Bio Data !!

09 June, 2026

45 வருடங்களுக்கு முன் ஒரு காட்சி அப்பா இல்லை. அம்மா மட்டுமே . மருத்துவமனையில் பிள்ளை பெற்றவள் ஓடி வந்து அம்மாவைப் பற்றிய படி காலில் விழுந்து அழ, அம்மா அழ, சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் அழ உள்ளே தொட்டிலில் குழந்தை தனியாக அழத் தொடங்கியது. பிள்ளை பெற்றவள் வேறு யாரும் இல்லை நானே தான். காதல் திருமணத்தால் கோபத்தில் இருந்த அம்மா பிள்ளை பெற்ற மூன்றாம் நாள் தான் பார்க்க வந்தார்கள். இன்று ஏன் இது நினைவுக்கு வருகிறது? யாருடைய ஆதரவும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது, தனி ஒருத்தியாய் ஆதரவில்லாமல் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுவது. தாய் இணைந்த கையோடு கணரிடமிருந்து அழ அழ பிரித்துச் செல்வது இதற்கெல்லாம் என்ன விலை? என் கணவரிடம் சொன்னார்கள் "அவளையும் குழந்தையையும் மட்டும் தான் அழைத்துச் செல்ல முடியும். விருப்பம் இல்லையென்றால் இங்கேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" இத்தனைக்கும் மேலே பணி புரிந்து இல்லற சுமைகளுக்கு தோள் கொடுக்கிறாளே அந்த வலிகளுக்கும் விலை நிர்ணயிக்க முடிந்தால் கணக்கு போடலாம். இல்லறத்தில் யார் அதிகம் செலவு செய்தது என. பெண்கள் ஆண்களின் குடும்பச் சுமைக்கு தோள் கொடுக்கத் தான் பணி புரிய வந்தார்கள். தனக்கான செலவுகளைத் தானே பார்த்துக் கொண்டு கணவனைக் கொஞ்சம் விடுவிக்கலாமே என நினைத்தார்கள். இன்றைய நிலைமை என்ன? இன்று எத்தனை பேருக்கு அது நினைவில் இருக்கிறது. என்னமோ மனசு தொய்ந்து இருக்கிறது. சொல்லணும்னு தோணுச்சு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!