02 December, 2025
குதிரை வாகனம் by ஜீவகுமாரன்.
"அப்பா அம்மாவைக்கு தான் நல்ல மாப்பிள்ளை. எனக்குத் தான் தெரியும் சண்டியரைப் பற்றி" அவளும் சீண்டினாள்.
"சண்டியனோடை இன்றைக்கு நீ சண்டை பிடிக்கிறதாய் தீர்மானிச்சிட்டியா?"
அவள் மௌனமாக தலை குனிந்தாள்.
என் கைகள் அவளை அரவணைத்தது.
சண்டிக்குதிரை சண்டியனின் பிடியுள் அடங்கிக் கொண்டிருந்தது.
****
இது வீ ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய "குதிரை வாகனம்" நாவலில் ஒரு பகுதி. வளர்ந்த இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல். இதுவல்லவோ காதல். இன்று எத்தனைக் குடும்பங்களுக்கு இடையே இந்ம அந்நியோன்யம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். நான் ரொம்ப ரசித்து வாசித்த பகுதி என்பதால் உங்களோடு பகிர்ந்தேன்.
சண்முகத்தார் என்னும் ஊர்ப் பெரியவர் ஒருவரின் குடும்பம் தான் கதையின் பின்புலம். இலங்கை தான் களம். அதனால் பேச்சு இலங்கைத் தமிழில் இருக்கும். வாசிக்க வாசிக்க கதையோடு ஒன்றிப் போவதால் எளிதில் புரியும்.
அதே போல பாலா என்னும் மருத்துவருக்கும் சண்டியருக்கும் இடையேயான நட்பும் பிரமிக்க வைக்கும். மொத்தத்தில் மனிதம் மிளிரும் கதை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!