28 May, 2025
#கவிதை.. நம்பிக்கை வை
என்னைப் பற்றி
உன்னிடம்
எத்தனை விதமான
செய்திகள் வந்து
சேர்ந்ததோ!
என்னைப் பற்றிய
உன் எண்ணம்
எத்தனை முறை
அழித்து அழித்து
எழுதப்பட்டதோ!
என் மேலான
காதலும்
கோபமும்
வெறுப்பும்
அன்பும்
எத்தனை முறை
மாறி மாறி
நர்த்தனம்
ஆடியதோ!
இதில்
எந்தச் சிக்கலும்
எனக்கில்லை.
ஏனென்றால்
உன்னைப் பற்றி
நான் அறிந்து
கொள்வது
எல்லாமே
உன் மூலம்
மட்டுமே.
ஆண்களின்
அந்தரங்கம்
அடுத்தவரால்
எளிதாக
ஜலதரங்கம்
ஆக்கப்படுவது
தான்
பிரச்னையின்
ஆணி வேர்.
நம்பிக்கை
என்பது காதலின்
அழுத்தமான
நங்கூரம்.
அது மட்டுமே
காதலை
வாழ வைக்கும்.
நம்பிக்கை வை.
( கவிதையில் "என்" நானல்ல)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!