பட்ட மரம்
போலாச்சே
என் மனம்.
சந்தோஷ இலைகள்
அத்தனையுமுதிர்த்து.
ஒவ்வொரு முறை
முடிந்து போனேன்
என நான்
அலமந்து
போகும் போது
ஒற்றை இலை
துளிர்த்து
பிழைத்துக் கொள் என
உறுதியூட்டுகிறது.
என் மனம்
மலர்ந்ததும்
சந்தோஷச் சிறகுகள்
ஒவ்வொன்றாய்
இணைந்து கொள்கின்றன.
கிளை கொள்ளா
இலைகள்
பாரம் தாங்காமல்
தள்ளாடினாலும்
தாங்கிக் கொள்கிறேன்.
சந்தோஷ சிறகுகள்
எப்படியும் உதிர்ந்து
மனசு
பட்ட மரம் போலாகும்
என்றாலும்.
அணைத்துக் கொள்கிறேன்
அன்னையின்
வடிவாய்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!