Bio Data !!

06 February, 2025

அவர்களுன் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளா இரை

நாங்க படிக்கிறப்போ ஆண்களுக்குத் தனிப் பள்ளி. பெண்களுக்குத் தனிப் பள்ளி. ஆண்கள் பள்ளியில் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்கள். பெண்கள் பள்ளிக்கு பெண்கள் மட்டுமே. அதில் சில நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. நாங்கள் படித்த அந்த பள்ளிகள் இன்றும் அதே போல் தான் இருக்கின்றன. பெண்கள் பள்ளி முடிந்து வரும் பெண் குழந்தைகளைப் பார்க்க அத்தனை பேர் அணி வகுத்து நிற்பாங்க. நாம தனியா சாலையில் போறோம்னு வையுங்க. தூரத்துல நாம யாரென்றே தெரியாத ஐந்தாறு பையன்கள் நிற்கிறாங்கன்னா திடீர்னு அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பாங்க. நம்ம பேரு கூட தெரியாது. என்ன சொல்லி எல்லோரும் ஒண்ணு போல திரும்புறாங்கன்னு ஆச்சர்யப்படுவேன். இப்பல்லா தெரியுது. பேர் எல்லாம் தெரிய வேண்டுவதில்லை. சைட் வருது, ஃபிகர் வருதுன்னு ஒன்றல்ல எத்தனையோ பேர் வச்சிருக்காங்கன்னு. அதில் யாரோ ஒருவன் திமிர் எடுத்து hurting ஆ கூட கமென்ட் சொல்லுவான். இன்னொரு ரசனை மிகுந்தவன் " இந்த ஹிப்புக்கும் லிப்புக்கும் சொத்த எழுதி கொடுக்கலாம்" னு சொல்லுவான். அவன் கொடுக்க முடிந்த சொத்து சாரி சொத்தை பல்லில் மட்டும் தான் இருக்கும். அத்தனையோட முடிஞ்சு போயிடும். நான் கேள்விப்பட்ட அதிக பட்ச வன்முறை தன்னை மதிக்காமல் முறைத்துக் கொண்டு half skirt இல் சைக்கிளில் சென்ற ஒரு பெண் குழந்தையின் தொடையில் ஒருவன் புது ப்ளேடால் சைக்கிளில் பக்கத்தில் போய் கீறி விட்டான் என்பது தான். ஆனால் இன்று வன்முறை பெண் குழந்தைகள் மேல் தலை விரித்தாடுகிறது. நான் மேலே சொன்னவன் ரவுடி என்று அறியப்பட்டவன். இன்று ஆசிரியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் மாணவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் கூட்டு சேர்ந்து இழைக்கும் அநீதி சொல்லி மாளாது. படிப்பறிவில் முன்னேறி இருக்கும் நாம் ஏனோ நாகரீகத்தில் பின் தங்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம். பழையபடியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் பள்ளிகள் அமைத்து அவரவர் இனத்தைச் சேர்ந்தவர்களையே ஆசிரியர்களாகப் போடுங்கள். இரண்டு பெண் குழந்தைகளைத் தாங்கிய வயிறைப் பெற்றவளாய் சொல்கிறேன். ஆண்களின் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளை இரையாக்காதீர்கள். புண்ணியமாகப் போகும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!