24 November, 2025
காதலின் ஐந்தாம் நிலை
திருமணத்தோட காதலின் நிலைகள் முடிவதா நினைக்கிறதால தான் காதலும் திருமணத்தோட நின்றிடுது. திரைப்படங்களில் திருமணத்துக்குப் பின்னான காதலின் நிலையைக் காட்டி இருந்தா பல பேர் காதலின் பக்கமே போக மாட்டாங்க.
உண்மையான காதல்னா அது தூய்மையான அன்பினால் ஆனதா இருக்கணும். ஒருத்தருக்கு கஷ்டம் வந்தா அடுத்தவங்களுக்கு கண்ணீர் வரணும். சந்தோஷம் வரக் கூடாது. சந்தோஷம் எப்படி வரும்னு கேட்கிறீங்களா? வரும் ஈகோ இருந்தால் வரும்.
என்னமோ பெரிய ஆளுன்னு நினைச்சியே நல்லா கஷ்டப்படுன்னு மனசு சொன்னால் அது உண்மையான காதல் கிடையாது. இந்த ஈகோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வரும். உங்களுக்குத் தெரிந்த வெற்றிகரமான தம்பதியரை கவனிச்சுப் பாருங்க அவங்க நடுவில ஈகோ கொஞ்சம் கூட இருக்காது.
பல காதல் திருமணங்கள் தான் தோல்வியைத் தழுவுகின்றன. காரணம் அங்கே தான் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் வருகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்னை கவனிக்கப்பட வேண்டியது இருக்கிறது. இது முக்கியமா ஆண்கள் சிந்திக்க வேண்டியது. நம்மை சந்திக்க வீட்டுக்குத் தெரியாம வந்தாளே இப்போ நமக்குத் தெரியாம யாரையும் போய் பார்த்திடுவாளோ என்பது குடற் புழு போல் நெளிந்து கொண்டே இருக்கும்.
இதை அடியோடு நீக்கினால் தான் காதல் பிழைக்கும். இல்லையென்றால் திருமணம் ஆன பின் கூட காதல் சாகும். ஆனால் திருமணத்துக்கு முன்னான நிலைகளில் கூட தோல்விக்குப் பின் காதல் பிழைப்பதற்கான வாய்ப்பு உண்டு. திருமணத்துக்குப் பின் காதல் செத்தால் பாலூற்ற வேண்டியது தான். கதை முடிந்தது.
இந்த பதிவுகள் எழுதத் தொடங்கியதும் நண்பர்கள் "எந்த காலத்துல இருக்கீங்க. இப்பல்லாம் இந்தக் காதல் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. காமம் மட்டும் தான்" னு கூப்பிட்டு சொன்னாங்க. இருக்கட்டுமே நாம சொல்லித் தர்ரதை சொல்லித் தந்துகிட்டே இருப்போம். படிக்கும் போது படிக்கட்டும்.
(நிறைந்தது)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!