Bio Data !!

30 November, 2011

எண்ணச் சிதறல்கள் !!


***இன்று என் அம்மா எழுபத்தைந்து ஆண்டுகளை முடித்து வெற்றிகரமான எழுபத்தியாராம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை கூறி விட்டேன்.பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேத்தியின் மகன் என்று குடும்ப மரம் விழுது பரப்பி இருப்பதில் ஆக சந்தோஷத்தில் இருக்கிறார்கள், முப்பத்தி எட்டாம் வயதில் விதவையான என் தாய். அவர்களை அதே சந்தோஷத்தோடு நூறு வயது வரை கொண்டு செல்ல அந்த இறைவன் உதவ வேண்டும். கடந்த வருடம் எங்கள் அம்மாவை ஒரு பேட்டி கண்டு பதிவு போட்டேன். அதை பார்க்க
***இப்போ இருக்கிற கிளைமேட்டில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து அம்மாவுக்கு ஒரு பரிசுப் பொருளாக ஒரு சேலையையும் எடுத்துக் கொண்டு (வழக்கமான முறைப்படி எல்லோரும் பணியில் இருக்கும் காரணத்தால் விழா தனியாக விடுமுறை தினத்தன்று) காரை ஓட்டிக் கொண்டு சர்ச்சுக்கு செல்லும் போது உலகமே சொர்க்கமாய் இருந்தது. அந்த நேரத்தில் வேக வேகமாய் நடை பயில்பவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள் தான். அதிலும் ஒருவர் இரு கைகளையும் வேக வேகமாக வீசி நடந்து கொண்டிருந்தார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவருடன் கொஞ்ச தூரம் அப்படியே நடக்க ஆசையாக இருந்தது.  

***இப்பொழுது எங்கள் ஊரில் சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. சவேரியாரை பற்றி ஒரு கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன். அது உங்களுக்காக. சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கப்பலில் செல்கிறார் சவேரியார். அவருடன் செல்கிறார் அன்டோனியோ. செல்லும் வழியிலேயே உடல் நலம் குன்றி இறந்து போகிறார். அருகில் உள்ள நாட்டில் அவரை புதைத்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது நாட்களுக்குப் பின் திரும்பி அதே இடம் வரும் போது என்ன தோன்றியதோ அன்டோனியோ இறங்கி சென்று புதைத்த இடத்தின் கல்லை அகற்றி பார்க்கிறார்.

 இறந்த சவேரியாரின் உடல் அப்படியே இருக்கிறது. கப்பலின் கேப்டனிடம் காட்டுவதற்காக சிறிது சதைப் பகுதியை அறுத்து எடுக்கிறார். ரத்தம் வழியத் தொடங்குகிறது. அதை கொண்டு காட்டியதும்  பிரமித்த கேப்டன் அவர் உடலை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கிறார். புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்த பிறகு அவரது உடல் கோவாவுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அவரது அழியாத உடல் இன்னும் இருக்கிறது கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக.

***"பாலை" என்னும் படத்தை எடுத்து ஒரு இயக்குனர் பட்டுக் கொண்டிருக்கும் பாடுகளை கண்களில் நீர் வர அவர் சொல்லும் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. கடும் முயற்சி எடுத்து எடுக்கப் பட்ட படமாகத் தெரிகிறது. சில திரை அரங்குகளில் வெளியிடப் பட்ட இரண்டே நாட்களில் அதுவும் கூட்டம் அதிகமாக வரக் கூடிய ஞாயிறு அன்று படத்தை தூக்கி விட்ட கொடுமையை கண்களில் நீர் வர விவரிக்கிறார். வேதனையாக இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஆவேசமாக "TODAY THE GOVERNMENT IS RULED BY RICH BUSINESS PEOPLE" என்று கூறியது நினைவுக்கு வந்தது. இன்று நம்மை ஆள்வது பணக்காரர்கள் தானா?

***இன்று ஒரு அதிசயம் நடந்தது. எனது அலைபேசியில் ஒரு கால் சென்னையில் இருந்து. " ஹலோ ! RUFI  நான் மாலதி பேசுறேன்."
எனக்கு உடனே நினைவுக்கு வந்தது இடுப்பு வரை மடித்துக் கட்டிய தலைப் பின்னலுடன், சராசரிக்கும் குறைவான உயரத்தில் சாந்தமாக, என்னுடன் பள்ளியில் படித்த தோழி , அவள் எங்கே அழைக்கப் போகிறாள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது தொடர்பு விட்டு போய். "எந்த மாலதி"
"ஹேய் ! நான் தான்ப்பா உன்கூட ஸ்கூல் ல சேர்ந்து படிச்சேனே"
அட! அதே மாலதி! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். 
சென்னையில் தரமணியில் எங்கள் அலுவலகம் ஒன்றிற்கு சென்டிருக்கிறாள். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று என்னைப் பற்றி ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் தனக்கு தெரியாது என்று சொல்லி அங்கே நெல்லையில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார். ஊப்ஸ்!! அந்த பெண்ணுக்கு என் தொலை பேசி எண் தெரியும் என்பதால் உடனே தொடர்பு கிடைத்து விட்டது. என்ன ஒரு COMMUNICATION  DEPARTMENT !    பள்ளி நண்பர்கள் என்றாலே தனி அன்பு தான். அவள் பல ஆண்டுகள் டென்டிஸ்ட் ஆக பணி புரிந்து இன்று பணி விடுத்து அழகான இல்லத் தலைவியாக இருக்கிறாளாம். என் தங்கைகள் இருவரையும் பெயர் சொல்லி விசாரித்தாள். ஆச்சரியப்பட்டேன். இன்று உண்மையிலேயே மிகச் சிறந்த நாள் தான்.
I AM HAPPY TO THE EXTREME MALATHI !!

இன்னும் இதே போல் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வர வேண்டிய தோழி ஒருத்தி இருக்கிறாள். பெயர் செந்தமிழ்செல்வி (அழகான பெயர் ) அந்தப் பெயருக்காகவே அவளை ரொம்ப பிடிக்கும். அவள் கவிதையும் நான் கவிதை என்ற பெயரில் எதையோவும் எழுதுவோம். கல்லூரி கடைசி தினத்தன்று அவளும் நானும் சேர்ந்து கவிதை எழுதி மாற்றி மாற்றி வாசித்தோம். கண்ணதாசனும் எதோ ஒரு கடை நிலை மனிதனும் மாறி மாறி எழுதியதைப் போன்று இருந்தது. எங்கே இருக்கிறாய் செல்வி?

25 comments:

  1. அன்னைக்கு வாழ்த்துக்கள் சகோ...மிக அதிக இடைவெளி விட்டு அதுவும் பள்ளி நண்பியின் குரல் கேற்ப்பது சொல்ல முடியாத மகிழ்ச்சி...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. >>அம்மாவின் 75 வது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்.. மாலதி ஃபோட்டோவையும் போடவும் ஹி ஹி

    ReplyDelete
  3. முதலில் உங்களுடைய அம்மாவுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய பள்ளித்தோழி திரும்ப கிடைத்ததிலும் மிக்க மகிழ்ச்சி. அதுவும் உங்க கம்யூனிகேசன் டிபார்ட்மெண்ட் வழியாக.

    ReplyDelete
  4. வணக்கம் அக்கா,
    உங்கள் அம்மா இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

    பிரிந்த தோழிகள் அலைபேசி ஊடாக இணைந்து கொண்டது மகிழ்சியளிக்கிறது.
    சிறு பட்ஜெட் படங்களைப் பணக்கார முதலைகள் விழுங்குவது வேதனையான விடயம்,
    நீங்கள் சொல்வது போல அரசு தான் நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
  5. சவேரியார் கோவில் விடயம், கோவாலில் உள்ள சமாதி பற்றிய சேதி மெய் சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete
  6. நன்றி விக்கி , உண்மையில் அந்த சந்தோஷம் அளவிட முடியாது

    ReplyDelete
  7. போட்டோ மேனியா வியாதி வந்திடப் போகுது சிபி.

    ReplyDelete
  8. நன்றி விஜயன், மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கிறதே, உணவு உலகம் பார்த்தீங்களா?

    ReplyDelete
  9. நன்றி நிரூபன் உங்கள் பதிவில் இன்று காலை ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன் பாருங்க

    ReplyDelete
  10. அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் தோழி திரும்ப கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள், விரைவில் செந்தமிழ் செல்வியும் கிடைத்து விட பிரார்த்திப்போம்...!!!

    ReplyDelete
  11. அம்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சமயத்ல இந்த செல்போன் எவ்வளவு உபயோகமா இருக்கு. பழைய நண்பர்களைத்தொடர்பு கொள்வது எவ்வளவு சந்தோஷமான விஷயம்.

    ReplyDelete
  13. நன்றி மனோ. உங்கள் வாய் முகூர்த்தம் செல்வியும் கிடைத்து விட வேண்டும்.

    ReplyDelete
  14. ஆமாம் லக்ஷ்மி அம்மா எந்த ஒரு prejudise உம் இல்லாத பள்ளி நண்பர்களை மனம் கொண்டாடத்தான் செய்கிறது

    ReplyDelete
  15. தங்கள் தாயாருக்கு எனது மனமார்ந்த
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    பேத்தி உடன் மேட்சிங்காக சேலை அணிந்துகொண்டு
    இருக்கிற காட்சி மனத்தை கொள்ளை கொண்டது
    நாட்குறிப்பு போல அமைந்த தங்கள் பதிவு
    மிகுந்த சுவாரஸ்யம்
    தொடர்ந்து தர வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  16. தங்கள் அம்மாக்கு எனது மனமார்ந்த
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... மேட்சிங் நல்லா இருக்கு...

    ReplyDelete
  17. நன்றி ரமணி சார், இன்னும் பல ஆண்டுகள் அம்மா நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  18. நன்றி சினேகிதி , அதில் ஒரு சிறப்பு ரெண்டும் ஒரே நேரம் எடுக்கப்பட்ட சாரி அல்ல

    ReplyDelete
  19. பவள விழா கண்ட பாட்டியம்மாவிற்கு வணக்கங்களும்,வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  20. நன்றி துபாய் ராஜா . நாட்லேக்கு போயோ ?

    ReplyDelete
  21. அது யாரப்பா anonymous பாட்டியின் ரசிகன்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!