Bio Data !!

01 July, 2025

58 வயதில் விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணைப் பற்றி சொல்றேன்னு நேற்று எழுதி இருந்தேன். அந்த கதை இது தான். முப்பது வருடங்களுக்கு முந்தைய கதை. அப்போ நான் முருகன்குறிச்சியில் Customer Service Centre ல் பணி புரிந்து கொண்டு இருந்தேன். ஒரு வயதான பெண் லேன்ட் லைன் வாங்க வந்திருந்தாங்க. Application fill up பண்ணிக் கொடுத்தாங்க. அதில் கணவர் பெயர் என்ற காலம் எழுதாமல் இருந்தது. நான் அதை நிரப்பச் சொல்லும் போது "வேண்டாம்மா" என்றார்கள். நான் "இல்லையா" என்ற போது அதை நிரப்பாமலே விட்டிடலாம்னு சொன்னாங்க. நான் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. மதியம் மறுபடி வந்தாங்க. அப்போ கூட்டம் குறைவா இருந்தது. " காலையில கூட்டமா இருந்ததால சொல்லல. உன்னிடம் சொல்லணும் போல இருந்தது. அதான் வந்தேன்னாங்க. அப்போ நான் இப்படி வயதானவர்களின் pet ஆக இருந்தேன். என்னிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்னு வர்ரவங்க உண்டு. " நீ பேசுறது என் இறந்து போன பேத்தி பேசுற மாதிரியே இருக்குன்னு" கண் கலங்க சொல்லிட்டு போன வயதானவர் உண்டு. இன்னும் பலப்பல உணர்வு பூர்வமான அனுபவங்கள் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம். வந்த பெண்மணி ஒரு ஐந்து வரை உள்ள பள்ளியின் தலைமையாசிரியை. திருமணமாகி இருந்தது. குழந்தைகள் இல்லை. கணவர் நெல்லையில இருந்து தென்காசி போய் பணி புரிந்து வந்திருக்கிறார். இவருக்கு அங்கே ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதும் இவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று வேகம் வந்திருக்கிறது. தன் பள்ளி மாணவிகள் தன் மேல் மிகுந்த மரியாதை வைத்து தன்னை ஒரு ரோல் மாடலாக பார்க்கிறார்கள். தான் விவாகரத்து செய்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடுவோம் என்று தான் ஓய்வு பெறும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொருத்திருந்திருக்கிறார்கள். ஓய்வு பெற்றதும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து வாங்கி விட்டார்கள். "இவ்வளவு நாள் பொறுத்து விட்டீர்கள். இப்போ போய் ஏன்மா " னு நான் கேட்டேன். " அவர் எனக்குச் செய்தது மிகப் பெரிய துரோகம். என்னுடைய கடின உழைப்பில் சேர்த்த பணம் அவருக்குக் கிடைக்கக் கூடாது. It is my hard earned money. சட்டப்படி அவரை விட்டு நான் பிரிந்தால் தான் இது நடக்கும். அதனால் தான் விவாகரத்து வாங்கினேன் என்றார்கள். இவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் ஆனால் அதே சமயம் தன் தன்மானத்தைக் காக்கும் விதமாகவும் நடக்கும் பொறுமை இந்தக் கால பிள்ளைகளுக்கு உண்டா? நம் வீட்டில் இருக்கும் வரை தேவதைகளாக வளர்த்து விடுகிறோம். திருமணமான தொடக்கத்தில் எல்லா வீடுகளிலும் பிரச்னை வரும். அதை நம் பிள்ளைகள் சொல்லும் போது உணர்ச்சி வசப்படாமல் " நாங்கள் இருக்கிறோம். என்ன நடந்தாலும் பயப்படாதே" என்ற தைர்யத்தை பெற்றவர்கள் கொடுக்க வேண்டும். அதுவே அவர்களை மரண முடிவிலிருந்து மாற்றி விடும். பெற்ற குழந்தைகள் ஒரு முடிவைத் தேட நாமே வழி வகுக்கக் கூடாது. எவ்வளவு தான் பேசினாலும் விதி என்பது எப்படியோ அப்படி நடந்து விடும். நாமும் சில காலம் வருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். என்னவோ போங்க.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!