என் மனம்
ஒரு தேன்கூடு.
நான் தான்
அதன் ராணித்தேனீ
அறைகளுக்கு
ஒன்றாய்
எனக்கானவர்களைச்
சேர்த்து
வைத்திருக்கிறேன்.
அவர்கள்
புன்னகையும்
பார்வையும்
பேச்சும்
அத்தனையும்
தேன் தேன்!
என்னைக்
கொன்று விட்டால்
எனக்கானவர்களை
விரட்டி விடலாம்
எனப் பார்த்தார்கள்.
எனக்கானவர்கள்
கொடுக்கும்
ராயல் ஜெல்லியால்
பிழைத்து விட்டேன்.
எப்படி ஆனாலும்
நான் தரப் போவது
தேனடை தானே
இறுதி மகிழ்வு
எங்களைப் போலே
உங்களுக்கும் தானே
( ராயல் ஜெல்லி தேனீக்களால் ராணித் தேனீக்காக தயாரிக்கப்படும் உணவு)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!