Bio Data !!

15 February, 2025

# ரயில் பயணங்களில். நான் முதன் முறையாக பெங்களூருக்கு டிரெயினில் வந்தேன். கன்ட்டோன்மென்ட்டில் இறங்கினால் டிராஃபிக்கில் வீட்டுக்கு வருவது ரொம்ப சிரமம் என்பதால் ஹோசூரில் இறங்கி அங்கிருந்து Cab பிடித்து பெங்களூர் வந்தேன். பஸ் டிக்கெட்டை விட ரயில் டிக்கெட் குறைவு தான். அதனால் cab க்கு சேர்த்து எல்லாம் சரியாகத் தான் வரும். ஹோசூரில் இருந்து பஸ்ஸில் வந்து விடலாம். லக்கேஜ் அதிகம் என்பதால் சிரமப்படும் என்று மாற்றி யோசித்தேன். ரயிலில் எந்த ப்ளாட்ஃபார்ம் , நம்ம கோச் எங்கே நிற்கும் என பல சந்தேகங்கள் வரும் என்பதால் என் கணவருக்கு டிரெயின் பிடிப்பதில்லை. எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருப்பதாலும் நெடுந் தொலைவு நிறுத்தாமல் செல்வதால் சிறுநீர் அடக்குவது போன்ற தொந்தரவுகள் இருப்பதாலும் எனக்கு பஸ் பிடிப்பதில்லை. அதனால் நான் தனியா வரும் போது ரயிலைத் தேர்வு செய்தேன். இப்போ ரொம்ப வசதி வந்துட்டுது. Where is my train என்னும் ஒரு app ஐ பதிவிரக்கம் செய்து வைத்திருப்பதால். அது ஒரு சர்வ ரோக நிவாரணி. அதில் நாம் எங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பதைக் கொடுத்தவுடன் கீழே வரும் ரயில் எண்களில் நமக்கானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பிளாட்ஃபார்ம் எண், நம்ம டிக்கெட்டில் உள்ள கோச் நிற்கும் இடம், இன்னும் எவ்வளவு நேரத்தில் ரயில் வந்து சேரும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் வந்திடுது. ரயில் நிலையத்திலும் அறிவிப்பார்கள். இருந்தாலும் அங்கே இருக்கும் பேரிரைச்சல் ஒரு தொந்தரவு. அப்படி ப்ளாட்ஃபார்ம் தேர்ந்தெடுத்து வந்த பிறகு ரயில் நிலையத்திலேயே ரயில் வருவதற்கு கொஞ்ச நேரம் முன்பு கோச் நிற்கும் இடத்தை டிஸ்பிளே செய்கிறார்கள். அதற்கு முன்னாலும் நாம் தெரிந்து கொள்ள ஒரு வசதி இருக்கிறது. ப்ளாட்ஃபார்மில் தரையில் பார்த்தீங்கன்னா கொஞ்ச தூரத்துக்கு ஒரு இடத்தில் 10/18 இது போல் எண்கள் பெயின்ட் பண்ணி வச்சிருப்பாங்க. இதில் தண்டவாளம் தெற்கு வடக்காக இருந்தால் 10 என்பது தெற்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச். 18 என்பது வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச் ( இதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள் கமென்ட்டில் சொல்லுங்கள் 1ஆஆ.) நிற்குமிடம் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஏறிய பின்னே பார்த்தால் யாரும் யாருக்காகவும் பெர்த் மாற்றிக் கொள்ள முடியாத படி ஒரே மூத்த குடிமக்கள் கூட்டம். பாவம் பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அலைகிறார்கள். ஏறிய கொஞ்ச நேரத்தில் அது ஏஸி கோச் என்பதால் ஒரு பெண் மருத்துவர் வந்து ரயிலில் எழுதி வைத்திருந்த எண்ணைக் காட்டி ஏதும் அவசரம்னா இதில் கூப்பிடுங்க என்று சொல்லிச் சென்றார்கள். இந்த app இல் கீழே ஒரு கேள்வி கேட்பார்கள். அதில் காட்டும் பிளாட் ஃபார்ம் எண் சரிதானா இல்லை மாறி இருக்கிறதா வென. அதில் ஆம் இல்லை என்பதைத் தேர்வு செய்தால் பிற பயணிகளுக்கு உதவியாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். ரயில் புறப்படப் போகும் நேரத்தில் ஓடி வந்து ஏறுபவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள் சொல்லும் இந்தப் பதில் உதவியாக இருக்கும். சில நொடிகள் இதற்காக செலவு செய்யலாம். இறங்கு முன்னும் app இல் இன்னும் எவ்வளவு நேரத்தில் நாம் இறங்கணும் என்பதைத் தெரிந்து கொண்டு தயாராகிக் கொள்ளலாம். நம் பிள்ளைகள் அழைக்க வரணும்னா தகவல் சொல்லி விடலாம். அழைப்பதற்காக apo இலேயே அலார்ம். வைத்துக் கொள்ளலாம். பல வசதிகளையும் செய்து தந்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு "ஓ" போடுவோம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!