Bio Data !!

30 May, 2011

தென்னம்பாளையில் தேன்சிட்டு!!

தென்னம்பாளையில்
ஊஞ்சலாடிய தேன்சிட்டு,
ரசித்து லயித்திருந்த என்னை
அறைக்குள் இழுத்து
அறைந்து வெளியேறினான்
கணவன் என்னும்
அதிகாரச் சீட்டுப் பெற்றவன்.

விழிகள் நிறைந்து
வேதனை விழுங்கி
காரணமறிய அங்கேயே சென்றமர்ந்தேன்
தேன்சிட்டு பறந்திருந்தது.
மறுபடியும் பார்க்க வந்ததாய் ,
மயக்கும்  புன்னகை அனுப்பினான்
மாடி வீட்டு இளைஞன் .

14 comments:

  1. அருமை அருமை
    மயக்கும் புன்னகை அனுப்பினான்..
    என்கிற பதம் மிக மிக அருமை
    இப்படித்தான் பல சமயங்களில்
    நேர்ந்து போகிறது
    கருவும் சொல்லிய விதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எதிர்பாராத கவிதை.. ஆனால் அருமை.. உரியவரிடம் இனிமை இல்லாததும். இன்னொருவர் ஏற்கமுடியாத இனிமையை வழங்குவதும் நடக்கத்தான் செய்கிறது ரூஃபினா..)

    ReplyDelete
  3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete
  4. அறைக்குள் இழுத்து
    அறைந்து வெளியேறினான்//

    நம்மை துன்புறுத்தினால் யாருக்கும் மரியாதை கிடையாது என்கிறீர்கள்.. ஹி ஹி

    ReplyDelete
  5. மயக்கும் புன்னகை அனுப்பினான்
    மாடி வீட்டு இளைஞன் .//

    பார்வைகளில் அப்படி இருந்திருக்குமோ.!?

    ReplyDelete
  6. உண்மையில் அருமையாய் அமைத்த வரிகள்.. மனதின் நிலையை நன்கு உணர்த்துவதாக அமைந்திருப்பது சிறப்பு..

    ReplyDelete
  7. ரமணி சார், நன்றி நேற்று முழுவதும் கமெண்ட் போஸ்ட் பண்ண முடியல அதான் delay

    ReplyDelete
  8. நன்றி தேனம்மை, ஒரே ஜாலி தானா? சித்ராவுடன் போட்டோஸ் பார்த்தேன், கவிதை சும்மா எழுதிப் பார்க்க ஒரு தளம் கிடைத்ததே பயன் படுத்திக் கொள்ளலாம் என்றுதான்

    ReplyDelete
  9. தம்பி கூர்மதியான் வலைச்சரத்தில் குறிப்பிட்டமைக்கு நன்றி. வித்தியாசமாக வலைச்சரத்தில் ஒரு குழுவாக கொடுக்கிறீர்கள் வித்தியாசமான முறை நன்றாகஇருக்கிறது

    ReplyDelete
  10. தம்பி, ஒரு பெண் துன்புறுத்தப் படும் போது மனதுக்குள் மரியாதை சற்று கீழிறங்கும் என்பதைக் காட்டவே ஒருமையில் போட்டேன் அது எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை ,ஒரு நண்பர் போனில் அழைத்து" என்ன இது கவிதை, ஏதும் அனுபவத்தின் வெளிப்பாடா ?" என்றார், " இல்லை, இல்லை எனக்கும் கவிதை நாயகிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை" என்றேன்.

    ReplyDelete
  11. இயல்பாய் தொடங்கி நடைமுறையில் இருப்பதை சொல்கிறது...பலே தோழி...

    ReplyDelete
  12. நன்றி சதீஷ், பாறாங்கல் பனித்துளியை பாராட்டுகிறது. சந்தோஷம்

    ReplyDelete
  13. க‌விதை இய‌ல்பாய் வ‌ந்திருக்கு...வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  14. ஒரு நாவலையே ஒரு கவிதைக்குள் சொல்லி விட்டீர்கள்...

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!