03 November, 2025
#காதலின் முதல் நிலை
காதலில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையாய் கடந்து, after crossing different levels of filteration எஞ்சி நிற்பதென்பது வெகு அபூர்வம். அதைப் புரிந்து கொண்டோம் என்றால் நாம் மறுதலிக்கப் படும் போது இயல்பாய் ஏற்றுக் கொள்வோம். ஆஸிட் ஊற்றுவது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது, உச்ச கட்டமாய் போய் கொலை செய்வது, போன்றவை நிகழாது.
முதல் நிலை.
காதலில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. நாம் நாளும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். ஆனால் திடீரென்று ஒருவரைப் பிடித்துப் போகிறது. அது அனேகமாக நாம் அடிக்கடி பார்ப்பவருள் ஒருவராக இருக்கலாம். நமக்குப் பிடிப்பவருக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 1) நம்மை அவர் சாதாரணமாகக் கடந்து போகலாம். 2) நம்மை அவருக்குப் பிடிக்காமல் போகலாம். 3) மூன்றாவதாக அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம்.்
முதல் நிலையில் கொஞ்ச நாள் காத்திருப்போம். அவர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வோம். அங்கேயும் மூன்று நிலைகள் வரும். 1) நம் முயற்சி வெற்றி பெறலாம். அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம்.
2) நம் கவன ஈர்ப்பு அவரின் வெறுப்புக்குள்ளாக்கலாம்.
3) அவர் அதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து போகலாம்.
நம் முக நூலை வைத்தே விளக்குகிறேன். எத்தனையோ பதிவுகளை நாளும் கடக்கிறோம். ஒரு சில ப்ரோஃபைல் படங்கள் பிடிக்கலாம். அவர்கள் பகிரும் புகைப்படங்கள் பிடிக்கலாம். அவர்கள் எழுதும் பதிவுகள் கூட பிடித்துப் போகலாம்.
நம்மை அவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக குறுஞ்செய்தி " கள்" அனுப்புகிறோம். அதை அவர்கள் just like that கடந்து போகலாம். அவர்களுக்குப் பிடிக்காமல் போய் ப்ளாக் செய்யலாம். அபூர்வமாக பிடித்தும் போகலாம்.
ஒருவரை நமக்கு முதல் பார்வையிலோ முயற்சிக்குப் பின்னோ பிடித்து, அவருக்கு நம்மைப் பிடித்துப் போவது முதல் நிலை. நாளை இரண்டாம் நிலையைப் பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!