29 October, 2026
#திட்டும் போது தவிருங்கள்
திட்டும் போது தவிர்க்க வேண்டியவை.
***********************************************
"நீ பள்ளிக்கூடத்துக்கு படிக்கப் போறியா. வேற என்னத்துக்கும் போறியா ?" ( மதிப்பெண் குறைந்தால் ஏன் குறைந்தது என்று மட்டும் கேளுங்கள்)
" நீ எவன் நினைப்புல நடந்துகிட்டு இருக்கிற ? ( ஏதாவது அஜாக்கிறதையாகவோ மறந்தோ நடந்தால் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் சொல்லுங்கள்)
அவன் காலைக் கழுவிக் குடி. அவன் மூ***** த்தக் குடி அப்பவாவது அறிவு வருதா பார்ப்போம். ( அவமானப் படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்)
அங்க எவளை / எவனைப் பார்க்கப் போறேன்னு தெரியாதுன்னு நினைச்சியா? ( நிச்சயமாகத் தெரியாத எந்த விஷயத்தையும் குத்து மதிப்பாகச் சொல்லாதீர்கள்)
நீ சோத்தத் தான் திங்கிறியா? இல்ல வேற என்னத்தையுமா? ( ஒவ்வொரு முறை உண்ணும் போதும் வேற ஒன்றை நினைவுபடுத்தும் கொடும் வன்முறை. தவிருங்கள்)
இப்படி எல்லாமா இந்தக் காலத்துல திட்டுறாங்கன்னு கேள்வி எழும்புதா? திட்டுறாங்க.
படிக்காதவங்க வேணா இப்படி பேசுவாங்க. படித்தவங்களும் பேசுவாங்களாங்குறீங்களா? படித்த மேதாவிகளும் பயன்படுத்துறாங்க.
இவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான். இதே வார்த்தைகள் உங்களை நோக்கி எகிறி அடித்தால் உங்களால் தாங்க முடியுமா? தப்பு செய்யாதவர்களையும் செய்ய வைத்து விடும் கொடுஞ் சொற்கள் இவை. தவிர்த்து விடுங்கள்.
(பி.கு : இவை உதாரணங்கள் தான்)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!