Bio Data !!

05 February, 2025

#மீண்டு வந்தேன். சொர்க்கம், நரகம் என்ற இரண்டு இருக்கிறது என்பதை பலர் நம்புகிறோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் அந்த ரெண்டுக்கும் நடுவில் உத்தரிக்கிற ஸ்தலம்னு ஒண்ணு இருப்பதாகவும் நம்புகிறோம். இங்கே இருப்பவர்கள் தன் தவறுகளுக்கான பரிகார காலம் முடிந்ததும் மோட்சம் செல்வார்கள் என்பது நம்பிக்கை. சிலர் அந்த நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறோம். அப்படியே இருந்தாலும் "கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்" ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போ எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப் படவில்லை. மிக அதிகமாக இருந்திருக்கும் போல. இரண்டு கால் பாதங்களும் தீயாய் எரியும். வெறெந்த தொந்தரவும் இல்லாததால் இதற்கான காரணத்தைத் தேடாமல் பெரிய துவர்த்தை (டவலை) நனைத்து காலைச் சுற்றி வைப்பேன். கொஞ்சம் எரிச்சல் குறையும். வெளியூரில் இருக்கும் என் மகளை இரவு நேரத்தில் போனில் அழைத்து " என்னால தாங்க முடியல. செத்துடலாமான்னு இருக்கு " ன்னு அழுதிருக்கிறேன். அப்போ என்னை பலப்படுத்திக்க இப்படி நினைத்தேன். " வாழும் காலத்தில் நாம் செய்த தவறுகளுக்கு , இறந்த பிறகு நரகம் என்ற ஒன்று இருக்கிறதா அதற்கு போய் விடுவோமோ என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையாக இதை ஏற்றுக் கொள்வோம். " இப்படி நினைத்த பின் எனக்குத் தாங்க சக்தி கிடைத்தது. ஒவ்வொரு முறை உடல் நோவால் அவதியுறும் போதும் " நான் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்குப் பரிகாரமாக இந்த வேதனையை ஒப்புக் கொடுக்கிறேன். என்னையும் என் குடும்பத்தையும் என் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பத்தையும், என் பேரப் பிள்ளைகளையும் காப்பாற்று" என்று பிரார்த்திப்பேன். போதும் போதும்லிஸ்ட் பெருசா போகுதுன்னு சொல்றீங்களா? மீண்டு விடுவேன். உடல் நோவைத் தாங்க பலம் கிடைக்கும். இது முதல் முறை மீளல். இதன் பின் பல முறை விழுவதும் எழுவதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!