்டிப்பாக தொடருகிறேன். அவர்களில் சிலரும் குறிபிடத்தக்க வேண்டியவர்கள்.
கீழ் காணும் நண்பர்களே என்னைத் தொடருங்களேன் பிடித்த பெண்களைப் பற்றிய பதிவை.

சிவாஜி சிறகுகள் - நீங்கள் கவிதை தான் எழுதுவீங்கனு தெரியும் .பிடித்த பெண்களைப் பற்றி கவிதையாய் எழுதுங்களேன்.
அன்புடன் மணிகண்டன்
பின்னோக்கி
அண்ணாமலையான்
ரகு
குறிப்பாக ஆண்களை அழைத்ததற்கு காரணம் உண்டு

13 comments:

  1. இளமையில் நான். காதலித்து, தந்தையை இழந்து, உற்றார் உறவினரை எதிர்த்து, தகுதி இருந்தும் வேலை கிடைக்காத ஒருவரை எனது அரசாங்க வேலையை நம்பி மணந்து இன்று வாழ்வில் ஜெயித்து //
    Hats Off..

    என்னை எனக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்//
    மிகசரி நமக்கு நம்பளையே பிடிச்சிருக்கனும்.. நமக்கே பிடிக்கலைன்னா வேற யாருக்கு பிடிக்கும்.??

    தமிழில் படித்தும் நல்ல நிலைக்கு வந்து விட்டேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்.//
    சீக்கிரமா சொல்லிடுங்க.. :)

    மனவலிமையால் நோயிலிருந்து மீண்டு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் நலமாக இருக்கிறாள். //
    அன்னார் பல்லாண்டு வாழ பிராத்திக்கிறேன்..

    திரைப்பட நாயகி சரிதா. //
    எங்க அப்பாவோட favorite :)

    மத்தபடி அனைவருமே தெரிந்த முகங்கள்
    அருமையான அறிமுகம் வாழ்த்துக்கள்..

    .
    .
    .
    லாஸ்ட்டா
    ஹீரோ Introduction ஹெவியா போட்டீங்க.. ஐயோ எனக்கு வெக்கம் வெக்கமா வருது..! :)
    முயற்சிக்கிறேன் அம்மா.. :)

    ReplyDelete
  2. உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

    ReplyDelete
  3. நல்ல தேர்வுகள்..

    வாழ்க.. நன்றி..

    ReplyDelete
  4. நல்லா யோசித்து, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி சிவா, நீண்ட பின்னூட்டதிற்கு, கண்டிப்பாக தொடருங்கள் வெட்க படாமல்

    ReplyDelete
  6. நன்றி ஹுசைனம்மா , புதிய முகங்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள், நன்றி.தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக

    ReplyDelete
  7. நன்றி பிரகாஷ், தங்கள் முதல் வரவுக்கு,
    தொடர்ந்து வாங்க

    ReplyDelete
  8. நன்றி சித்ரா, உங்கள் பதிவில் birthday cake பார்த்தேன் சான்சே இல்லை.
    வரவுக்கு நன்றி

    ReplyDelete
  9. தொடர் அழைப்பை ஏற்று எழுதியமைக்கு மிக்க நன்றி..! அருமையான தேர்வு... உங்க தேர்வில் எனக்கும் ரொம்ப பிடிச்சவங்க நடிகை சரிதா..! சமீபத்துலகூட அவங்க நடிச்ச "ஜூலி கணபதி" படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் அந்த கதாபாத்திரத்தை 'Kathy Bates'ங்கிறவங்க நடிச்சி நல்லா பேரு வாங்கினாங்க... ஆனா நம்ம ஊருல படம் சரியா போகாததால சரிதாவோட நடிப்பு சரியா பேசப்படலை.
    உங்களைத் தொடர்ந்து, நீங்கள் அழைப்பு விடுத்துள்ள நண்பர்கள் எழுதுவதைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

    -
    DREAMER

    ReplyDelete
  10. நன்றி, என்னை தொடர் பதிவுக்கு அழைத்த முதல்வர் என்ற பட்டத்தைக் கொடுக்கிறேன். ஏதோ உங்கள் அழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் விதமாய் எழுதி இருப்பேன் என்று நம்புகிறேன். நேரப் பற்றாக் குறை பெரிய problem

    ReplyDelete
  11. அனைத்தும் அருமை செல்ல நாய்க்குட்டி மனசு

    ReplyDelete
  12. அக்கா, நீங்க அன்றும் ஸ்பெஷல், இன்றும் ஸ்பெஷல், என்றும் ஸ்பெஷல்.. :-)

    We look for greatness in others, world leaders, big writers, etc.. We all have greatness in our self. Life itself is great.. :-)

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!