29 May, 2026
மலரினும் மெல்லிய மனமுடையார்
இந்த பூ பேர் தெரியாது. மகிழம்பூவா இருக்கலாம். நல்ல மணம்
அத்த இடத்தைக் கடக்கும் போது வா வா என்றழைக்கும். அத்தனை பேரும் அலட்சியப்படுத்திய அழைப்பை ஒருவர் மதித்தார்.
தினம் உதிரும் பூக்களை அழகாக அடுக்கி வைத்தார். நான் இன்று அவரிடம் பேசினேன். ஆங்கிலத்தில் தான்.
ரொம்ப ஆர்வமா தினமும் அலங்கரிக்கிறீங்களே! என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் பதிவெழுதத் தூண்டியது.
இரவெல்லாம் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடக்குது. அப்படியே விட்டால் ஏறி மிதித்து நடந்து போவாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால விழுந்த பூக்களை அலங்கரிப்பேன் என்றார்.
ஒரு நல்ல விஷயம் என்னென்னா இதன் பக்கத்தில் உதிர்ந்து கிடக்கும் பூக்களையும் மக்கள் மிதிப்பதில்லை. ஒதுங்கிச் செல்கிறார்கள்.
மலரினும் மெல்லிய மனமுடையவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!