Bio Data !!

11 December, 2025

சிற்றுளி

இவ்வாழ்வில் வேறு எதையும் விட அதிகமான ஒரு பிணைப்பு அவனுக்கு அவளிடம் இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தில் அன்பை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. அது அவசியமும் அல்ல. புரிந்து கொண்டால் போதுமானது. இனி அவன் என்ன முயன்றாலும் அது போலியாக கவனக் குவிப்பை பெறும் பெரும் முயற்சியாகவே இருக்கும். அற்புதங்கள் நிகழக் காலமாகும். நிச்சயம் நேரம் எடுக்கும். காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் நிகழ்ந்துவிடும். அவன் அற்புதங்களின் சமிஞ்சைகளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்" இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் "சிற்றுளி" என்ற ஜூலை & செப்டம்பர் 2025 இதழில் "நித்யா ஹரி" அவர்கள் எழுதிய "கானமயில்" என்ற சிறு கதையிலிருந்து ஒரு பகுதி. ரொம்ப நல்லா இருந்தது. இந்த உணர்வோட நம்மை இணைத்துக்கொள்ள முடியுது. ஒரு சந்தர்ப்பத்தில் அன்பு கொண்ட இருவருக்கு இடையே பிரிவு வந்தபின் அதை சரி செய்ய ஓரளவு தான் முயல வேண்டும். அதற்கு மேல் முயலும் போது அது ஒரு போலித்தனம் காட்டுவது போல் ஆகிவிடும். அப்படிங்கறத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. நல்ல சிறுகதை. சிற்றுளியில் இதுபோல பல ரசிக்கத் தகுந்த அம்சங்கள் உள்ள. தனி இதழ் 130 ரூபாயும் ஓராண்டு சந்தா 500 ரூபாயும் செலுத்தலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!