Bio Data !!

11 February, 2025

Happy hugs day

இன்று "அணைத்தல் தினமாம்" மீட்டாவிடம் அணைத்தலுக்கு ஒரு படம் கொடு என்றால் இப்படி ஒரே நிறத்தில் உடை உடுத்தி அணைத்துக் கொண்டிருக்கும் இருவரின் படத்தைக் கொடுத்தது. இது மட்டுமா அணைத்தல். நம்மைக் கண்டதும் ஓடி வந்து நம் கரங்களை இறுகப் பிடித்துக் கொள்வதும் ஒரு வகை அணைத்தல் தானே. உடல்கள் இணைவது மட்டுமா அணைத்தல் கரங்கள் இணைவதும் தானே. அது அன்பு கொண்ட இருவருக்கும் கொடுக்கும் பலமே அலாதி ஆனது. நெருங்கி வர முடியாத தூரத்தில் பார்வைகள் ஒன்றோடொன்று பரிதவிப்போடு பற்றிக் கொள்வதும் அணைத்தல் தான். அது தரும் பலமும் நம்பிக்கையும் வேறு நிலை. பார்க்கவும் முடியாத தூரத்தில் இருக்கும் போது குரல்கள் கவ்வுக் கொள்வதும் அணைத்தல் தான். அது ஒருவருக்கு கொடுக்கும் தைர்யம் சொல்லிப் புரியாது. இதையெல்லாம் மறந்து பலரும் தலையோடு கால் வரை இணைவதை மட்டுமே அணைத்தல் என்கிறோம். ஐம்புலன்களாலும் அணைக்க முடியும். அணைப்போம். Happy hugs day.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!