Bio Data !!

10 October, 2026

ராம பிரசாதம்

இந்த வாரக் குமுதத்தில் (14.10.2026) அண்ணன் சப்தரிஷி லாசரா அவர்களின் "ராம பிரசாதம்" என்ற சிறுகதை. ராம பிரசாதம் ஒரு எழுத்தாளர். அவரின் நூறாண்டு தொடர்பான போஸ்டர் திருவண்ணாமலையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. அவர் எழுதிய "கண் கொடுத்தவன்" நாவல் வெளியிடுபவர் ராம் பாபா. பெற்றுக் கொள்பவர் ராம பிரசாதம். சமீபத்தில் வண்ணதாசன் அவர்களின் அகவை 81 விழாவில் "நான் ஒரு முதிர்ந்த பறவையாக கிளையில் அமர்ந்து சின்னஞ்சிறு பறவைகள் பறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். அது போல நூறாண்டு கடந்த ஒரு எழுத்தாளனின் புத்தக வெளியீட்டில் அவரே கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் பாக்கியம் என்று சொன்னது எழுத்தாளருக்கல்ல. விருதுகளை " வாங்கி விட்ட" என்று சொல்லிப் பின் திருத்தி "பெற்று விட்ட" என்கிறார் ஆசிரியர். இப்படிச் சின்ன சின்ன நுணுக்கங்கள் கதை நெடுக. ஒரு எழுத்தாளனுக்கு வெறும் வாசகனாக மட்டுமல்லாது ஒரு மகனைப் போல அக்கரை எடுத்துக் கொள்ளும் வாசகன் கிடைப்பது ஒரு வரம். அந்த வரம் தான் ராம பிரசாதம் கதைக் கரு. அண்ணன் சப்தரிஷி அடிக்கடி சிறுகதை எழுத வேண்டுமென்பது என் வேண்டுகோள். அவர் தந்தையிடமிருந்து அவ்வளவு விஷயங்கள் அவர் பெற்று இருக்கிறார். அவற்றை சிறு கதைகள. மூலம் நமக்குக் கடத்த வேண்டும்.்

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!