Bio Data !!

08 November, 2026

#ஓஸோன் படலம்...

ஒரு பக்கம் மழைத் தண்ணீர் நிரம்பிய பள்ளங்கள். முன் புறம் அடர் பனி மூட்டமாய் வெடித்துக் கிளம்பிய புகை. எதிரில் வரும் வாகனங்களின் பளிச்சிடும் வெளிச்சத்தில் புகை இன்னும் அடர்வாய் கண்ணைக் கூசச் செய்ய. நேற்று இரவு காரில் பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததே நான் செய்த புண்ணிய பலன் என நினைக்கிறேன். விலை வாசி ஏறி இருக்குதுன்னு ஒரு பக்கம் புலம்பல் இருந்தாலும் இன்னொரு பக்கம் காசைக் கரியாக்கும் "உன்னத" பணி ஜெக ஜோதியா நடந்து கொண்டு தான் இருந்தது. "நாம போடுற வெடியிலும் , ஓட்டுற வண்டியினாலும் ஓஸோன் அடுக்கு பாதிக்கப்படுதுங்கிறாங்களே!! பல நாடுகள்ல போர் நடக்குதே. அதெல்லாம் பாதிக்காதா? " என்று கேட்கும் ஒரு அப்பாவிப் பெண் குரலுக்கு என்னிடம் பதிலில்லை.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!