Bio Data !!

01 July, 2025

#அவினாசிப் பெண்ணின் மரண துயரம்.

போ.து.ம்.ங்.க சமீபத்தில் பர்வீன் சுல்தானா பேசிய ஒரு வீடியோ பார்த்தேன். 57 வயதில் விவாகரத்துக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினார். நீதிபதி பல காரணங்களைச் சொல்லிக் கேட்கிறார். இந்தப் பெண் எந்த வித கெட்ட பழக்கங்களும் தன் கணவருக்கு இல்லைன்னு சொல்றாள். விவாகரத்துக்கு சொல்லும் காரணம் "24 மணி்நேரமும் அவருக்கு சமைத்துப் போடுவதையே சிந்தனையில் நிறைத்திருக்க வேண்டி இருக்கிறது. போதும்ங்க." என்பது தான். இதற்கு சில பெண்களே கூட "சமைக்கிறத தவிர ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேலைன்னு" கேட்கலாம். அவள் தனி உயிர். அவளுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். இப்போ திருமணமான 78 நாளில் ஒரு பெண் " போதும்" என்பதை உணர்ந்து தற்கொலை தான் வழி என முடிவெடுத்திருக்கிறாள். ( எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல). போதும்ப்பா இந்த வாழ்க்கை என்னால முடியலைன்னு அவள் பேசிய ஒரு ஆடியோ வலம் வருகிறது. பறி கொடுத்த பின் புலம்பி என்ன பயன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஓய்வு பெற்ற பின் விவாகரத்துக்கு நீதி மன்றம் நாடினார். அவரைப் பற்றி நாளை எழுதுகிறேன். அதனால் "போதும்" என்ற உணர்வு ஒரு பெண்ணுக்கு எதனால், யாரால் எப்பொழுது வரும் என்பதை வரையறை செய்ய முடியாது. குட்டக் குட்ட குனிகிறாள் என்பதாலே ஒருவரை வலுவற்றவர் என நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள பாசத்தாலோ, தன் பெற்றவர் மேல் உள்ள மரியாதையாலோ, சமுதாய அழுத்தத்தாலோ கூட குனிந்து இருக்கலாம். " போ.து.ம்" என்று தோணும் போது வெடித்துச் சிதறுவாள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!