Bio Data !!

02 February, 2025

# எண்ணச் சிதறல்கள் சில நேரங்களில் சிலர் சொல்லும் சில வார்த்தைகள் நமக்கு ரொம்ப பிடித்துப் போகும். அதே வார்த்தைகள் வேறொருவர் சொல்லும் போதோ வேறு சந்தர்ப்பத்தில் சொல்லும் போதோ அந்த அளவு பாதிப்பை உண்டாக்காது போகலாம். அப்படியான ஒரு விஷயம் இதோ!! ஒரு பேட்டி. பிக் பாஸ் அருண் ( இவர் கண்ணம்மா புருஷன் என்றும் குறிப்பிடப்படுகிறார் பாரதி கண்ணம்மாவில் நடிப்பதால் 😀) , அவருடைய பெற்றோர் அவர் மணக்கப் போகும் அர்ச்சனா இவர்கள் பங்கேற்கிறார்கள். அருண் தன் பெற்றோரிடம் தான் அர்ச்சனாவை அவர்கள் சம்மதத்தோடு மணக்க விரும்புவதாகச் சொல்கிறார். இதை உணர்வு பூர்வமாக கவனிக்கும் அர்ச்சனா " நாம் விரும்பும் ஒருவரிடம் ஒரு நாளைக்கு 30 செகன்ட் பேச முடிந்தால் கூட அந்த நாளின் மீதி நேரத்தை ( அதாவது 23 மணி 59 நிமிடம் 30 நொடி) அடுத்த நாளின் அந்த 30 நொடியை நினைத்துக் கடந்து விடலாம். ஆனா பிக் பாஸ் போனா அது கூட முடியாதே என்பது தான் என்னை ரொம்ப வருத்தியது" னு சொன்னாங்க. காதலின் வலிமையை இதை விட அழகா சொல்ல முடியாதுன்னு தோணுச்சு. அந்த 30 நொடி கிடைக்கப் பெற்றவர் அதிர்ஷ்டசாலிகள். அருணின் அப்பாவும் கலகக்காரராகவே இருக்கிறார். "அவர் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்க" ன்னு கேட்டதும் " எந்தக் காதலைப் பற்றி என்றார். அதற்கு அருணும் அர்ச்சனாவும் கொடுத்தது ரொம்ப க்யூட் expression.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!