19 December, 2025
காந்தா. டிஸ்னி ஹாட் ஸ்டாரில்
Disney Hotstar
படத்தின் பெயர் காந்தா
இயக்குநர் : செல்வமணி செல்வராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ
தயாரிப்பாளர்கள் : ராணா டகுபதி, துல்கர் சல்மான் ( அட!!) மற்றும் இருவர்.
தமிழ் திரைப்பட உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் கதையின் லேசான சாயல் தெரிகிறது. தன் சூப்பர் ஸ்டார் பதவியை தன் கோபத்தால் இழந்து மிகவும் பரிதாப நிலைக்குச் சென்று மரித்தவர் தியாக ராஜ பாகவதர்.
உடையில், பேச்சில் சுற்றுச் சூழலில் அந்த காலத்தை மிக அழகாக்க் கொண்டு வந்திருக்கிறார்கள். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ இருவர் முகமும் கதா பாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப் போகின்றது.
நடிப்பில் சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ மூவருக்குமே சபாஷ் சரியான போட்டி.
எப்போதுமே ஒருவர் உயிரை எடுக்குமளவு கோபம் இரண்டு ஆண்களுக்கு இடையில் வருவது பெண் சம்பந்தமாக அல்லது நிலம் சார்ந்ததாக இருக்கும். இங்கே பெண் சார்ந்து வருகிறது. ஆனால் பலியாவது ஓருயிரா?? இல்லை. இல்லை.
துல்கரின் மாமனாராக வழும் நிழல்கள் ரவி ஒரு சாயலில் நாசர் போல, ஒரு சாயலில் சங்கிலி முருகன் போல ஒரு சாயலில் நிழல்கள் ரவி போல மாறி மாறித் தெரிகிறார்.்
சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநர் . தன் அம்மாவின் கதையாக சாந்தா என்னும் படத்தை எடுக்க அந்த பெயரை சாந்தா என மாற்ற வேண்டும் என்பதில் தொடங்குகிறது இயக்குநர் கதாநாயகன் இருவருக்கும் இடையேயான ஈகோ.
கதாநாயகிக்கு தன் மனைவி அந்தஸ்தை கொடுக்க துல்கரும் , தன்னை வளர்த்து முதல் படம் கொடுத்த சமுத்திரக் கனியின் விருப்பத்தை மீறி துல்கரை மணம்முடிக்கத் துணிந்த பாக்யஸ்ரீ யையும் நடந்து விடுகிறது அந்த அசம்பாவிதம்.
படம் ரொம்ப நல்லா எடுத்திருக்கிறாங்க. பாருங்க.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!