Bio Data !!

01 November, 2011

என்ன நான் சொல்றது ?

ரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா. வழக்கமாக பெரிய கான்பெரென்ஸ் ஹாலில் வைத்து நிறைய பேர் பாராட்டி பேச, ஓய்வு பெறுபவரின் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள் அவர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்களா என்று வியப்பதுண்டு. ஆனால் ஒரு முறை மிக சிறந்த, ஆனால் குற்றம் செய்பவர்கள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரி ஓய்வு பெரும் போது, தாக்குதல் உணர்வோடு பேச  முடிவு எடுத்திருந்த  ஒருவரை தடுத்து அதை தவிர்ப்பது பெரும் பிரயத்தனமானதாகி விட்டது. அதில் இருந்து பிரிவு உபச்சார விழா ஜெனரல் மானேஜரின் அறையில் வைத்து நடப்பதாகி விட்டது. ஓய்வு பெறுபவர்களின் நெருங்கிய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சிறிய விழாவாகி விட்டது. 

எனது தோழி ஒருவரும் மற்றும் ஒருவரும் ஓய்வு பெரும் விழா நடந்தது. அந்த பெண்ணின் மகன் மகள் இருவரும் நல்ல நிலையில் படித்து மிகச் சிறப்பாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் அன்று நடந்த விழாவில் அவரும் அவர் கணவரும் மட்டும் தான் பங்கேற்றிருந்தார்கள். உடன் ஓய்வு பெற்றவர் வீட்டில் இருந்து அனைத்து உறவினர்களும். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு சோகம் படர்ந்ததை பார்த்ததும் 
"ஏம்ப்பா, பிள்ளைகள் யாரும் வரலியா?" என்றேன்.
"எல்லோரும் ரொம்ப பிஸியா இருக்காங்க " என்றார் இது போலியான சமாதானம் என்று எனக்கு புரிந்ததால் மீண்டும் தொடர்வார் என்று அமைதி காத்தேன். 
"L KG படிப்பை கூட P HD மாதிரி பீல் பண்ணி பேசுறவங்களை என்ன சொல்றது" என்றார்.

இது தான் உண்மை. தான் ஓய்வு பெரும் இன்று கூட தனது பணிகளை ஒதுக்கி வைத்து வர தான்  பெற்றவர்களுக்கு மனது வரவில்லையே என்ற ஆதங்கத்தை எந்த பெற்றோருக்கும்  குழந்தைகள் கொடுத்து விடக் கூடாது. பணிக்கு செல்லும் பெண்கள் அன்புக்கும், கடமைக்கும் பாசத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடு படுகிறார்கள் என்று அநேகம் பேருக்கு புரிவதில்லை. வெளிப்படையாக சொன்னால் "அப்போ வேலையை விட்டுட வேண்டியது தானே " என்று பதில் வரும். அதனால் வேதனைகளை உள்ளேயே அழுத்தி கொடுமைக்காரி போல நடமாட வேண்டியது தான். இந்த பெண்மணி கூட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தான் ஓயவி பெறுகிறார். "என் பேத்தி 'ஆச்சி எனக்கு 100  டேஸ் லீவ் நீ என் கூட வந்து இருக்க மாட்டியா?' ன்னு கேட்கும் போது பரிதவிச்சு போகுது. அதனால தான் வேலையை விட்டுட்டேன்." என்று தான் நன்றி உரை கூறும் போது கூறினார்.   

ஓய்வு பெறுவது என்பது டீன் வயது பிள்ளைகளை நடத்துவது போலவே கண்ணாடி மேல் நடப்பதை போன்றது. அவர்கள் தான் முக்கியமாக நடத்தப் படவில்லையோ என்று நினைக்க தொடங்குவார்கள். அவர்கள் ஓய்வு பெரும் அன்று வந்திருந்து எவ்வளவு சிறப்பாக அவர்களை மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு மகிழ்விக்க வேண்டும். அந்த ஒரு நாள் நடப்பு அதன் பின் என்ன நடந்தாலும் 'காலக் கொடுமை' மற்றபடி நல்ல பிள்ளை தான் என்று அவர்களை நினைக்க வைக்கும். 

அடிக்கடி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் வயசாகிக்கிட்டே போகுதோ என்னவோ?.  ஆதலினால் பிள்ளைகளே பெற்றவர்கள் ஓய்வு பெரும் அன்று என்ன வேலை இருந்தாலும் தூக்கி தூரப் போட்டு விட்டு அன்று அவர்களோடு குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு உரம் கொடுங்கள்.  நான் பணி பணி என்று இருந்து பல சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். ஏன் இன்று கூட இழந்து கொண்டு இருக்கிறேன். அதே தவறை மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லும் வார்த்தைகள் தான் இவை. ஏன் என்றால் பல பெரியவர்கள் ஓய்வு பெற்ற அன்று பிறர் பாராட்டி பேசிய சொற்களை மறுபடியும் மறுபடியும் கூறி சந்தோஷப் படுவதை பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகள் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டு பங்கு பெற்றதை பெருமையாய் சொல்வதை பார்த்திருக்கிறேன். காசா பணமா அந்த சந்தோஷத்தை நாம் நம் பெற்றவர்களுக்கு கொடுக்கலாமே ? என்ன நான் சொல்றது ?

24 comments:

  1. இனிய காலை வணக்கம் அக்கா,
    நலமா?

    காலங்கள் மாறுகையில் கல்விச் சுமை அதிகரிப்பால் பிள்ளைகள் தம் பெற்றோரின் சந்தோசங்களில் பங்கெடுக்கப் பின் நிற்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. தனககக தியாகம் பல செய்தவர்களை கடைசி காலத்தில் மனம் சந்தோஷப்படும் படி செய்வதில் தான் பெருமை இருக்கு!

    ReplyDelete
  3. பெற்றவர்களின் முக்கியமான நேரமான இதில் கலந்துகொள்ள இயலாத அளவு அப்படி என்ன வேலை என்று தான் கேட்க தோன்றுகிறது.

    என் அப்பா ஓய்வு பெற்ற அன்று நானும் கணவரும் சென்றிருந்தோம், எல்லோரும் அப்பாவை பாராட்டி பேசியதை கேட்ட போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. விழா முடிந்ததும் அவரது கை பிடித்து நாங்கள் இருவரும் அழைத்து சென்ற அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

    உங்களின் ஆதங்கம் புரிகிறது அக்கா. பெற்றோருக்கு இந்த சிறு சந்தோசத்தை கொடுப்பது நம் கடமை.

    ReplyDelete
  4. நாம் படும் கஷ்டங்கள் பிள்ளைகளுக்கு தெரியக் கூடாது என்று பெற்றவர்கள் மறைப்பதால் வரும் பிரச்சினை இது... நீங்கள் படும் கஷ்டங்களை கதை போல் சொல்லி விட்டு நகைப்பாய் முடித்து சூழ்நிலை இறுக்கத்தை குறைத்து வாழ்ந்து இருந்தால்... உங்கள் பிள்ளைகள் உங்கள் கஷ்ட காலங்களில் துணை நிற்ப்பார்கள்... அவன் இன்னும் குழந்தை, அவனுக்கு இதெல்லாம் எதுக்கு என்று பிள்ளைகளை நம்பாமல் வாழ்ந்து விட்டு அவன் கை கொடுக்க மாட்டேன் என்பது எங்கு தப்பு என்று நீங்களே யோசியுங்கள்

    ReplyDelete
  5. வயதானால் பெற்றோரை மதிக்காத, பொருட்ப்படுத்தாத சிலர் இந்த சமூகத்தில் இருப்பதை நினைத்தால் கொடுமையாகதான் இருக்கிறது, இதை படிக்கும் சிலராவது அதை புரிந்து கொண்டு பெற்றோரோடு பாசமாக இருக்கச்செய்யும் அறிவுரை இந்த பதிவு மிக்க நன்றி...

    ReplyDelete
  6. உடல் நலமா நிரூபன். படிப்பு இன்று அனைத்து உணர்வுகளையும் பின் தள்ளி விட்டது

    ReplyDelete
  7. நன்றி ஆமீனா. சென்னை வருகிறேன் உங்களை சந்தித்தால் மகிழ்ச்சி அடைவேன்

    ReplyDelete
  8. இது வரை இதை இவ்வளவு முக்கியம் என்று எண்ணாத ஒரு சிலர் யோசிக்கத் தொடங்கினால் நல்லது தானே கௌசல்யா ?

    ReplyDelete
  9. அன்பை காட்டுவதை தவிர உங்கள்ளளவுக்கு சிந்திக்க தெரிவதில்லையே சூர்யாஜீவா அன்றைய பெற்றவர்க்கு

    ReplyDelete
  10. நன்றி மனோ. இப்பொழுது உங்கள் கலாய்ப்பு எந்த அளவில் இருக்கிறது

    ReplyDelete
  11. உங்கள் அனுபவங்கள் மற்றவருக்கும் உதவும். பகிர்ந்தமைக்கு நன்றி.. பாராட்டுகள்!!

    ReplyDelete
  12. சென்னை வருகிறேன் "

    வாவ்.. வெல்கம்...

    ”வயசாகிக்கிட்டே போகுதோ என்னவோ?.”

    கட்டுரைகளில் முதிர்ச்சியும், கதைகளில் இளமையையும் கொண்டு வந்து விடும் எழுத்து பாணி உங்கள் சொத்து என்பதை நாங்கள் அறிவோம்

    ReplyDelete
  13. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக தங்கம்பழனி. கண்டிப்பாக உங்கள் வலையில் மீன் பிடிக்கிறேன்

    ReplyDelete
  14. நன்றி பார்வையாளன். ஆறாம் தேதி காலை நெல்லையில் சென்னை வருகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க முயல்கிறேன்

    ReplyDelete
  15. அன்பு சகோதரி,

    இன்றுதான் தங்கள் வலைத்தளம் பார்த்தேன்.
    யதார்த்தமான விடையங்களை அழகாக
    பகிர்ந்திருக்கிறீர்கள்,
    இன்றுமுதல் தொடர்கிறேன்.....

    வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காகவே ஓடியோடி
    வேலைசெய்து அவர்களின் வருங்காலம் சுகமாக இருக்கவேண்டும்
    என நினைக்கும் பெற்றோருக்கு இந்த சுகத்தையாவது பிள்ளைகள்
    கொடுக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையமே.

    அந்த பிள்ளைகளும் இன்று பெற்றோரை அவர்கள் பிள்ளைகளுக்காய்...
    காலச் சக்கரம் சுழல்கிறது..

    http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post.html

    ReplyDelete
  16. ஆங்கிலத்தில் மட்டுமே பதிவெழுதி ஓய்வு பெறாமலே தமிழையும் சற்று எட்டிப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் நெத்தலி மீன் கொளம்பு. சும்மா விடுவேனா.. எல்லாவற்றையும் பொறுமையாக வாசித்தேன். நல்ல அறிவுரை. நல்ல தகவல்கள்..

    இந்த விசயத்தைப் பற்றிப் பேச ஒரு விதத்தில் எனக்கு அருகதை இல்லை. இருந்தாலும் நாரதன் கேட்கவா போகிறான். விதைத்து, அறுவடை செய்து, அரைத்து, சுட்டு, தோசையை சாப்பிட்டதும் அதன் வாழ்க்கை முடிந்து விடும். எங்களது ஆயுள் காலம் அதனை விட கொஞ்சம் அதிகம் என்பதால், தோசைக்கு ஒரு சிறிய ஆயுலே என்ற எண்ணம தோன்றுகிறது. எங்களுக்கும் ஒரு சிறிய ஆயுள் காலமே.

    கொண்டு வந்த வாழ்க்கை எங்களை எங்கு கொண்டுபோக எத்தநிக்குதோ, அங்கு எங்கள் பாதங்களை திருப்பி, காலத்தின் கையில் ஈஸ்காலடோர் ஐ கொடுத்து விடுவோம்.

    பெற்றோர்கள் என்ற வகையில் நல்ல பிள்ளைகளை வளர்த்து விடுவது எமது கடமை. அவர்களுக்கு நல்ல அறிவைக் கொடுப்பது அதை விடப் பெரிய பொறுப்பு. பிள்ளைகளை எவ்வாறு நாம் வளர்க்கிறோம் என்பதில்தான் அவர்கள் எங்களோடு எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது முடிவாகும். அறிவைக் கொடுத்து, உடுக்கக் கொடுத்து, நல்ல உணவு கொடுத்து, அன்பைக் கொடுத்து, பொறுப்பையும், எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பையும் மறந்துவிட்டால், பிள்ளைகள் இப்படித்தான்.

    கடவுள் மனிதனைப் படைத்து, அதில் ஆண், பெண் என்று இரு பிரிவைப் படைத்துள்ளான். ஏன்? பெண்களுக்கென்று சில இயல்புகள்.. ஆண்களுக்கென்று சில இயல்புகள்...
    பெண்களுக்கு, இறக்க குணம், குழந்தைப் பேரு, மென்மையான உடல், வெட்கம், பயம் போன்ற குணங்களையும் ஆண்களுக்கு எதிர்மாறான இயல்புகளையும் கொடுத்தது ஏன்?

    பெண்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவும், கணவனுக்கு நல்ல மனைவியாகவும் இருந்தாலே இந்தப் பிரச்சினை வர வாய்ப்பு குறைவு. முழு நாளும் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து காரியாலயத்தில் வேலை செய்யும் அம்மா, எப்பொழுது அந்தப் பிள்ளைகளுக்கு நல்ல விடயங்களை சொல்லிக் கொடுப்பது? எப்பொழுது பாசமாக நடப்பது? எப்படி அந்தப் பிள்ளைகள் அம்மாவின் பிரிவு உபசார விழாவுக்கு வருவது?

    எல்லா எலிகளையும் கொன்றுவிட்டால், எலியால் பரவும் நோய்களே இல்லாமல் போய்விடும். ஆனால், எலிகல் உண்ணும சில கிருமிகள் எண்ணிலடங்காமல் அதிகரித்து மனித குலத்தையே அழித்துவிடும். இது உணவுச்சங்கிலி. வாழ்க்கையும் அப்படித்தான். மாற்றங்களின் தாக்கங்கள் மெதுவாகவே வரும். வந்தால், எல்லாமே இல்லாமல் போய்விடும்.

    இது எனது சிந்தனைக்குப் பட்டது. நீங்களும் நண்பர்களும் நல்ல கருத்துக்களைப் பரிமாரிக்கொண்டால், நான் நிச்சயமாக அவற்றுக்கு மதிப்புக் கொடுப்பேன்..
    நன்றி...

    ReplyDelete
  17. நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள் மேடம். வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரை உதாசீனப்படுத்துவது பல இடங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் நீங்கள் சொல்வது போல் வேலைக்குப் போகும் பெற்றோராய் இருந்துவிட்டால் அங்கு பாதிப்பு மிக அதிகம். கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? நான் பள்ளி செல்லும்போது எந்தவிழாவுக்காவது அழைத்தால் அவர்கள் வந்திருக்கிறார்களா? வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். இப்போது ஓய்வு பெறும்போது நாங்கள் வரவில்லையென்று குறைப்பட்டால் அது நியாயமா? என்பார்கள். குழந்தைகளின் நலனுக்காக வேலைக்குப் போனாலும் அதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பெற்றோர்தான் முக்கியமாக தாய் எடுத்துச் சொல்லவேண்டும். நல்ல புரிதலுணர்வு இருந்தாலே இதுபோன்ற மனவருத்தங்கள் தவிர்க்கக் கூடியவையாகிவிடும். இன்றைய இளம்பெற்றோருக்கும் இது ஒரு பாடம்.

    ReplyDelete
  18. நன்றி மகேந்திரன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. காலச் சக்கரம் புரிந்தால் கஷ்டங்கள் விலகிப் போகும். தொடருங்கள் நன்றி

    ReplyDelete
  19. jiff 0777 தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    உங்கள் எழுத்து நடை ரசிக்கும் விதமாய் இருக்கிறது
    நாம் பகிர பல விஷயங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  20. நன்றி கீதா. நான் அடிக்கடி சொல்வது போல எந்த விஷயமும் திடீரென ஒருவரிடம் மாற்றங்கள் கொண்டு வரமுடியாது. ஆதலினால் இளம் பெற்றோர்களே இப்பொழுதே தொடங்குங்கள்

    ReplyDelete
  21. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  22. கண்டிப்பாக, உலக மகா ரசிகன் தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  23. தேவையான அறிவுரைதான்.

    ReplyDelete
  24. நன்றி Food மாலையில் சந்திப்போம்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!