10 November, 2026
ஓநாய் குலச் சின்னம்.
" குண்டு பட்டு ஒடிந்த காலை இழுத்துக் கொண்டு செல்வதால் அதனுடைய வேகம் தடைப் படுவதை உணர்ந்த ஓநாய் அதைப் பற்களால் மென்று கடித்து அகற்றி விட்டது "என்றான் பட்டு.
"விஷம் தோய்ந்த அம்பு கையைத் தாக்கி விட்டால் அந்தக் கையை ஒரு போர் வீரன் வெட்டி எறிந்து விடுவான். என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு ஓநாய் தன்னுடைய காலைக் ( குண்டு பட்ட காலை) கடித்து அகற்றி விடுவதை மூன்றாவது தடவையாக இப்போது பார்க்கிறேன். " என்றான் சாங்.
ஓநாய் குலச் சின்னம் நூலிலிருந்து. அந்தக் கால மனிதர்களிடம் இருந்த உறுதி இப்போ இருக்கிறதா ? எனக்குத் தெரியல. ஒரு முறை பகையில் ஒருவனைக் கத்தியால் ஒருவர் குத்தி விட வெளியே வந்து விழுந்த குடலை உள்ளே வைத்து அழுத்தி தன் தலைத் துண்டால் வயிற்றைச் சுற்றிக் கட்டி, ஆற்றின் இந்தப் பக்கமிருந்து ஆற்றைக் கடந்து அந்தப் பக்கமுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிழைத்து விட்டான் என்று எங்க அப்பாயீ சொல்வார்கள். கிராமங்களில் உடனே அது சார்ந்த ஒரு பெயரையும் அவனுக்கு வைத்து விடுவார்கள். பெயர் சொல்லி இருப்பாங்க. எனக்கு ஞாபகம் இல்லை. அவர்கள் வைத்த பெயர்களை எல்லாம் இப்போ சொன்னா body shaming னு புகார் வந்திடும். கிராமங்களில் அத்தனை பட்டப் பெயர்களும் உடல் சார்ந்தே அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. அந்மக் காலங்களில் விலங்குகளிடமிருந்து தான் மனிதன் வாழ்வியலைப் படித்திருக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!