31 August, 2025
# Trending
Trending
தமிழ் படம் பெயர் தான் .
OTT : in amazon prime
இயக்குநர் : என். சிவராஜ்
முக்கிய வேடங்களில் கலையரசன்,
பிரியலயா, பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி.
படத்துக்கு 100% பொருத்தமான பெயர். குப்பையில் கிடக்கும் ஒரு சருகை சூறாவளி காற்று கோபுரத்தில் கொண்டு வைப்பது போல் டிரென்டிங் ஆகும் ஒரு வீடியோ பட்டி தொட்டியில் இருக்கும் ஒருவரை ஒரே இரவில் உலகம் முழுவதும் அறிய வைத்து விடும். கண்டம் விட்டு கண்டம் பிரபலமாக்கி விடும். கிளி பால் என்னும் ஆப்பிரிக்கர் இதற்கு உதாரணம். அவர்கள் தினம் உண்ணும் உணவைக் கூட மக்கள் ரசித்துப் பார்ப்பது வேடிக்கை. உதாரணம் வயநாடு ராஜா சாந்தா.
அத்தகைய யூட்யூபர் கணவன் மனைவி தான் கதை நாயகன் நாயகி. இப்ப சொல்லுங்க பெயர் பொருத்தம் பற்றி நான் சொன்னது சரி தானா?
கணவன் மனைவி பேச்சில் உண்மை மிளிர்ந்தால் , அவர்கள் பலரின் கண்களுக்கு அழகாய் தெரியத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் போடும் வீடியோக்கள் டிரென்டிங் ஆகி விடும். ஆனால் அவர்களை அறியாமலே வீடியோ கன்டென்ட் தேடி அடிமை ஆகி விடுவார்கள். இருவரும் விவாகரத்து செய்யப் போவது போல் நடித்தால் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று விடலாம் என திட்டமிடுகிறார்கள் படத்தின் நாயகன் நாயகி. ஆனால் அதே நேரம் வேறொருவன் இவர்களுக்கு ஒரு நுண்வலை விரிக்கிறான்.
ஆதி காலத்தில் கூட சாத்தான் விரித்த வலையில் விழுந்து ஆப்பிளைத் தின்றது ஏவாள் தானே. இங்கும் நூலிழையில் கணவன் தப்பிக்க, ஈஎம்ஐ யின் அழுத்தத்தால் மனைவி நுண்வலையில் விழுகிறாள்.
கண்ணுக்குத் தெரியாத மனிதன் கொடுக்கும் டாஸ்க்குகளைப் பார்க்கும் போது பிக் பாஸின் ரசிகர்களைச் சிலர் கோபமாக பழிப்பதும் நியாயம் தானோ எனத் தோன்றுகிறது. பணத்தின் மீது கொள்ளும் ஆசை ஒருவனை எதில் கொண்டு நிறுத்தும் என்று எச்சரிக்கிறது டிரென்டிங். நேர்மையாக நிதானமாக சேரும் பணம் மட்டுமே பாதுகாப்பானது.
ரசித்த வசனம்:
-> காதலின் அழகு என்ன தெரியுமா?
-> ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது.
-> இல்ல. ஒருத்தரை ஒருத்தர் முழுமையா புரிஞ்சுக்காம இருக்கிறது.
-> ஏன்?
-> எப்போ புரிஞ்சுக்கிறோமோ அப்போ காதல் போயிடும்.
இது வரை பார்த்ததில் இருந்து ரொம்ப வித்தியாசமான படம். நிச்சயம் ரசிக்க வைக்கும். முடிவு திகைக்க வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!